10 November 2016

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு உத்தியோகம் தேடலாமா:)

           ''உங்க  பையன்கிட்டே  ,உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொன்னது தப்பா போச்சா,ஏன் ?''
           ''சீக்கிரமா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றானே !''

எல்லோராலும் 'தியானத்தில் 'மிதக்க முடியுமா :)        
          ''தியானம் செய்யும் போது  ஃபேனை ஏன் ஆப் பண்ணிக்கனும்னு சொல்றீங்க ?''
         ''அந்தரத்தில் மிதந்து அடி பட்டுறக் கூடாதுன்னுதான் !''
பேப்பர்  ஜூஸ் நல்லாவாயிருக்கும் :)    
               ''உங்க உடம்பு தேற 'சுவரொட்டி 'யை நல்லா அரைச்சுக் கொடுக்கணும்னு உங்க மனைவிகிட்டே சொன்னேன் ,அதுக்கென்ன இப்போ ?''
               ''கொஞ்சம் விளக்கமா ,சுவரொட்டின்னா ஆட்டு மண்ணீரல்னு சொல்லி இருக்கக் கூடாதா ,டாக்டர் ?''

ஏற்கனவே மனைவி தண்டம்னு கூப்பிடுவா :)
              ''அவருக்கு காந்தீயக் கொள்கையிலே ஈடுபாடு அதிகமானா ,தண்டாயுதபாணிங்கிற பெயரை ஏன் தண்டபாணின்னு மாத்திக்கணும்?''
               ''ஆயுத பாணியா  இருக்க பிடிக்கலையாம் !''

கு .க .என்றாலும் ஜனத்தொகை குறையலையே:)
           ''பொறந்ததும் குவாகுவான்னு அழ வேண்டிய  குழந்தை ஏன் குகா குகா ன்னு அழுவுது ?'' 
           ''ஆறாவதா பொறந்த குழந்தை ஆச்சே !அப்பனுக்கு குடும்ப கட்டுப்பாட்டை  ஞாபகப்படுத்துது!'' 

ரஜினியின் ஜப்பானிய ரசிகை தமிழக மருமகளானார் !
(இது நடந்தது சில வருடம் முன் ,இப்போ பிள்ளைப் பிறந்திருக்கும் )

நமக்கு ஜப்பானிய புருஸ்லி ஜெட்லியை பிடிக்கும் ...
ஜப்பான் பெண் என்ஜீனியர்  'தனே அபே 'வுக்கு பிடிச்சதெல்லாம் நம்மூர் இட்லி தானாம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பிடிச்சதாலோ என்னவோ ....
அவர் மனசுலேயும் எப்போ வரும் ,எப்படி வரும் தெரியாமல் இருந்த காதல் நிச்சயமாய் வந்தேவிட்டது ...
ரஜினியின் சங்கர் சலீம் 'சைமன் 'கேரக்டரை விரும்பி இருப்பாரோ என்னவோ ...
நம்ம ஊர் ஆண்டனி பிரகாஸ்மேல் காதல் மலர்ந்திருக்கிறது ...
 நான்காண்டுக்கு முன் கன்னியாகுமரிக்கு வந்தாராம் தனே அபே ...
நட்சத்திர ஹோட்டலில் ரூமை உடனே தராமல் காக்க வைத்ததால் வெறுப்பாகி வரவேற்பாளரிடம் வாக்குவாதம் செய்கையில் ...
அப்போது நம்ம ஆண்டனி பிரகாஸ் பிரகாசமாய் 
பிரவேசித்து உள்ளார் ...
உடனே தனே அபேவுக்கு அட்டகாசமாய் உடனே அறை தயார் செய்து கொடுத்துள்ளார் ...
அவரின் கனிவான பேச்சும் ,உபசரிப்பிலும்  மயங்கி விட்டாராம் தனே அபே ...
அதுவும் ஒரே ஒருநாள் பழக்கத்தில் ...
ஜப்பானுக்கு சென்ற பின்னும் செல் ,இ மெயில் மூலமும் தொடர்ந்த நட்பு ,காதலாகி விட்டதாம்...
இதற்காகவே தான் பணி புரியும்  கார் கம்பெனியின் டெல்லி கிளைக்கு  மாறுதலாகி வந்துள்ளார் ...
கன்னியாகுமரியிலும் ,டெல்லியிலும் மாறி மாறி கடலைப் போட்டுக் கொண்டு இருந்தார்களாம் ...
கடலைப் போட்டது  போர் அடித்து  ...
இருவீட்டார் சம்மதத்துடன் கன்னியாகுமரியில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளார்கள் ...
நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ...
இந்த இருவரின் காதல் நாடு விட்டு நாடு தாண்டி இருப்பதை நினைக்கும் போது ...
நாமென்ன நினைப்பது ?...
நம்ம ஊர் கலாசாரக் காவலர்கள் தான் நினைத்துப் பார்க்கணும் ! 

22 comments:

  1. ஜப்பான் காதல் சுவாரஸ்யமாய் உள்ளது. இது பழைய கதைதானே? இப்போது எப்படி இருக்கிறார்களாம்?

    ReplyDelete
    Replies
    1. மூன்று சக்கர வண்டி அபே வேண்டுமானால் கண்ணில் படுகிறது ,ஜப்பான் அபே பற்றி தகவல் இல்லை :)

      Delete
  2. பல லட்சத்தோட... வருமானத்த பாத்திட்டு... லட்சணமா வாழலாமுன்னு நினைக்கிறது தப்பா..!

    தலைக்கு மேல பேனோட தொல்லை தாங்க முடியலை... அதான்ஆப் த ரெக்கார்ட்...!

    சவப்பெட்டிய ரெடி பண்றமாதிரி ஆயிடும் போல இருக்கே... டாக்டர்...!

    அதான் நிராயுதபாணியா நிண்டுக்கிட்டு இருக்காரா...?!

    குடும்பத்தக் கட்டிக் காக்கனுமுன்னு நெனச்சேன்... அதான் நீ ஆறாவதா அவதரிச்சா... என்னதான் இருந்தாலும் குடும்பத்ததக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கில்ல...!

    ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது... உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...’
    கடலை... விடலை... மடலை... சுடலை...!

    த.ம. 1





    ReplyDelete
    Replies
    1. இந்த வெட்டிப் பயலுக்கு லடசத்தோட எவன் லட்சணமான பொண்ணு தருவான் :)

      பேன் தொல்லை இருந்தால் தியானத்தை எப்படி நிம்மதியா செய்யமுடியும் :)

      சவப் பெட்டி மேலேயும் சுவரொட்டியை ஒட்டி விட திட்டம் போலிருக்கே :)

      அரை நிர்வாணக் கோலத்திலும் நிற்கிறாரே:)

      குடும்பத்தைக் கட்டிக் காப்பதும் கு க தானா :)

      உடலைத் தேடாமல் மனசைத் தொட்டு இருக்கு ,இந்த காதல் :)

      Delete
  3. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆறாவதா பொறந்த குழந்தையை ரசிக்க முடியுதா ,சிரிக்க முடியுதா :)

      Delete
  4. Replies
    1. தியானப் பெண்ணையும்தானே:)

      Delete
  5. //நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ...//

    'காதல் தண்டவாளத்தில் முடிகிறது’ மனதில் பதியும் தொடர் ஆட்சி.

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆட்சி?சொல்லாட்சி என்றுதானே சொல்ல வந்தீங்க:)

      Delete
  6. புருஷ லட்சணம் என்பதை மாற்றிச் சொல்லி இருக்க வேண்டுமோ
    இதுதான் தியானத்தில் மிதப்பதா
    தண்டமே ஆயுதமானால்
    கட்டுப்பாட்டில் ஒரு கால் கூடுதலோ
    ஜப்பானியப் பெண்களின் வயதைக் கணிப்பது சிரமம்

    ReplyDelete
    Replies
    1. ஆணின் லட்சணம் என்று சொல்லியிருந்தால் பையன் கல்யாணத்தைக் கேட்டிருக்கமாட்டான் :)
      மனசு லேசாகி மிதக்குதா இல்லையா :)
      அதுக்காக பாணின்னா பெயரை மாற்றிக்க முடியும் :)
      இலக்கணம் அறியா மழலையை மன்னிப்போம்:)
      அவ்வளவு இளமையாகவா தெரிவார்கள் :)

      Delete
  7. உத்தியோகம் தேடிக்கிட்டு கல்யாணம் கட்டிக்கிட்டா..இன்னும் நலலா இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. பொண்ணு கிடைக்குது ,உத்தியோகம் கிடைக்க மாட்டேங்குதே :)

      Delete
  8. வாயைக் கொடுத்துட்டு வம்புல மாட்டியது போல் இருக்கிறது
    நல்லதுதான்
    நமீதா போஸ்டரோ.... ஹாஹாஹா
    நல்ல கொள்கை
    அதுக்கும் தெரிஞ்சு போச்சா ?
    ச்சே நானும்தான் 20 வருசம் அபுதாபியில இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பய பிள்ள அதே நினைப்பா இருக்கானே :)
      சீலிங்கில் போய் முட்ட மாட்டார்களா :)
      அப்படின்னா கூட சந்தோஷப் பட்டிருப்பாரே :)
      இவரால் வீணா போவுதா :)
      அப்பனுக்கு மட்டும்தான் உறைக்கவே இல்லே :)
      கடலைப் போட நேரமில்லாம போச்சா :)

      Delete
  9. அடுத்தவர்கள் தியானத்தை கலைக்கவே ஒரு படத்தை போட்டுவிட்டு கடிக்க வேறு செய்கிறீர் இரும் மதுரைக்கு வருகிறேன் ...
    தம +

    ReplyDelete
    Replies
    1. மருந்தைக் குடிக்கும் போது குரங்கையும் ,தியானத்தின் போது இந்த படத்தையும் நினைக்கப் படாது :)
      வர்ற செய்வாய்க் கிழமை மதுரைக்கு வாங்க ,ஏன்னா,அன்னைக்கு நான் ஊர்லே இருக்க மாட்டேன் :)

      Delete
  10. அருமையான நகைச்சுவைகள்

    ReplyDelete
    Replies
    1. கவியருவியின் பாராட்டுக்கு நன்றி :)

      Delete
  11. ரசனை சகோதார.
    மிக்க நன்றி.
    tamil.manam 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. த ம மகுடம் சூட்டி பாராட்டியமைக்கு நன்றி சகோ :)

      Delete