22 November 2016

புருஷனின் தவிப்புக்கு காரணம் புரியுதா :)

             ''என்னங்க ,பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டி கூட, அவரோட  புருஷன் வீட்டுக்கு வரலையேன்னு கவலைப் படலே ,நீங்க ஏன் கிடந்து தவிக்கிறீங்க ?''
            ''அவர் வந்தாதானே 'ஓபன் ஃவை பை ' ஆன் ஆகுது ?''

 பிடித்ததை தருவது நல்லதுதானே :)
           ''என்ன சொல்கிறீர்கள்  அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரியவில்லையே ?''
            ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா :)
          ''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு தலைப்பு  வைக்கலாமா ,ஏன்?''
           ''சினிமாவில்  உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு  தொடர் எழுதியிருக்காரே அவர்  !''

எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் ஐ ':)
          நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே  பற்றிக் 
         'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?

நேற்றைய ,சீரியஸ் கதையின் தொடர்ச்சி .......
படித்தால் மட்டும் போதுமா ?

20 comments:

  1. ஹாஹாஹா இதுதான் காரணமா ?
    எல்லாம் பதற்றம்தான்
    சரிதான்
    இருக்கலாம்
    இரசித்தேன் நன்று

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன நினைச்சீங்க :)
      இவரோட டீலிங் அப்படி :)
      அவரைக் கேட்டால் கேப்புமில்லே டூப்புமில்லேன்னு சொல்றாரே :)
      அனுபவம் இல்லையோ :)
      அய்யாவோட ரகசியம் புரிந்ததா :)

      Delete
  2. வை ராஜா வை... வை பை ராஜா வை...!

    மன்னா...! நட்புறாவை பறக்க விடுங்கள்...!

    போடா போடா புண்ணாக்கு... போடாத தப்பு கணக்கு...!

    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை... தந்துவிட்டேன் என்னை...!

    யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. அனுபவி ராஜா அனுபவி ,ஓசியில் எல்லாவற்றையும் பார்த்து அனுபவி :)

      வரும் அரசருக்கு சேனை ரோஸ்டுக்குப் பதிலா புறா ரோஸ்ட் வைத்து விடாதீர்கள் மன்னா :)

      இனிமே சொல்லி என்ன ஆகப் போவுது :)

      மூளை மழுங்கின பிறகு எங்கே சிந்திக்கிறது :)

      யானைக்கு மணி கட்டியிருந்தால் தானே ஓசை முன்னே வரும் :)

      Delete
  3. Replies
    1. புண்ணாக்கு ஆன புலிகேசியையுமா :)

      Delete
  4. Replies
    1. அருமை ,லவ் அட் பர்ஸ்ட் 'சைட்டும்' தானே :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது இந்த காதலுக்கும் பொருந்துமா ஜி :)

      Delete
  6. பக்கத்து வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
    விருப்பமான சேனை கிழங்கா
    போடாப்போடா புண்ணாக்கு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    இதிலும் சஸ்பென்ஸா

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை பக்கத்துக்கு வீட்டுக்காரன் ஃவைபைக்கு மாட்டும் ஆசைப் பட்டார் :)
      சேனை பிடிக்கும்தானே உங்களுக்கும் :)
      தப்பு கணக்கு அவர் போட்டுவிட்டாரா :)
      அது எல்லாம் ,தாலிக்கு அப்புறம் :)
      உங்களுக்கும் புரிந்து இருக்குமே:)

      Delete
  7. மாப்பிள்ளை என்று வரவேற்பதும்
    தம்பி என்று விடைபெறுவதும்
    எதையோ சொல்லுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புரிந்தது ஜோக்காளிக்கு உடனே புரியவில்லையே :)

      Delete
  8. பக்கத்து வீட்டுக்காரருக்கு கவலை நன்று

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து வீட்டு வை பைக்கு ஆசைப் படலாம் , வொய்ப்புக்கு ஆசைப்படலாமா:)

      Delete
  9. எனக்கு காரணம் தெரிஞ்சு போச்சு............

    ReplyDelete
    Replies
    1. யார்கிட்டேயும் சொல்லாதீங்க,ரகசியமா வச்சுக்குங்க:)

      Delete
  10. அனைத்தையும் ரசித்தேன் நன்று

    தமிழ்மணம் - 10
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தவிப்பு சரிதானே:)

      Delete