6 November 2016

கணவனை வேலை வாங்கும் வழி :)

 அழகான நர்ஸ் மட்டும் கண்ணுக்குத் தெரியுமா :)           
              ''டாக்டர்,கண் தெரியலைன்னு  வந்தவரை ஏன் விரட்டி அடிக்கச்  சொல்றீங்க ?''
                 ''நீ போற பக்கம் எல்லாம்  அவரோட  கண்ணும்  போறதைப் பார்த்தா ,செக் அப் பண்ணிக்க வந்த மாதிரி தெரியலே ,உன்னை பிக் அப் பண்ணிக்க வந்த மாதிரியிருக்கே !''


காலங்கார்த்தாலே  குரங்கைத்  தேடி அலைய முடியுமா :)   
              ''என்ன இது அதிசயம்.....விடிந்தும் விடியாததுமா பாலும் பழமும் கொடுக்கிறே ?''
               ''டிவியில் ,இன்று என் ராசிக்கு  பாலும் பழமும்கொடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க ,அதான் !''
                 ''அதை நானும் கேட்டேன் ,குரங்குக்குத் தானே தரச் சொன்னாங்க !''

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா :)
            ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
            ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
கணவனை வேலை வாங்கும் வழி :)
               ''இப்போ பேட்டிங் பண்றது யாருன்னு  பையன் கேட்டதுக்கு  'கலுவிதரனா'ன்னு சொன்னேன்...நீ ஏன்,மீனைக் கொண்டுவந்து என் முன்னாடி வைக்கிறே  ?'' 
              ''கழுவிதரணுமான்னு நீங்க கேட்ட மாதிரி என் காதிலே விழுந்ததுங்க !''

குருவிடம் கேட்கக் கூடாத கேள்வி:)
               ''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே என்ன கேட்டார்?''
               ''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!''

மழலை அறிந்த முதல் ஒலி !
யார் தேற்றியும் அழுகையை நிறுத்தாத மழலை ...
தாயின் தோளில் சாய்ந்ததும் கப்சிப் ஆனது ...
வழக்கமாய் கேட்கும் லப்டப் ஒலி  கேட்டு !

22 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அனைத்திலும் மழலையின் முதல் ஒலி அருமைதானே:)

      Delete
  2. Replies
    1. சமையலுக்கு பெரிய கும்பிடு போடும் ராணியையும் தானே :)

      Delete
  3. அவர்தான் என் கண் கண்ட கணவர்...!

    நீங்கதான் அத நிருபிச்சிட்டீங்களே...!

    சைவம்... அசைவத்துக்கு ஆசைப்படலாமா...? எல்லாம் லேட்தான்...!

    நீதான் கழுவிற மீன்ல நழுவிற மீனாச்சே...! மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா...!

    இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு... தப்பாக் கேக்கப்படாதில்ல... இந்திரன் கெடுத்தது பெண்தான்னு கேக்கனுமுல்ல...!

    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. இது யார் ,நர்ஸ் சொன்னதா ,யாரைப் பார்த்து :)

      கணவனும் குரங்கும் ஒன்றா :)

      அத்தனைக்கும் ஆசைப்படு என்றாரே :)

      இப்படி பாடி பாடியே ஐஸ் வைக்காதீங்க :)

      ஊசியும் நூலுக்கு இடம் கொடுத்ததே :)

      ஏன் கேட்கலே ,அவருக்கு மைக் அவுட்டா :)



      Delete
  4. நர்ஸ் ‘பேக் அப்’ ஆயிடுவாளோ!!!

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு ?இது மாதிரி எத்தனை ஆயிரம் கண்களைப் பார்த்தாச்சு :)

      Delete
  5. Replies
    1. பாலும் பழமும் இனிமைதானே :)

      Delete
  6. இப்படியும் வேலை வாங்கலாமோ.....!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு சொல்லியா தரணும் :)

      Delete
  7. Replies
    1. நல்ல படியாய் எல்லாம் முடிந்ததா :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சிஷ்யனின் கேள்வியையுமா :)

      Delete
  9. ஏற்கனவே வீட்டுக்காரரை வேலை வாங்குவது போதாதா ?

    ReplyDelete
    Replies
    1. அதானே ,கொஞ்ச நேரம் நிம்மதியா நெட்டிலே மேய முடியலையே :)

      Delete
  10. 'கலுவிதரனா'ன்னு சொல்ல - மீனை
    ''கழுவிதரணுமான்னு" விளங்க
    மச்சான் மாட்டிக்கிட்டார்

    ReplyDelete
    Replies
    1. வம்பா வந்து மாட்டிக்கிட்டாரா :)

      Delete
  11. கண்பரிசோதைக்கு வந்தால் கண் தெரியாது என்ற அர்த்தமா?
    கண்வனில் குரங்கைக் காணும் பத்தினி
    தலையில் ஆம்லெட் போடலாம் என்று மனைவி நினைத்துக் கொள்ளப் போகிறாள்
    எள் என்றால் எண்ணையாக வேலை வாங்கும் மனைவி
    குருவிடம் கேட்கக் கூடாத கேள்வியா
    வழக்கமாய்க் கேட்கும் லப்டப் ஒலிதானே ஆளுக்கு ஆள் மாறுபடுமா

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக தெரிவதே போதும்னு அர்த்தம் :)
      ஆஞ்சநேய பக்தையாய் இருப்பாரோ :)
      அதுக்குள்ளே முடி கொட்டிப் போச்சா :)
      பால் என்றால் பட்டரை எடுத்து விடுவாரோ :)
      குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்:)
      தாயின் லப்டப் மட்டுமே மழலை அறியும் :)

      Delete