7 May 2016

மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு இருக்கா :)


பூசிய சுவரில் கீறல் போட்டு ,பாக்கி வைப்பது கொத்தனார் புத்தி:)
         ''அந்த வலைப்பூவில்  எழுதுபவர்,  கொத்தனார் வேலை செய்பவராய் இருப்பார்ன்னு ஏன் சொல்றீங்க ?''
         '' வர்ற ரெண்டு கமெண்ட்டில்  ஒண்ணுக்கு  மட்டுமே மறுமொழி கூறி, நாளைக்குன்னு பாக்கி  வைக்கிறாரே !''  
தாலி பாக்கியம் மனைவிக்கு நிலைக்குமா :)
             ''உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
            ''அவர் செய்த தர்மம் ,தலையைக் காக்கும்னு சொல்றாரே !!''
மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு இருக்கா :)
           ''மடிசார் மாமிங்கிற சினிமா தலைப்புக்கு எதிர்ப்பாமே ?''
           ''அதனாலென்ன ,மடி 'சாரி ' மாமின்னு மாத்திட்டாப் போச்சு !''

நான் டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே :)
நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...
என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ...
அவரும் 'மினரல் வாட்டர் அடிமை 'ஆகியிருப்பார் !

18 comments:

  1. 01. இந்தக் கொத்தனாரு யாரு ?
    02. உண்மையாக இருந்தால் சரிதான்
    03. அவ்வளவுதான்
    04. வேறு வழி ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நாம் இல்லே :)
      உத்தரவு போட்ட நீதிபதியே தர்மம் தலைக் காக்காதுன்னு சொல்றாரே :)
      சாரி சொல்லவா கூச்சம் :)
      தேனும் பாலும் ஓடும்னு கனவு கண்டவராச்சே பாரதி :)

      Delete
  2. மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு இருக்கான்னு கேட்டுகிட்டு..நாமலே கொடுத்திட்டா போச்சு....

    ReplyDelete
    Replies
    1. மயிலாப்பூர் என்றா ,பாலக்காடு என்றா :)

      Delete
  3. ரசித்தேன்!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. ரவி வர்மா ஓவியம் அருமைதானே :)

      Delete
  4. Replies
    1. வேலை முடிந்ததும் வேண்டுமென்றே கொத்தனார் போடும் கீறல்களை நீங்க கவனித்ததுண்டா :)

      Delete
  5. வித்தியாசமான சிந்தனையில் விளைந்த சிறப்பான ஜோக்ஸ்! பாராட்டுக்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. கொத்தனார் பூசி மொழுகின மாதிரி இருக்கா :)

      Delete
  6. Replies
    1. ர்சித்தேன் நண்பரே,,ரொம்பத்தான் ரசித்து விட்டீர்கள் போலிருக்கு ,நன்றி ஜி :)

      Delete
  7. சாதுர்யமான நகைச்சுவை துணுக்குகள்.
    ஹெல்மெட்டுக்கு தர்மம் என்று பெயர்எழுதி ஒரு படம் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது கவனத்தை ஈர்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லையென்றால் எனக்கும் ஏமாற்றம் ஏற்படுவதுண்டு !ஆனால் ,இந்த தர்மம் வெளியான போது பலரும் ரசித்து கமெண்ட் போட்டார்கள் :)



      Delete
  8. தொடர்பு எல்லைக்குள் இருக்க விரும்புகிறார்...!

    தர்மம் தலை காக்கும்னு சொல்றது சரி... நீ தள்ளி விடாம இருக்கனுமே...!

    ‘அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?’
    ‘சாரி... என்னால முடியாது...!’

    மிட்டா(ஸ்) மிராஸா ஆயிருப்பாரோ...!

    த.ம. 9


    ReplyDelete
    Replies
    1. இந்த தொடர்பு எல்லைக்குள் இருக்க நினைப்பதில் தவறேயில்லை :)

      பிசாசு ,பில்லியனிலேயேவா :)

      எதைக் கேட்கிறதுன்னு விவஸ்தை வேண்டாமா :)

      ஆக்கியிருப்பார்கள் :)

      Delete
  9. Replies
    1. மடிசார் மாமியையும் தானே :)

      Delete