20 May 2016

மாத்திரை மூலமா மனைவியிடம் கேட்பது :)

 தேர்தல் முடிவால்  வந்த நிம்மதி  :)    
              ''மூணு நாளா  தூக்கம் வராம தவிச்சுகிட்டிருந்த உனக்கு ,நேற்றுதான் நல்லாத் தூக்கம் வந்ததா ,எப்படி ?''
             ''டாஸ்மாக்கை  உடனே இழுத்து மூட மாட்டாங்க என்ற  நம்பிக்கை வந்திருச்சே !''
சேர்த்து வைச்சு என்ன புண்ணியம் :)           
           ''செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரிதான் உங்க அப்பாவுமா ,எப்படி ?''
           ''அவரோட உயில் அமுலுக்கு வர ,அவரே விஷம் குடிச்சு உதவி இருக்காரே !''
மாத்திரை மூலமா மனைவியிடம் கேட்பது  :)
         '' மாத்திரையைச் சாப்பிடலாமான்னு  என்கிட்டே ஏன் கேட்கிறீங்க ?''
        ''அரை மணி நேரத்திலே சாப்பாடு  ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
மனுஷன் இப்படி செய்யலாமா :)
     ''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை  உங்க நாயே ஏன் கடிச்சது ?''
    ''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !''
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !
ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

22 comments:

  1. டாஸ்மாக் கடைய மூட விட்டுடுவோமா...? வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... எல்லாம் நம்ம கையிலதானே இருக்கு...நல்ல வேளை மதுவிலக்கு... விலக்கியாச்சு...!

    தந்தை மகற்காற்றிய நன்றி...நின்று கொன்ற தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே...!

    மாத்திரை பேரச் சொல்லி ஏமாத்தாதிங்க... நீங்க என்ன சாப்பாட்டு ராமனா...?

    நான் நாலு நாளா சாப்பிடலேங்கிறதும்... நீ சோறு போடலங்கிறதும் பாவம் அந்த நாலு கால் நாய்க்குத் தெரியுமா...?

    மண்ணின் மீது மனிதனுக்காசை... மனிதன் மீது மண்ணுக்காசை...!

    த.ம. 1







    ReplyDelete
    Replies
    1. இனி ஐந்து வருஷத்துக்கு கவலையில்லை :)

      தானாகவே தெய்வமான தெய்வமே நன்றி :)

      மாத்திரைன்னா நீங்க எதை நினைச்சீங்க :)

      நாய்க்கு எப்படி ரொட்டியும் சோறும் கிடைச்சது :)

      மண்தானே கடைசியில் ஜெயிக்கிறது :)

      Delete
  2. ர்சித்தேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சீனர்களும் சிங்களர்களும் திருந்தாததை ரசிக்க முடியுதா :)

      Delete
  3. வேறு வழி மனைவியிடம் கேட்டுத்தானே ஆகவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. கேட்டாலும் கோபம் வருதே :)

      Delete
  4. Replies
    1. துபாய் நண்பர்களை சந்தித்து விட்டீர்களா:)

      Delete
  5. போராடி ப்ளாக் ஓபன் பண்ணி வந்து ரசித்திருக்கிறேன் நண்பரே... தம வாக்குமிட்டு விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,என் தளம் செல்லில் சரியாய் தெரிகிறதா ?முன்பு தொழில் நுணுக்கம் தெரியாமல் தவறு செய்து கொண்டிருந்தேன் :)

      Delete
    2. செல்லில் சரியாகத் தெரிகிறது. சற்றே சிறிய அளவில் தெரியும். பின்னூட்டம் இட்டு விட்டுத்தான் வாக்களிக்கச் செல்வேன். அப்போது திறக்க நேரமாகும். பின்னர் வாக்களிப்பேன்.

      Delete
    3. கனிவான தகவலுக்கு நன்றி ஜி !

      Delete
  6. எப்படியோ தமிழ்’குடி’மகன்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் போல! நல்ல சிரிப்பு வெடிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. 'குடி'மகன்கள் மனது வைக்காமல் காரியம் ஆகாது போலிருக்கே :)

      Delete
  7. டாஸ்மாக்கை மூடுறதா மூச்!!

    நாய் பிஸ்கட்டைத் தின்னுப்பார்த்தாரா உவ்வே...

    சீனர்களானால் என்ன சிங்களர்களானால் என்ன எல்லாரும் மண்ணாசை மனதர்கள்தானே...புத்தராகிட முடியுமா ஜி

    ReplyDelete
    Replies
    1. வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கமுடியுமா :)

      அவருக்கு என்ன கஷ்டமோ :)

      மனிதர்கள் எப்போதான் புனிதர்களாவது :)

      Delete
  8. தேர்தல் முடிவால்  வந்த நிம்மதி  :)   

    நல்ல நிம்மதிதான்...

    ReplyDelete
    Replies
    1. 'குடி'மகன்கள் சந்தோஷத்தில் டாஸ்மாக் விற்பனை கூடும் என எதிர்பார்க்கலாம் :)

      Delete
  9. //பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை உங்க நாயே ஏன் கடிச்சது ?''
    ''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !''// செம்ம http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. நாய்ப் பய இப்படி செய்யலாமா :)

      Delete
  10. Replies
    1. மனுஷன் மாத்திரை சாப்பிடக் கூட எதிர்ப்பார்க்க வேண்டியிருப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete