19 May 2016

வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)

வயதானவர்களுக்கு  வாழ்வாதாரம் அதுதானே :)             
                  ''வங்கி டெபாசிட்  interest யை  மூத்த குடிமக்களுக்கு  மட்டுமாவது  இன்னும் அதிகரித்தால் நல்லதா ,ஏன் ?''
                   ''வாழணுங்கிற  interest அவர்களுக்கு  கூடுமே !''
ரசித்து படித்தால் போதாது ,ருசித்துப் பாருங்கள் :)
               ''அந்த ஸ்வீட் கடைக் காரர் வித்தியாசமா  விளம்பரம் பண்ணி இருக்காரா ,எப்படி ?''
                ''பாலியல் பலாத்காரம் என்றால் யாருக்கும் பிடிக்காது ,எங்கள் கடை 'பாலின பலகாரம்' யாருக்குத் தான் பிடிக்காதுன்னுதான் !''
வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)
           ''அவர் மொடாக் குடிகாரராய் இருப்பார் போலிருக்கா, ஏன்  ?''            
           ''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே உச்சரிக்கிறாரே !''

A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை :)
       ''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
        ''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
        ''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''
எங்குமுள்ள ஓட்டைகள் :)
          ஒட்டடை சொல்லும் உண்மை ...
          ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
         ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !

21 comments:

  1. //வாழணுங்கிற interest அவர்களுக்கு கூடுமே !''// ஜீவன் சுரக்ஷா வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்

    ReplyDelete
    Replies
    1. எது லாபங்கிறதை பெருசுங்க பார்த்துக்கட்டும் !வாங்க, நாம மரம் நடுவோம் ஸ்ரீ மலையப்பன்:)

      Delete
  2. இங்க வாழ interest இல்லங்கிறதுனாலதான் வெளிநாட்டுல வாழ interest வந்திடுச்சு... ஒங்களோட ‘மல்லு’க்கட்ட முடியல... சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைச்ச இங்க ‘விஜய்’-அம் செய்து வாழ interest வரும்...! நானும் மூத்த குடிமகன்தானே...?!

    பாலின சேர்க்கை இதுதானோ...?!

    மாத்தி யோசிக்க விடமாட்டிங்களே...! கலா கலா கலக்கலா... சகல...‘கலா’ வல்லவன்...!

    ‘தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே தாய் மண்ணே வணக்கம்...வந்தே மாதரம் வந்தே மாதரம்...’ இனி சுணக்கத்திற்கு வழியில்லை...!

    ‘ஓட்டை...’ மனம்தான் கேட்க மறுக்கிறது !

    த.ம. 1








    ReplyDelete
    Replies
    1. ஊரான் சொத்தை தன் சொத்தாய் நினைத்தால் எப்படி வாழ இண்டரெஸ்ட் வரும் :)

      பாலின பதார்த்த சேர்க்கை என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

      கலக்கலுக்கு ஏன் மாத்தி யோசிக்கணும் :)

      சொன்னால் போதும் சுணக்கம் ஓடிவிடுமா:)

      வோட்டுன்னா கூட காசு கொடுத்து வாங்கி விடலாம் :)

      Delete
  3. அருமை. வல்லவன் ஆயுதம் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தெர்மகோல் குடை அருமைதானே :)

      Delete
  4. உண்மையாவே மூத்த குடிமக்களுக்கு ௦0.5 சதவீதம் அத்கமாத்தான் குடுக்கறோம்னு வங்கிகள் விளம்பரம் செய்கின்றன

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அரை சதவீதம் கொடுக்கலாமே :)

      Delete
  5. ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தெர்மகோல் குடை அருமைதானே :)

      Delete
  6. சிரிக்க வைத்த சிரிப்புக்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நொடிக்கதைகளை இப்போதான் படித்து விட்டு வந்தேன் வாழ்த்துக்கள் :)

      Delete
  7. படத்தை பார்த்தாலே தெரிகிறாரே அந்த வல்லவன்....!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த வள்ளவனைக் கண்டுகொண்ட நீங்கள்தான் உண்மையில் வல்லவன் (ர்:)

      Delete
  8. பாலின பலகாரம் ருசியாய் இருக்கா :)

    ReplyDelete
  9. பாலினம் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாலினம் எப்போதும் காஸ்ட்லி என்றாலும் சூப்பர்தானே :)

      Delete
  10. ஹஹஹ வல்லவனுக்குப் ஃபுல்லும்.....ரகுமானுக்குப் பிடிக்காத வார்த்தை அனைத்தும் ரசித்தோம் ஜி..

    அந்தப் படம் உட்பட...

    ReplyDelete
    Replies
    1. கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு வல்லவன் இருப்பது சாலப் பொருத்தமே :)

      Delete
  11. Replies
    1. அந்த மாதிரி குடை செய்யலாம் தானே :)

      Delete