24 May 2016

கணவனின் முணுமுணுப்பும் மனைவி காதில் விழுமா :)

இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)  
       ''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி  மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''
       ''படிப் படியா  மூடுறதா இருக்காங்களாம் !''
கணவனின் முணுமுணுப்பும் மனைவி காதில் விழுமா  :)
        ''பையன்கிட்டே ,என்னைப் பற்றி என்ன சொல்லிக் கிட்டிருந்தீங்க  ?''
        ''பாம்புக் காதுன்னா என்னான்னு  கேட்டான் ...அதான் !''
வராக் கடன் என்பது 'மல்லையா 'க்களுக்கு மட்டும்தானா :)
                ''நான்தான் இந்த பாங்க் மேனேஜர் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
                ''வராக்கடன் கணக்கில் பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
மாமூல் படுத்தும் பாடு :)
             ''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''
            '' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்களாமே !''
அதிகாலையில்  எழுந்த  சந்தேகம் :)
விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

19 comments:

  1. படிப்படியா மூடிடுவாங்களா...?
    பறவைகளின் கானம்...

    ரசித்தேன் நண்பரே ...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு 'இன்ச்'சா ஷட்டரை இறக்குவாங்க :)

      அமுத கானம் அதுதானே :)

      Delete
  2. அருமை ஐயா.வாராக்கடனின் கடனா..???சிந்திக்க தான் வேண்டும் ஐயா.உண்மையே போலீஸ் என்றால் திருடர்களுக்கு பயமே இல்லை ஐயா.அருமை நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே பல இல்லையாக்கள் இருக்கையில் ,வங்கியினால் சில மல்லையாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே :)
      கறுப்பாடுகள் காவல் துறையிலும் புகுந்து விட்டார்களே :)

      Delete
  3. அதுக்குள்ளே பாதி மூடிட்டாங்களா... இன்ச் இன்சா இல்ல அளவை ஏத்தணும்?



    பாம்புக்குக் காது இருக்கா பாஸ்?



    இப்படிக் கேட்டுட்டா அது தராக் கடன் ஆகிவிடும்!



    என்ன பாஸ்... புதுசாச் சொல்றீங்க... பழைய விஷயமாச்சே அது...



    ஆஹா....!

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமானால் ,தினசரி ஷட்டரரை இத்தனை இன்ச் தான் திறக்கணும் என்று உத்தரரவிடச் சொல்லலாமா :)

      கேட்டு பார்த்தேன் பாம்பின் காதில் ஏறவில்லை :)

      அப்படி ஒரு கணக்கையும் ஆரம்பித்து விட வேண்டியதுதானே :)

      அமுலுக்கு வந்தே பல வருஷமாச்சா :)

      காதிலே கீச்சொலி கேட்குதா :)

      Delete
  4. படி... காலையில் பன்னிரண்டு வரை படி - கடும்பகல் படி மாலை இரவு பொருள்படும்படி கல்லாதவர் வாழ்வதெப்படி ? படி... படி...யாக மூடுவதிப்படி...!

    பாம்புக்கேது காது... கேக்காதுன்னு சொன்னது ஒனக்கு கேக்கலையா...?

    வாராது வந்த மா ‘மணி....’!

    வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் போனால் போலிஸ்க்கு தகவல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார்கள் அல்லவா...? நீ பாதி... நான் பாதி...!

    அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்... அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் தொடரட்டுமே :)

      அதானே உனக்கும் பாம்பு காதா :)

      தராது ஏமாற்றியவர் மாமனிதர் ,mp வேறு :)

      அது இதுக்குதானா :)

      அதென்ன ஓலை ,அந்த காலத்திலேயே இருக்கிறாங்களா :)

      Delete
  5. Replies
    1. எலெக்ட்ரானிக்ஸ் கம்மல் அருமைதானே :)

      Delete
  6. 01. ஹாஹாஹா சந்தடி சாக்குல குத்துறீங்களே.... ஜி
    02. கேட்டுருச்சே...
    03. தொடக்கமே சரியில்லையே...
    04. எல்லாம் ஒரு கணக்குதான்
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. டாஸ்மாக் டார்கெட்டைக் குறைத்தால் தவிர பிரயோசனம் இல்லை :)
      கேட்காமல் போகாதே :)
      தொடக்கம் சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்குமா :)
      மாமூலான கணக்குதானா :)
      இன்னிசை இனிமைதானே :)

      Delete
  7. படிப்படியா மூடுறதுக்கு புதுவிளக்கம் சிற(ரி)ப்பு! பாம்புக்காதை படத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சரிதானே :)

      Delete
  8. பாம்புக்கு காதே இல்லேகின்றதை படத்தை பார்த்து தெரிஞ்கிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. காதுக்கு பாம்படம் உண்டே:)

      Delete
  9. Replies
    1. வெங்கட் ஜி இன்றைக்கு தேதி 27 ,மூன்று நாள் தாமதமாய் வண்டியை ஒட்டிக்கிட்டு இருக்கீங்களே :)

      Delete