9 November 2016

மனைவிக்கு தெரியாமல் ரகசியமாய் :)

ஆஸ்பத்திரிகள்  வருமானம் கூடப் போவுது :)                  
           ''திடீர்னு  ஹார்ட் அட்டாக்  பெருகிப் போச்சே  ,ஏன் ?''
           ''500,1000 ரூபாய் செல்லாதுன்னு  சொன்னதால் ஆகியிருக்குமோ  !''  
                    
அப்பனுக்கு தெரியாதா மகனைப் பற்றி :)                 
                   ''உங்க பையன் ,முத்துக்குளிக்கப் போறானாமே ?''
                  ''ஆமா  கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சே !''
முட்டையை குஞ்சு பொறிக்கும்  இன்குபெட்டர்  வேற :)
               ''பிராய்லர் பண்ணை நடத்தினவர் கிட்டே,என் குழந்தை எடை குறைவாய் பிறந்ததால் இன்குபெட்டரில் இருக்குன்னு , சொன்னது தப்பா போச்சு !''              
               ''ஏன் ?''             
               '''என்கிட்டேயும் இன்குபெட்டர்  ஒண்ணு  சும்மாதான் இருக்கு ,வேணும்னா வாங்கிக்குங்கன்னு சொல்றாரே !''

டாடி எனக்கு ஒரு டவுட்டு :)
             '' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
            ''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
             ''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே :)
            'ஹலோ ,யாரு தினேஷா ?''
           ''இல்லேப்பா , நான்  தினேஷ் அம்மா ,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !''
           ''சாரி ,ராங் நம்பர் !''       

மனைவிக்கு தெரியாமல் ரகசியமாய் :) 
           "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
          "எதை ?"
          "பேங்க் பாலன்ஸ்சைதான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

? யை ! ஆக்குவதுதான் வாழ்க்கை:)
முடியுமா என்பதே  தவறு ..
'முடி'யும் கூட வளர்ச்சி அடையாமல்  உதிர்வதில்லை!

28 comments:

  1. பேங்க் பாலன்ஸ்சை தான்!
    மறைக்கிறாங்களா
    செலவை மறைக்கிறாங்களா

    ReplyDelete
    Replies
    1. மறைப்பதே தவறுதானே :)

      Delete
  2. Replies
    1. அரசாங்க கஜானாவில் பணம் நிரம்புகிறதோ இல்லையோ ,ஆஸ்பத்திரிகளின் வருமானம் கூடும்தானே :)

      Delete
  3. இன்னும் இரண்டு நாளைக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் ஜோக்குகளை உங்களிடம் எதிர் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டிரெண்டி ஜோக்ஸ் வரத்தானே செய்யும் :)

      Delete
  4. கரண்ட் ஜோக் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. நானும் எந்த கரண்ட்டோன்னு நினைச்சேன் நாட்டு நடப்பு ஜோக்கா :)

      Delete
  5. “அய்யா... யாராவது... இந்த அய்நூறு ரூபாய் நோட்டை வச்சுக்கிட்டு ஒரு நூறு ரூபாய் மட்டும்... யாராவது கொடுங்கய்யா... அய்யா... அம்மா... நேத்து சாப்புட்டது... ஹோட்டல்ல நாலு இட்லிய சாப்பிடுறேன்...!”
    “அய்யா... அம்மா... அய்நூறு... ஆயிரம்... செல்லாத நோட்ட இந்தத் தட்டுல போடுங்க... ஒங்களுக்குப் புண்ணியமா போகும்...!”
    “அய்யோ... ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... ஆயிரம் ரூபாயில்ல... ஆயிரம் ரூபாயில்ல... சொக்கா அது எனக்கே கிடைக்க வேண்டும்... இல்ல... இல்ல... எனக்கு கிடைக்க வேண்டாம்...சொக்கா நீதான் காப்பாத்தனும்...!”

    அது நாளதான்... முத்து... குளிக்கப் போறானாம்... பக்கத்தில இருக்கிறவங்க கப்பு தாங்க முடியலைன்னு திட்டுறதத் தாங்க முடியலையாம்...!

    என்னிட்ட இங் பெட்டரா இருக்கு... வாங்கி முட்டைக்குப் பொட்டு வைங்க...!

    விசிலடிச்சான் குஞ்சுங்கிறது இதுதானோ...?!

    இன்னக்கி தீபாவளி இல்லையே...ஆச்சர்யமா இருக்கே...!

    ஏ.டி.எம்.-ஆன எனக்கு இன்னைக்கும் நாளைக்கும்தான் ரெஸ்ட்... ரொம்ப ஜாலியோ ஜாலி...!

    ‘முடி’யாட்சியா நடக்கிது... இல்லையே...!

    த.ம. 1







    ReplyDelete
    Replies
    1. பிச்சைக் காரங்க கூட வச்சிருக்கிற ஐந்நூறு ,ஆயிரம் ரூபாயை மாற்ற வங்கிக் கணக்கு துவக்கியாகணும் போலிருக்கே :)

      எடுக்கிற முத்தும் நாறப் போவுது :)

      நல்ல முட்டை ,கூ முட்டைன்னு எழுதவா :)

      இந்த குஞ்சுக்கு வண்டியே கட்டுபடுதே :)

      அதானே ,தீபாவளிக்கு தீபாவளி குளிக்கிறது அவன் வழக்கம் :)

      ரெண்டு நாள் சுத்தமா இருப்பேன் ,எவனும் வந்து கிழிக்க மாட்டானே :)

      முடியில்லாதவன் படுற பாட்டைப் பார்த்தால் முடியாட்சி தொடர்ற மாதிரிதானே இருக்கு :)

      Delete
  6. "பேங்க் பாலன்ஸ்சை மறைக்கிறவர் ரெம்ப தைரியசாலி தலைவரே..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எதை எதையோ மறைக்கிறாரோ என்பதாலா :)

      Delete
  7. Replies
    1. நாங்களும் சொல்வோமில்லே :)

      Delete
  8. இப்படியும் அட்டாக்கா ?
    ஆறு மாசம்தானே...
    இனி இப்படித்தான்
    தண்டச்சம்பளம்
    அம்மா பேசினால் பிரச்சினை
    அனுபவம்
    ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. இது மோடி அட்டாக் :)
      தீவாவளிக்கு ஆறு மாசமிருக்கா :)
      குறைப் பிரசவமாகாமல்ஆகாமல் போனால் சரி :)
      இனிமேல் கண்டக்டரும் தேவைப் படாது போலிருக்கே :)
      குளிக்கலைன்னா பிரச்சினையில்லையா :)
      பணத்தை வச்சுக்கிட்டு சிலிப்பைக் கொடுப்பதே என் அனுபவம் :)
      முளைத்ததும் எதுதான் விழும் :)

      Delete
  9. ஹாஹாஹா! ஆயிரமாயிரம் ஜோக்ஸ் எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. 500,1000 ரூபாய் செல்லாது என்பதை வைத்தா :)

      Delete
  10. அதிரடி திட்டத்தால் அவதிப்படுபவர்கள் ஏழைகளும் இடைத்தட்டு மக்களும்தானே

    ReplyDelete
    Replies
    1. அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை ?கேட்டால் நாட்டு நலன் ஒத்துழைப்பு தாருங்கள் என்பார்கள் :)

      Delete
  11. சிலிப்பை கிழித்து போட்டால் போதுமா ?
    தம +

    ReplyDelete
    Replies
    1. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்காதுதான் :)

      Delete
  12. இதய அடைப்பு.
    முத்துக் குளிப்பு.
    ஏரி எம் வெச்சுக்கிட்டிருப்பது
    ரசித்தேன் சகோதரா.
    நன்று.
    த.ம. 12.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தினேஷ் குளிப்பதை மட்டும் ரசிக்க முடியவில்லை போலிருக்கே :)

      Delete
  13. முதலில் எந்த நிகழ்வையும் ஜோக்காகப் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள்
    ஒரெ நாளில் ஹார்ட் அட்டாக்குகள் கூடினால் சந்தேகம் வரத்தானே செய்யும்
    பையன் பெயர் முத்து வா
    இங்குபேட்டரில் வைத்த குழந்தையை ப்ரெயிலர் குழந்தை எனலாமா
    மூன்று முறை விசில் ஊதினா
    தினேஷ் அம்மா ஜோக் படித்தது
    யார் யாரோ எதெதையோ யார்யாரையோ வெச்சுக்கிறார்கள்
    முடி ஜோக்க்கா, விஷய தானமா

    ReplyDelete
    Replies
    1. என் கடன் ஜோக் எழுதிக் கிடப்பதே :)
      இந்த செய்தி வெளியேயும் வர வாய்ப்பில்லை :)
      நேற்றைய பதிவில் வந்தவர் பெயர்தான் முத்து :)
      ப்ரீ மேச்சுர்ட் குழந்தையைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது:)
      ஸ்தம்பித்து வண்டி நின்று விடலாம் :)
      இன்னுமா தினேஷை மறக்கலே :)
      உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் இப்படி வச்சுக்க தோணுமா :)
      தனபாலன் ஜி சொன்ன மாதிரியும் எடுத்துக்கலாமே :)

      Delete
  14. ஓரே இரவில் அனைவருக்கம் இதயதுடிப்பை ஏற்றிவிட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. நாலு நாளாய் இன்னும் அடங்கவில்லையே :)

      Delete