இது இங்கேயும் நடக்கும் :)
''முதல்வருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பாமே ?முதல்வரிடம் நல்ல மாற்றம் தெரியுதே !''
''அட நீங்க ஒண்ணு !அது இங்கில்லே ..அஸ்ஸாமில் !''
(வால் போஸ்டரைப் பார்த்து ,நான் 'பல்பு 'வாங்கியதால் உண்டான மொக்கை இது !+ நமது முதல்வரும் ,இந்த எளிமையை கடைப்பிடிப்பார் என்று நம்பத் தோன்றுகிறது ...காரணம் ,இந்த முறை ,பதவி ஏற்றபோது யாரும் அவர் காலில் விழவில்லை !முதல் கையெழுத்திலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கியிருக்கிறார் !இந்த இரண்டு அம்சங்கள் சந்தோஷத்தைத் தருகிறது !
என்னைப் போன்ற நடுநிலையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற வேண்டும் ....
உதாரணமாக ,தமிழக போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை சீர்ப்படுத்தப் பட வேண்டும் ,அங்குள்ள காலி இடங்கள் நிரப்பப் படவேண்டும் ,மக்களுக்கு செம்மையாய் சேவை புரிந்திட ,மத்திய அரசின் துணையோடு பழைய பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகளாக மாற்றப் படவேண்டும் ! ஓய்வு பெற்ற ,மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்களின் துயர்கள் அனைத்தும் தீர்க்கப் படவேண்டும் !
அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
தமிழக முதல்வர் அவர்களுக்கு , உங்களின் எதிர்பார்ப்புகளையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே !
மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''அந்த பாத்திரத்திலும் எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும் உன் உடம்பிலேயும் ஒட்டலையே!''
புது புருஷன் ரெடியாக இருப்பார் போலிருக்கே :)
''கடல்லே பாலம் கட்ட பயன்படுத்துற சிமெண்ட்டை வைத்துதான் , உங்க கணவரோட கல்லறையையும் கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''கல்லறை காயிறதுக்கு முன்னாடியே அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டான்னு, என்னை யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !''
பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா :)
'' மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
''புது பைக் என்னோடது ,புது மனைவி மட்டுமே .. எனக்கு மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
ஸ்டெப்னி :)
டிரைவர்கள் , வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !

|
|
Tweet |
01. முதலில் மாநிலத்தின் பெயரைச் சொல்லணும்.
ReplyDelete02 நம்புவோம் ஜி நல்லதே நடக்குமென்று
03. நூலைப்போல சேலை.
04. உண்மைதான்
05 நன்றி மறக்ககூடாது
06. ஸூப்பர்
வால் போஸ்டரில் அப்படித்தானே போடுவார்கள் :)
Deleteமுதற்கோணல் ஆகவில்லை என்பதால் முற்றும் கோணல் ஆகாதுதானே:)
சேலைக்கேற்ற ஜாக்கெட் :)
கணவன் மீது இம்புட்டு பாசம் :)
மனைவியாவது கொடுத்தாரே என்றுதானே :)
ஓட்டுனரின் நிம்மதிதானே விபத்துக்கு முற்றுப் புள்ளி :)
மக்களுக்கு செம்மையாய் தமிழக முதல்வர் சேவை புரிந்திட வேண்டும் என்று ஆசைபட்டு இறுதியில்..
ReplyDeleteஅது என் ஆசை ,இது டிரைவர்களின் பேராசை :)
Deleteத.நா முதல்வர் ஸ்டாலினிக்கு வாழ்த்து தெரிவித்ததும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.
ReplyDeleteதம முதல்வருக்கும் வாழ்த்துகள்
நல்லதொரு ஆரம்பம் ,தமிழகத்துக்கு நன்மை பயக்கட்டும்!
Deleteநன்றி ,ஜோக்காளி ,இரண்டாவது முறையாக த ம முதல்வராகி பல மாதமாச்சே :)
அஸ்ஸ(ம்)லாமு அலைக்கும் (السلام عليكم) த ந முதல்வர் த மக்களை சந்திக்க வேண்டும்... மக்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்க்க வேண்டும்... செய்வது செய்யாதது எல்லாம் அப்புறம்... காணொளி மூலம் காணாமல்... கண் கண்ட முதல்வராக... மன்னராக இல்லாமல் மக்களின் முதல்வராகத் தன்னலம் இல்லாமல் மக்களுக்காக(வே) உண்மையாக வாழவேண்டும்...!
ReplyDeleteஅது எப்படிங்க உங்க உடம்புல மட்டும் ஒட்டுது...?
கல்லானாலும் கணவன்... கல்லறையானாலும் இல்லைதானே...!
மாமனார் பைக்கில எழுதி இருக்கிறத பார்க்கலையா... ‘உழைத்து வாழவேணடும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...!’
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டுமா வேண்டும்...? ‘ஸ்டெப்னி’ வாழ்க்கைவண்டி ஓட தேவைதானே...!
த.ம. 3
அஸ்ஸாம் முதல்வரின் எடுத்துக்காட்டு ,இங்கேயும் தொடர்ந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே !டாஸ்மாக் இல்லா தமிழகத்தை அவர் உருவாக்கினால் ,பெரும் புகழ் பெறுவார் !மக்களுக்காக நான் என்று அவரே சொல்லியிருக்காரே ,மக்களும் மந்திரிகளும் எளிதில் சந்திக்கும் வகையில் அவர் நடந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !
Deleteஅவர் ,வீட்டுக்கு வெளியேயும் நிறைய மேய்வாராய் இருக்கும் :)
கல்லறை ஆனதும் மனைவி மனதும் கல்லாகிடுமா :)
அது மருமகனுக்காக எழுதியது தானா :)
ஸ்டெப்னிக்காக, ஒரிஜினலை ஒதுக்குவது என்ன நியாயம் :)
அனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteமுதல்வர் எல்லோருமே எளிதாக அணுகக் கூடியவராக, எளிமையாக இருந்தாலே கோடி நன்மை.
கோடி நன்மை பெற முதல்வர் அருள் புரியட்டும் :)
Deleteஅருமை
ReplyDeleteஎது அருமை ,ரியலா ,ரீலா :)
Deleteதம முதல்வருக்குத்தான் என் வாழ்த்து..த ந முக்கு வாழ்த்து சொல்ல நான் யாருக்கும் அடிமை இல்லை..
ReplyDeleteநானும் யாருக்கும் அடிமை இல்லை ,நல்லதை யார் செய்தாலும் வரவேற்போமே!டாஸ்மாக்கை இழுத்து மூடினால் நீங்கள் வரவேற்க மாட்டீர்களா ?
Deleteமுதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கையையும் ரசிக்க முடிந்ததா :)
ReplyDeleteஅருமை ஐயா.நல்லது நடந்தால் சரி ஐயா.நன்றி.
ReplyDeleteநேற்றுகூட ஒரு நல்லது நடந்துள்ளது !அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள அட்டை வழங்கப் பட்டுள்ளது !இந்த திட்டம் தமிழகம் முழுமைக்கும் விரிவு படத்தப் படவேண்டும் .அதே சமயத்தில் ,இந்த திட்டச் செலவுக்கான மானியத்தை ,போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி ஈடு செய்யவேண்டும் !ஏற்கனவே ,பலகோடி ரூபாய் மானியத்தொகை வராமல் இருப்பதால் ,கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன .இதனால் ,ஓய்வு பெற்ற ,பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய பணபலன்கள் வழங்கப் படாத நிலையில் உள்ளதை கவனத்தில் கொண்டு ,அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு !
Deleteஉண்மை தான் ஐயா.எனது பாட்டி ஜிவா அரசுப் பேருந்துக் கழகத்தின் ஓய்வுப் பெற்ற ஊழியர்.அவருக்கு இன்னும் பணபலன் இல்லாததால் அதன் நிதீமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது ஐயா.
Deleteஇப்படி கஷ்டப்படுவது ஒரு சிலர் அல்ல !பல்லாயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களின் துயரத்தைப் போக்க புதிய அரசாவது முயற்சிக்கவேண்டும் :)
Delete