5 November 2016

தங்க மோகம் குறைந்ததா ,தமிழக பெண்களிடம் :)

இதை கிழவிகூட செய்வாளே :)                 
               ''சபாஷ் ,உங்க பொண்ணு ரெண்டே நிமிஷத்தில் சமைத்து விடுவாளா ,எதை  ?''
                 '' நூடுல்ஸ்சை  தான் !''
இவனுக்கு எதுக்கு செல்போன் :)
              ''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு  தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
             ''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே !''

மருமகளின் 'பன்றி ' காணிக்கை :)
            ''பன்றி உருவம் பொறிச்ச தங்க காசை , நன்றி காணிக்கையா போடுறீயே ,பன்றிக்காய்ச்சல்  யாருக்கு வந்தது ?''
            '' போய் சேர்ந்துவிட்ட என் மாமியாருக்குத்தான் !''

அணை நீர்  மட்டம்னு சொல்லப் படாது :)
          ''உப்பு கரிச்சாலும் கடல்நீர் கடல்நீர்தான்னு ஏன்  சொல்றே ?
          ''கடல்நீர் மட்டம்னு யாராவது சொல்றாங்களா ?''

தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களிடம் :)
(இது இரண்டாண்டுக்கு முன் என்றாலும் இன்றும் இதே நிலைதான் )
தங்கம் கிராமுக்கு 137ரூபாய் குறைந்த போதிலும் ...
இவ்வாண்டு தீபாவளி காலத்தில் 38சதவீதம் விற்பனை சரிந்துள்ளது ...
இதற்கு காரணம் ...
பணப் பற்றாக்குறை ,பணவீக்கம் அதிகரிப்பு ,விலைவாசி உயர்வு ஆகியவைகளாம்...
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கும் வரவிடாமல் தடுக்கிறது ...
டாஸ்மாக் மதுவின் அமோக விற்பனை !
இவ்வாண்டு விற்பனை ,இலக்கை தாண்டி 
ரூபாய் 154கோடியாக உயர்ந்துள்ளதாம் ...
இது கடந்த ஆண்டைவிட 22சதவீத உயர்வாம் ...
கின்னஸ் உலக சாதனையாக இருக்கக் கூடும் ...
தங்கம் விற்பனை சரிகிறது ,டாஸ்மாக் விற்பனை கூடுகிறது என்றால் புரிகிறது ...
தமிழக மக்களிடம் தங்க வடிவில் சேமிப்பாய் மாற வேண்டிய பணம்தான் ...
டாஸ்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில்  நிரம்பி வழிகிறது !

31 comments:

  1. தங்கத்தை வாங்கிவீட்டில் வைத்தால் கொள்ளை அடித்து கொண்டு போய்விடுவதால் மக்கள் அரசாங்க கஜானாவில் சேர்த்து வைக்கிறாங்க.... அரசாங்க கஜானாவில் பணம் இருந்தால்தான் சமுக பிரச்சனைகளுககாகவும் முன்னேற்றத்திற்காகவும் செல்வழிக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. வருமானம் அரசாங்க கஜானாவுக்கு போவதை விட ,தனியார் கஜானாவுக்கு அதிகம் போகிறதே !பொருளாதார வளர்ச்சி எல்லாம் சிலருக்கு தானா :)

      Delete
  2. வெந்து... நொந்து... நூடுல்ஸ் ஆக வேண்டியதுதான்...!

    தகவல் தர தப்பித் தவறிச் சொல்லிட்டேன்...!

    பன்றி உருவத்தில தெய்வமா வந்து என்னோட வாழ்க்கைய காப்பாத்திட்டே... ஒனக்கு நன்றி சொல்வேன் தெய்வமே...! என்ன... டங்கு... டங்குன்னு...வர்றது டெங்குவா... ஏவி விட்டுட்டாளா... எவ அவ...? என்ன மாமி ஆவிதானா...? அவ்... அவ்...!

    ‘கடலோரம் வாங்கிய காத்து... குளிராக இருந்தது நேத்து... கதகதப்பா மாறிடுமோ... காதலித்தால் ஆறிடுமோ...!’ கடல்நீர் மட்டத்தில இருந்துதானே கணக்கு பண்ண வேண்டி உள்ளது...!

    இப்படிச் சொல்லக்கூடாதுன்னுதான் இந்த ஆண்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கவில்லை...! பூரண மதுவிலக்குதானே எங்கள் கொள்ளை...! வரும்... ஆனா வராது...!

    த.ம. 1












    ReplyDelete
    Replies
    1. நூடுல்ஸ் மட்டுமே ஆக்கத் தெரிந்த மனைவியால்தானே :)

      தப்பித் தவறியும் செல் கிடைக்க வாய்ப்பில்லை :)

      செத்தும் கெடுத்தாளா மாமி :)

      மாலை ஆனால் சுகம்தான் :)

      இலக்குதான் விலக்கு ஆயிடுச்சோ :)

      Delete
  3. ஆனால் உண்மையில் நூடுல்சுக்கு கூட இரண்டு நிமிடம் போதாது என்பதுதான் உண்மை!

    இரண்டாவது ஜோக் நடைமுறை உண்மை! ஆப்சென்ட் மைண்ட்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட நாலு நிமிசம்னே வச்சுக்குவோம் ,இதெல்லாம் ஒரு சமையலா :)

      அப்படின்னா செல் தொலையத்தானே செய்யும் :)

      Delete
  4. நூடிஸ்போட இப்படி வழி இருக்கா பகவான் ஜீ!)) நலம் தானே ஜீ!

    ReplyDelete
    Replies
    1. நலமே ,நான் மொக்கை போட வழியிருக்கும் போது,நூடுல்ஸ் போட வழியிருக்காதா:)

      Delete
  5. இரண்டு மோகமும் தவறு தான்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே தீராத மோகமும் கூட :)

      Delete
  6. Replies
    1. 'பன்றி 'க் காணிக்கையை ரசிக்க முடியுதா:)

      Delete
  7. அனைத்தும் ரசித்தேன். நண்பரே!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. #நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே !''#
      இதையும் தொலைத்ததை ரசிக்க முடியுதா):

      Delete
  8. திறமைசாலிதான்
    புத்திசாலிதான்
    நேர்த்திக்கடன்தான்
    உண்மைதான்
    நாடு உருப்படும்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுப் பத்திரம் கொடுக்கலாமா :)
      இவருக்கும் கொடுக்கலாமா :)
      ரொம்பவும் நேர்த்தியான கடன்தான்:)
      உசத்திதானா:)
      நம்ம காலத்திலேயா :)

      Delete
  9. சமைத்து என்பதில் ஒரு எழுத்தைத் தவறாகப் படித்தேன் ஒரு சில நொடிகள் ஏதுமே புரியவில்லை
    தொலைந்த செல்போன் என்றாவது திரும்பி இருக்கிறதா
    போய்ச் சேர்ந்த மாமியாருக்கு ஒரு நன்றிக்கடன்
    அணை நீர் மட்டும் மட்டமா
    டாஸ்மாக்கின் வருமானத்தில்தான் விலை இல்லாப் பொருட்கள் கிடைக்கிறதே குறைந்தது சிலருக்காவது

    ReplyDelete
    Replies
    1. த் துக்கு பதிலா ந் என்று படித்தீர்களா :)
      நாமும் முயற்சி செய்வதில்லையே :)
      பாசமுள்ள மருமகள் அல்லவா :)
      அணைநீர் என்று சேர்த்து சொன்னால் மட்டத்தைச் சொல்லலாம் )
      டாஸ்மாக் வாடிக்கையாளர் அனைவருக்குமாவது இலவசப் பொருட்கள் கிடைக்கிறதா :)

      Delete
  10. Replies
    1. டாஸ்மாக் மதுவின் அமோக விற்பனையை ரசிக்க முடியுதா :)

      Delete
  11. வடிவமைப்பில் மாற்றம் தெரிகிறதே. டிடியின் கைவண்ணம்தானே?

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை ,செய்ய வேண்டிவந்தால் DD உதவத் தயாராய் இருப்பது ,ஆறுதலைத் தருகிறது:)

      Delete
  12. "தமிழக மக்களிடம் தங்க வடிவில் சேமிப்பாய் மாற வேண்டிய பணம் தான்...
    டாஸ்க்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில் நிரம்பி வழிகிறது!" என்ற
    நிலை எப்ப மாறுமோ?

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
    Replies
    1. மக்கள் திருந்தும் போதுதான் இந்நிலை மாறும் :)

      இணைத்து விட்டேன் சகோ !

      Delete
  13. பன்றி உருவம் பொறிச்ச தங்க காசும் அருமைதானே :)

    ReplyDelete
  14. டாஸ்மோகம் கூடியதைத்தான் புள்ளி விபரம் காட்டுகிறது... செத்தார்கள் குடிக்காதவர்கள் எல்லாம்............

    ReplyDelete
    Replies
    1. அந்த கணக்கைப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சும் :)

      Delete
  15. Replies
    1. நூடுல்ஸ் நமக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை தானே :)

      Delete
  16. தகவல் - செல்போன் - பன்றி உருவம் என்று
    அனைத்தையும் ரசித்தேன் சகோதரா.
    இனிமை
    த.ம.12
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. உங்களின் 'ஒரு டஜன்' வோட்டுக்கு நன்றி :)

      Delete