''பழைய ரூபாய் நோட்டை மாற்ற வங்கி வரிசையில் நிற்கும்போதே, இருவருக்கு இடையில் காதல் பூத்திருச்சாமே ?''
''பெற்றவங்க பணத்தை மாற்றிட்டு வரச் சொன்னா,இவங்க மாலையை மாற்றிக்கிட்டு போவாங்க போலிருக்கே !''
(இதோ, இவங்கதான் அந்த வங்கி வரிசை காதல் ஜோடி )
மகளின் வருத்தம் நியாயம்தானே :)
''இங்கிலீஷ் தெரியலைன்னா சும்மா இருங்கப்பா !''
''நான் என்னா தப்பா சொல்லிட்டேன் ?''
'' நான் அபார்ட்மெண்டுக்கு குடி போனதை ,அபார்சனுக்கு போயிட்டதா சொல்லி இருக்கீங்களே !''
உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்குக் கேடு :)
''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''
மனைவியின் குரலுக்கு மரியாதை:)
''என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு பாட்டுப் போட்டியிலே இருந்து நீக்கிட்டாங்க!''
''நம்பவே முடியலையே .நடுங்க வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கமா ?''
''தலைவரை பேட்டி கண்ட நிருபர்கள் எதுக்கு சிரிக்கிறாங்க ?''
' 'ராகத்தில் தனக்கு அதிகம் பிடித்தது செஞ் 'சுருட்டி'ன்னு சொன்னாராம் !''
தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி:)
பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம்
பிறகு சவமாய் போவதால்!

தலைவருக்கு பிடித்த ராகம் :)
' 'ராகத்தில் தனக்கு அதிகம் பிடித்தது செஞ் 'சுருட்டி'ன்னு சொன்னாராம் !''
தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி:)
பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம்
பிறகு சவமாய் போவதால்!
|
|
Tweet |
முதல் செய்தி (ஜோக்) நிஜமான செய்தியா? அட!
ReplyDeleteஅபார்ட்மெண்ட் - அபார்ஷன் ஹா.... ஹா.... ஹா...
ஆமாம் ,ஜோக்கான நிஜம்தான் அது :)
Deleteசந்தோஷப் பட வேண்டிய விசயத்துக்கு வருத்தப்பட வச்சிட்டாரே அப்பன்காரன் :)
ஆகா வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்... கணக்கு பாத்து காதல் வந்தது... கச்சிதமாய் ஜோடி சேர்ந்தது...!
ReplyDeleteநீ குடி போனதை... குடி போதையில அப்படிச் சொல்லிட்டேன்...!
என்னதான் இருந்தாலும் இன்னும் பத்துமாதம் பாட்டி இருக்க வேண்டிவருமே...! அதுக்காக அவசரப்பட்டு ஆஸ்பத்திரியில குழந்தையத் திருடிக்கிட்டு வந்துடாதே...! பாட்டிய அனுப்புறேன்னு நீ உள்ள போயிடாதே...!
குரலையும் நடுங்க வச்சிட்டியா...?!
நல்ல வேளை ‘மோகனா’ன்னு சொல்லி... தன்னோட ஒரு தலைராகத்த வெளிப்படுத்தாம விட்டாரே...!
மறு பிறவி இல்லைங்கிறது உண்மையாயிடுச்சு...!
த.ம. 2
சேர்த்து வைத்த மகராஜன் மோடிக்கு இவர்கள் நன்றி சொல்வார்களா :)
Deleteஉங்க குடி எப்பப் போகுமோன்னு தெரியலையே :)
பிள்ளை மட்டுமா பத்து மாத பந்தம் ,பாட்டியும்தான் :)
நடுங்க வைப்பதில் நீ கெட்டிக்காரிதான் :)
அதை கப்சிப்பா வச்சிக்கத் தெரியுது அவருக்கு :)
ஆமாம் வாழ்க்கை ஒரு முற்றுப் புள்ளி ,இதில் கமாவுக்கு இடமில்லை :)
அனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteத ம 4
சவமாய்போவது வரையா :)
Deleteமோசடி நடக்கவில்லையே அந்த வகையில் மோடியை பாராட்ட வேண்டும்
ReplyDeleteஅப்பனே வினையா ?
இப்படியாவது பாசம் இருக்கட்டும்
இவன் நடுவராக இருந்தால் தேர்வாகி இருக்கலாம்
நல்ல ராகம்தான்
ஸூப்பர் ஜி
மோடி தலைமையில் இந்த திருமணத்தை நடத்த வேண்டியதுதான் பாக்கி :)
Deleteஅதானே ,அபார்ஷன் ஆனாலுமே சொல்லலாமா :)
பத்து மாத பாசமா :)
அந்த பாக்கியமும் இல்லாம போச்சே :)
செம சுருட்டிதான் :)
பிரசவ வைராக்கியம் ,மயான வைராக்கியமும் சேர்ந்திருக்கே :)
அந்த ஜோடி மோடிக்கு நன்றி தெரிவித்திருப்பார்களே
ReplyDeleteபிறக்கிற குழந்தைக்கு மோடி பெயர் கூட வைக்கலாமே :)
Deleteவரிசையில்
ReplyDeleteபணம் மாற்ற வாடி நின்றோரின்
உள்ளங்களில் காதல் தேடி வந்து
குந்திவிட்டதே!
காதல் - அது
எங்கே, எப்போது வருமென்று தெரியாதே!
வங்கிக்கு அனுப்பிய பெற்றோர்கள் மகிழ்ந்தால் சரிதான் :)
Delete''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''//
ReplyDeleteபார்த்ததும்னு சொல்லலையே!!!
ஆகா ,இந்த அர்த்தம் மருமகளுக்கு தெரியாமப் போச்சே :)
Deleteகாதல் விளையும் இடமாக வரிசையா அல்லது வளரும் இடமாக வரிசையா
ReplyDeleteஅவருக்கு அபார்ட்மெண்ட் அபார்ஷன் என்று கேட்டிருக்கலாம்
பேரனைப் பார்த்தால் கிழவி சந்தோஷமாய்க் கண்மூடும்
”என்னை நடுங்கவைக்கும் குரல் என்று சொல்லி இருக்கவேண்டும்
தலைவர் எதைச் சொன்னாலும் சிரிக்கவேண்டும்போல.
பிரசவம் இருந்தால்தானே சவம் இருக்கும் இது ஒரு தொடர்கதை
பணத்தை மாற்ற வந்த இடத்தில் மனதை மாற்றிக் கொண்டார்கள் :)
Deleteவயசானாலே இப்படித்தான் :)
இல்லைன்னா சாவே வராதோ :)
அந்த தெருவில் உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள் :)
அதுக்குதானே அவரைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கு :)
சிந்துபாத் கதையைப் போல முடியாத கதையா :)
இந்தக் காதலத்தான் பத்திகிறுச்சுன்னு சொல்லவாங்களோ...!!!!!
ReplyDeleteகாதல் வந்தால் சொல்லி அனுப்பு ,உயிரோடிருந்தால் வருகிறேன் ..இப்படியும் காதல் உண்டு :)
Delete