9 May 2016

மனைவியின் தூக்கத்தை இப்படியா கெடுப்பது :)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க உதவுவது 'பால்மானி' :)        
                  ''பால் வியாபாரியான உங்களுக்கு ,அரசு என்ன உதவி செய்யணும் ?''
               ''பால் மானியம் தர வேண்டாம் ,நாங்க விற்கிறப் பாலை  சுகாதார அலுவலர் பால்மானியால் செக் செய்யாமல் இருந்தாலே  போதும் !''
வயதானால் இப்படியெல்லாம் ஆகுமோ :)
           ''என்னடா சொல்றே ,உங்க அப்பாவுக்கு கண்ணும் மூக்கும் அவுட்டா ?''
           ''ஆமா ,பற்பசைக்குப் பதிலா கொசு விரட்டிக் கிரீமினால் பல் தேய்ச்சிட்டு ,நுரையே வரலேங்கிறாரே !''
மனைவியின்  தூக்கத்தை இப்படியா  கெடுப்பது  :)
         ''என்னங்க ,இந்த ராத்திரி நேரத்திலே திடீர்னு பீரோ  கண்ணாடி நொறுங்கி விழுதே...அய்யய்யோ...அய்யய்யோ ....!''
        ''சும்மா கத்தாதே ,நாய் துரத்திகிட்டு வர்ற மாதிரி கனவு வந்தது ,நான்தான் கையிலே கிடைச்சதை தூக்கி எறிஞ்சேன் !''

உள்ளே போறது ஒரு மடங்கு  ,வெளியே வர்றது பத்து மடங்கா  ?
             ''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா ,அவரை ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''
           ''அட நீங்க வேற !நூறு மில்லி தண்ணி குடிச்சா ,குடிச்ச  நொடியிலேயே ஒரு லிட்டர்  வெளியே போயிடுதாமே !''
இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் ?
நம்ம ஊர் கட்சிகளின் 
கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 
சந்தேகம் பிறக்கிறது ...
இவர்கள் கொள்கை என்ன நானூறு பக்கங்களில் ,
விளக்க முடியாத அளவிற்கு ....
கொடுங்தமிழிலா இருக்கிறது ?
Thulasidharan V Thillaiakathu>>>
நல்ல காலம் மனைவியை அடிக்காமல் இருந்தாரே !!
Bagawanjee KA
அந்த தைரியம் தூக்கத்தில் கூட அவருக்கு வராதே !
Ramani S
நல்லவேளை,திருடன் பக்கத்தில் படுத்திருப்பதைப்போல கனவு காணாமல் இருந்தார்
Bagawanjee KA
இதுவும் நடக்கக் கூடும்,எதுக்கும் அவர் மனைவி தள்ளிப் படுப்பதே நல்லது !
திண்டுக்கல் தனபாலன்
கனவிற்கே இப்படியா...?
Bagawanjee KA
நிஜத்தில் நாய் துரத்தினால் பீரோவில் நுழைந்து பூட்டிக்குவாரோ ?
Chokkan Subramanian
மனைவி துரத்திய மாதிரி கனவு கண்டிருந்தால், பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை, இது தான் சாக்கு என்று மொத்து மொத்துன்னு மொத்தியிருப்பார்.
Bagawanjee KA
இவர் மொத்தினால் மனைவி வாங்கிக் கொண்டாயிருப்பார் ?தலையணையால் முகத்தை பொத்தி விடுவாரே !
ஜெ பாண்டியன்
கண்ணாடியில மனைவியத்தான் பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்.
துரை செல்வராஜூ
அடேயப்பா!?..
Bagawanjee KA
மனைவியை நேரில் பார்க்க தைரியம் இல்லைதான் ..அதற்காக ,கனவிலே வர்ற கண்ணாடியில் பார்த்தார் என்பது 'டூ மச் ' !

16 comments:

  1. அந்த அளவு ஊழல்...!

    ஹா.... ஹா... ஹா...

    அடப்பாவி... நல்லவேளை பீரோவோடு போச்சே...

    ஐயோ... மெடிகல் மிராக்கில்!

    அதானே?

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் பாதிக்கப் பட்டிருக்கார் போலிருக்கே :)

      அவரை இனி கொசு கடிக்காதோ :)

      பீரோவுக்கு ஒண்ணுமில்லை கண்ணாடிதான் போச்சு :)

      தண்ணி மருந்தையும் இவருக்கு தர முடியாதே :)

      கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்டால் ,பற்றிக்கொண்டு வருவது எனக்கு மட்டும்தானா :)

      Delete
  2. பால் அவ்வளவு சுகாதாரமா இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊரிலும் இப்படித்தானா ,அஜய் ஜி :)

      Delete
  3. சுகாதார அலுவலர்தான் கோல்மால் பேர்வழியாச்சே...! பால் பணத்தை முனிசிபாலிட்டியில கட்டிடுறோம்... தண்ணி வரியோட சேத்து...!

    பரவாயில்லை... ஒங்க அப்பாவுக்கு வயதாகித்தான் கண்ணும் மூக்கும் அவுட்...!

    அதுக்கு போயி என்ன ஏங்க தூக்கி எறிஞ்சீங்க...?

    ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல...’ இதுக்குத்தான் நூறு மில்லிய... நல்ல தண்ணியோட மிக்ஸ் பண்ணி குடிக்கனுங்கிறது...!

    கொடுங்கோல் ஆட்சின்னா... கொடுந்தமிழில் இருந்தாத்தானே தெரிந்து கொல்ல முடியும்...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. கட்டினால் பரவாயில்லை ,பையிலே வைச்சுக்கிறாரே :)

      வயசாகும் முன்னாலே யாருக்கு அவுட் :)

      தூக்கும் எடையிலா நீ இருக்கே :)

      டாஸ்மாக் தண்ணீயோடவா :)

      கொடுங்கோல் ஆட்சிக்குதானே கொடுத்து வச்சிருக்கோம்:)

      Delete
  4. கொள்கை விளக்க பாடல்,,, கொள்ளை அடித்த பாடல்கள் மனதை அல்ல ,,,,,
    அனைத்தும் அருமைஜீ,,

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் கொள்கை, நம்மைக் கொள்ளை அடிப்பதுதானே :)

      Delete
  5. ஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பால்மானி உற்பத்தியை தடை செய்யச் சொல்லுவார்களோ :)

      Delete
  6. 01. அவ்வளவுதான் இது போதும்..
    02. ஹாஹாஹா
    03. நல்லவேளை பொண்டாட்டி மேலே எறியலை..
    04. இது புதுமையாக இருக்கே....
    05. எல்லாம் அகநானூறு... இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு வேணும்னாலும் நாங்க தண்ணீயை கலந்துக்கிறோம் :)
      நுரை வரலைன்னு வருத்தம் வேற :)
      அடுத்து அதுதான் :)
      கின்னஸ் ரிக்கார்டு நோயாளியோ :)
      அதான், மக்கள் தெரிஞ்சிக்க அக்கறை காட்டலே:)

      Delete
  7. Replies
    1. பால்மானி கூடாதுங்கிற பேமானியை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. மனைவியின் துாக்கத்தை கனவிலாவது கெடுத்தாரே...........!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த தைரியத்தைப் பாராட்டத் தான் வேண்டும் :)

      Delete