பாலே கெடுதின்னா மூத்திரம் நல்லதா :)
''யூ டியூப்லே என்ன பார்த்தீங்க ,இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க ?''
''சர்க்கரை நோய் வரக் காரணமே நாம் குடிக்கிற பால்தான்னு ஒரு டாக்டர் சொல்றார் ,மாட்டு மூத்திரத்தைக் குடிச்சா நல்லதுன்னு சிலர் சொல்றதை நினைச்சேன் ,அதான் !''
அப்பன் புத்தி அறிந்த பையன் :)
''எனக்கு குழந்தைகள் அதிகம் என்று, எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''ஜனவரி ,பிப்ரவரின்னு ஆரம்பித்து ,பத்தாவது மாதத்தை டெலிவரின்னு உங்க பையன் சொல்றானே !
இரண்டுமே பரம்பரையாய் தொடருதே :)
''என்ன சொல்றே ,உங்க தாத்தா பணமும் கொடுத்து ,செலவும் கொடுத்துட்டு போயிருக்காரா ?''
''ஆமா ,சொத்தும் கொடுத்து ,சர்க்கரை நோயையும் கொடுத்துட்டு போயிருக்காரே !''
சம்சார ஆசை இன்னுமா விடலே :)
''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''
ரஜினி மட்டுமா கோச்சடையான் :)
''மதுரைக்காரங்க எல்லாரும் கோச்சடையான்தான்னு சொல்றீங்களே ,எப்படி?''
''பல வருசமா கோச்சடையில் இருந்து வர்ற தண்ணீரை குடிச்சிட்டுத்தானே அவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க !''
நேற்றைய 'சிரி ' கதையை பலரும் (?) ரசித்ததால் ...இதோ ,மீண்டும் ஒரு மீள் பதிவு ......
-------------------------------------------------------------------------------------------------
அடுத்து நடந்தது என்ன ? தெரிஞ்சுக்க நாளைக்கு இதே இடத்திற்கு வாங்க !

|
|
Tweet |
‘ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு... எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு... காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்...!’ தாய்ப்பால்தான் குடிச்சா சர்க்கரை நோய் வராதோ...?!
ReplyDeleteகுழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.- குறளின் குரலை நல்லாக் கேட்டிருக்கேன்...! ஆமா... இப்பல்லாம் உடனுக்குடன் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படுமுன்னு சொல்றாங்களே...!
அப்பத்தான் உயிருள்ளவரை அவர் நினைவிருக்குமாம்...!
‘இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்...’ பாட்டுத்தான் பாடுறார்...!
கோச்சடைன்னா கோவிச்சிக்காதிங்க... அப்புறம் சிக்காயிடுவீங்க...!
‘வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை...! இன்று போய் நாளை வாராய் ...!’
த.ம. 2
தாய்ப்பால் குடிச்சவனுக்கும் சர்க்கரை நோய் வரத்தானே செய்யுது :)
Deleteவீட்டிலேயே பிரசவமானால் டோர் டெலிவரி தானே :)
ஜீனுக்குள் இருப்பவரை எப்படி மறக்க முடியும் :)
இந்த மயக்கம் இவருக்கு மாலையில் மட்டுமல்ல ,எந்நேரமும் உண்டே :)
சீக்கு வராமல் போனால் சரிதான் :)
எங்கேயும் போயிடாதீங்க இங்கேயே இருங்கன்னு சொல்ல முடியாதே :)
ர்சித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
மாட்டு மூத்திரம் உடம்புக்கு நல்லதுன்னு சொல்வதை ரசிக்க முடியுதா :)
Deleteசிரிப்புதான் வருது
ReplyDeleteநல்ல பயிற்சிதான்
இந்திய(ன்)தாத்தா
நல்ல கணவன்
தமிழ்நாட்டில் பல இடங்களில் சாக்கடை நீர்தான் குடிக்க வேண்டிய நிலை
தொடர்கிறேன் ஜி....
மாட்டு மூத்திரம் குடித்தாலாவது சிரிப்பு நிற்குமான்னு தெரியலே :)
Deleteபயபிள்ள நல்லா வருவானா :)
பெரும்பாலான தாத்தாக்கள் இப்படித்தான் போலிருக்கே:)
இரண்டு மாலையும் அவர் போட்டுக்காம இருந்தால் நல்லதா :)
அப்படி வந்தால் தானே பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளின் தண்ணீரை வாங்குவீர்கள் :)
நயன்தாராவின் நாட்டியத்தை மறக்கவில்லைதானே :)
வணக்கம்
ReplyDeleteஜி
யாவற்றையும் படித்து மகிழ்ந்தேன் அற்புதம் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
'மேக்லா'வையும் ரசீத்தீர்களா :)
Deleteரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
ReplyDelete-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாசித்தேன் ,ரசித்தேன் ,என் கடமையையும் செய்தேன் ஜி :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteத ம 7
ஏற்கனவே நீங்க 'கெட்ட பாலைப்' பற்றி எழுதி இருந்தீர்களே ,நினைவுக்கு வந்ததா :)
Deleteதினம் தினம் பல ஜோக்குகள், பல பின்னூட்டங்கள், ஜோக்கான கதை ஒன்னு என்றிப்படி எழுதித் தள்ளுகிறீர்கள். எப்படி முடிகிறது பகவான்ஜி!?
ReplyDeleteதிரு. நான் மானுடன் அவர்களின் தளம் படிக்க முடியவில்லை நிற்க மறுக்கின்றது.... ஏன் ?
Deleteநீல நிறத்தில் உள்ளது மட்டுமே இன்றைய சிந்தனை ,மற்றவை எல்லாம் கடந்த ஆண்டுகளின் இதே நாளின் சிந்தனைகள் ,கதை விட ஆசைதான் ,நேரமில்லையே ஜி :)
Deleteகில்லர்ஜி,'நான் மானுடன்' தளம் நன்றாகத்தானே எடுக்கிறது,எனக்கொண்ணும் பிரச்சினை தெரியவில்லையே:)
Deleteதம +
ReplyDeleteமாட்டுப்பால் குறித்து இயற்கை ஆர்வலர்கள் நிறையச் சொல்கிறார்கள்
மருத்துவர் திரு சிவராமன் அவர்களின் காணொளியே ,இந்த பதிவுக்கு காரணம் ,அவரின் பேச்சு சிந்திக்க வைக்கிறது :)
Deleteபாலில் தவறு இல்லை அதில் கலக்கப்படும், நச்சு பொருள்களான யூரியா ,சுண்ணாம்பு, தேவையற்ற மிருக கொழுப்புடன், இன்னும் எத்தனையோ வகை பொருட்கள்தான் காரணம். எல்லாம் அறிந்தவர்களும் எதுமே அறியாதவர்களும் பாதிக்கப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ReplyDeleteஅறுபதுகளில் தொடங்கிய கலப்பின பசுக்களின் பாலில் இருந்துதான் சீரழிவு தொடங்கியதாம் ,அந்த பாலில் கணையத்தைச் செயல் இழக்கச் செய்யும் ரசாயனம் இருந்ததைச் சுட்டி காட்டியிருக்கிறார் டாக்டர் சிவராமன்,பாலே விஷமாகி விட்ட நிலையில் மூத்திரம் எம்மாத்திரம்:)
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteஇனிமையான நோயைப் பற்றிய பதிவாச்சே :)
Deleteமனித மூத்திரமே மருந்துக்குச் சமம் என்று ஒரு பெரியவர் சொல்லி இருக்கிறார்
ReplyDeleteஃபெப்ருவரிக்கும் டெலிவெரிக்கும் நீண்ட இடைவெளி வரி இருக்கிறதே
கொடுத்ததுதான் கொடுத்தான் யாருக்காகக் கொடுத்தான்
இது எந்த மாலை சபரிமலை சீசன் மாலையா
கோச்சடையா சாக்கடையா
சிறுகதை அது ஒரு தொடர்கதை
இவ்வளவு பெரிய உண்மையைக் கண்டு பிடித்த அவர் மகாபெரியவர்தான் :)
Deleteஇருக்கத்தானே செய்யும் சிசு வளர வேண்டாமா :)
எங்க பாட்டன் சொத்துன்னு சந்தோஷப் பட முடியலியே :)
மனைவியை தள்ளி வைக்கிற மாலைதான் :)
ஆறே சாக்கடை ,தண்ணீர் மட்டும் மினரல் வாட்டாராவா இருக்கும் :)
படிக்க பொறுமையும் ,நேரமும் இல்லாம போச்சே ,அதான் :)
சர்க்கரை நோய்க் காரணம்.
ReplyDeleteடெலிவரி மாதம்.
சொத்தும் செலவும்.
போன்றவை ரசித்தேன்
தமிழ் மணம்- 11
https://kovaikkavi.wordpress.com/
உங்க தலைப்பூக்களும் அருமை ,தமிழ் மணம் அதைவிட அருமை :)
Deleteநீங்களும் கோச்சடையான்தானே :)
ReplyDeleteமனிதர்கள் வணங்குற சாமிகளுக்கே..சம்சார ஆசை விடலே...இதிலே மனிதர்களுக்கு எப்படி ஆசை ஒழியும்????
ReplyDeleteமனிதன் படைத்த சாமிக்கு மனித பலவீனங்களும் இருக்கத்தானே செய்யும் :)
Delete