16 November 2016

கண்ணுக்கு மை அழகு ,விரலுக்கு :)

நோட்டுக்கு வலது,ஓட்டுக்கு இடது கை விரலிலும் அடையாள மை :)
          '' உங்க இரண்டு ஆட்காட்டி விரலிலும் மை அடையாளம் இருக்கே ,ஏன் ?''
           '' ஒண்ணு ,என் பணத்தை நான் எடுத்துக்க வங்கி வச்ச மை  ,இன்னொன்னு என் பணத்தை MLA சுரண்டி  எடுத்துக்க தேர்தல் வச்ச மை !''

நாசூக்கா சொன்ன இவர், நல்ல நண்பர்தானா :)
            ''என் வீட்டிலே வெற்றிலைக் கொடி செழிப்பா படர்ந்து இருப்பதைப் பார்த்தால் அதிசயமா இருக்கா ,ஏண்டா ?''
            ''நல்லெண்ணம் உள்ளவர்கள் வீட்டில் மட்டும்தான் வெற்றிலைக் கொடி படரும்னு சொல்வாங்க ,அதான் !''

கிளினிக் வாசல்லே ஆட்டோ இதுக்குத்தானா :)
           ''இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா சுகப் பிரசவம் ஆகாது!''
            ''நடந்துகிட்டே இருக்கவா டாக்டர் ?''
            ''ஊஹும் ..வாசல்லே நிற்கிற ஆட்டோவிலே ஒரு மணி நேரம் சுத்திட்டு வாங்க !''

தங்க நகை HALL MARK தானா நல்லாப் பாருங்க :)
         ''HALLMARK ன்னு நம்பி வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
          ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
          ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான்  போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா :)
மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூட காணாது  போலிருக்கே ...
உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,உப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையை கேட்கும் போதே அயோடெக்சை தேடவேண்டியிருக்கிறது  ...
அயோடின் உப்பு என்றால் ஐநூறு  ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !

18 comments:

  1. உப்பு அதிகம் உடம்புக்கு ஆகாதே!
    இரத்த அழுத்தம், காது கேளாமை இரண்டிற்கும் பாதுகாப்பு

    ReplyDelete
    Replies
    1. தேவைக்குகூட உப்பு கிடைக்காது போலிருக்கே :)

      Delete
  2. Hall mark - Half mass

    சரியாகப் படிப்பிப்பதேயில்லையே நாம்!!

    ReplyDelete
    Replies
    1. முதலில் இரண்டுக்கும் உள்ள அர்த்தம் தெரியணுமே :)

      Delete
  3. Replies
    1. மை ஒண்ணுதான் ,கைதான் வேற வேற :)

      Delete
  4. ‘கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே... அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்...’ கைக்கு மை அழகு...!

    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்...
    வெற்றி இலை...!

    ‘நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்... நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா...!’

    நல்லாப் பாருங்க... ஹலால் முறையில் ஓதி அறுக்கப்பட்டது...! ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்...!

    ஒரு படி உப்புப் போட்டு... உப்புமா கிண்டி வையடி...அடியே உப்புமா கிண்டி வையடி...! அப்பத்தான் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க முடியும்...!

    த.ம. 3




    ReplyDelete
    Replies
    1. கைக்கு மெஹந்தி அல்லவா அழகு :)

      எப்போதும் வெற்றி இலையாய் இருக்க முடியாது ,வெற்று இலையாகவும் கூடும் :)

      என் பிள்ளைக்கொரு பேர் வச்சு தரவேணாம் ,பெத்தவங்க நாங்க வச்சுக்கிறோம் :)

      தரத்தில் மாஸ் இல்லேன்னா அதை தலாக் பண்ணிவிடவேண்டியதுதானே :)

      உப்புமாவும் வேண்டாம் ,உள்'அளவும் 'வேண்டாம் :)











      Delete
  5. Replies
    1. அடையாள மை அழகுதானா :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. நாசூக்கா உண்மையை போட்டு உடைத்த நண்பரை ரசிக்க முடியுதா :)

      Delete
  7. கண்ணுக்குதான் மை அழகு ,விரலுக்கு மை அழகில்லை

    ReplyDelete
    Replies
    1. நெற்றியில் வைக்கச் சொல்லிடலாமா :)

      Delete
  8. இப்படியும் மையா ?
    பபுள்ளக்கு திமிறுதான்
    அப்படீனாக்கா... ஆட்டோக்காரருக்குத்தான் பணம் கொடுக்கணும்
    ஆஹா கவனம் தேவை.
    நம்ம தமிழ்நாட்டுக்கு உப்பு போட்டுதான் என்ன ஆகப்போகுது ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி அதிசயம் நடக்கும் நேரத்தில் நீங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டீர்கள் :)
      அவர் வீட்டு வெற்றிலையைச் சாப்பிட்டு அவருக்கு எதிரா பேசுறானே :)
      அவர் வாங்காமல் விட மாட்டாரே :)
      நகை கடைக்கு போகும் போது ,கையோட லென்ஸ் கொண்டு போறது நல்லது :)
      ஊறுகாயில் இல்லாத உப்பா ?போதையில் அது கூட உறைக்க மாட்டேங்குதே :)

      Delete
  9. MLA சுரண்ட ஏன் அனுமதிக்க வேண்டும்
    நான் நல்லெண்ணம் உள்ளவன் என் வீட்டில் வெற்றிலைக் கொடி செழித்து வளருகிறது
    ஆட்டோவில் சுற்றுவது நல்ல யோசனை சில சமயம் கிளினிக் வரும் முன்னே பிரசவம் ஆகலாம்
    பதிவுகளைப் படிப்பது போல் படித்தால் இப்படித்தான்
    நம் மக்கள் வதந்திகளை சீக்கிரம் நம்புவார்கள்

    ReplyDelete
    Replies
    1. MLA நம்மைக் கேட்டா சுரண்டுகிறார் ,அவர் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் நம்மால் தடுக்க முடியாதே :)
      ஒரு போட்டோ எடுத்து பதிவிலே போடுங்களேன் :)
      செலவு மிச்சம்தானே :)
      ஆனால் நீங்கள் அப்படியில்லையே :)
      தந்தியை விட வேகமாய் போகும் வதந்தி :)

      Delete