21 November 2016

மனைவியிடம் பிடி கொடுக்க விரும்பாத கணவன் :)

                 ''என்னங்க ,அந்த தைலத்தை  வழுக்கைத் தலையிலே தேய்த்தால்  முடி வளருதாமே ,ஏன் வாங்க மாட்டேங்கிறீங்க ?''
                ''உன் கைக்கு பயந்துதான் !''

இந்த மாதிரி சொல்லும், நாளும் வருமோ :)
            ''இந்த ரேஷன் கடையிலே உப்பு பாக்கெட் கட்டாயமா வாங்கியே ஆகணும்னு சொல்றாங்களே ,நியாயமா ?''
            ''அட நீங்க வேற ,டாஸ்மாக்  சரக்கை வாங்கியே ஆகணும்னு சொல்லாம விட்டாங்களே சந்தோசப் படுங்க !'' 
அப்பனே ,வயசுப் பொண்ணுக்கு தடை போடலாமா :)
             ''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
              ''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு  மரியாதை இல்லாமே என்னை கிண்டல் பண்ணுவாங்களே !''

இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி :)
             ''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கா ,ஏன் ?''
             ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி :)
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காவே சொல்லப் பட்டதா?
இந்த சந்தேகம் ஏனென்றால்....
மாநிலத்துக்கு நன்மையோ இல்லையோ ...
தங்களுக்கு  பொன் முட்டையிடும் இலாகாவை மட்டும் வளைத்துக் கொண்டு விடுகிறார்களே !

கடந்த மூன்று தினங்களாக 'சிரி'கதை படிச்சு ரசித்தீர்கள் (?),ஒரு  மாறுதலுக்கு ஒரு 'சீரியஸ் 'கதையையும் படிக்கலாமே :)

இதற்கு  மணி அய்யா சொன்ன பதிலை நாளைப் பார்க்கலாமா ?

16 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி. படித்தால் மட்டும் போதுமா கதையும் நன்றாக ஞாபகம் இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மணி அய்யா சொன்ன பதிலும் ஞாபகத்தில் இருக்குமே :)

      Delete
  2. இப்பவே தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையாத்தான் இருக்கேன்... இது வேறயா...?!

    நல்ல சரக்கு... நம்ம நாட்டு சரக்கு...!

    சாரிப்பா... இனி மரியாதையா கேக்கச் சொல்றேன்... ‘யார் உனக்கு அப்பர்’ன்னு... போதுமா...?

    பத்த வச்சிட்டியே பரட்டை...!

    பொன் மனச் செம்மல் அல்லவா...?!

    மணி இடம் கொடுக்க மறுக்கிறது...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அப்படி இருந்துமா மரண அடி :)

      நாட்டு சரக்கு என்றால் கள்,சாராயம் இல்லையா :)

      அப்பர் ,திருநாவுக்கரசரை எல்லாம் பசங்க விரும்புவாங்களா:)

      வெடிக்கும் போதுதானே தரகரோட அருமை தெரியுது :)

      வழிகாட்டி அவர்தானா :)

      உழைப்பை மதித்தால் மணி இடம் கொடுப்பார் :)

      Delete
  3. Replies
    1. மனைவியிடம் பிடி கொடுக்க விரும்பாத கணவனையும்தானே:)

      Delete
  4. புடுங்கிடுவாளோ...
    சரிதான் இனிமேல் சொல்லுவாங்க...
    உண்மைதானே....
    பொருத்தம்தான்.
    காரியவாத்கள்தான்
    தொடர்கிறேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஒரே தடவையில் புடுங்கிட்டாலும் பரவாயில்லை ,ஒவ்வொரு முறையும் குடுமியைப பிடித்து கும்முவாளே:)

      சேள்ஸ் இம்ப்ரூமென்ட் பண்ண வேற வழியே இல்லையா :)

      இல்லைன்னாலும் கிண்டலே பண்ண மாட்டாங்களா :)

      பிரிக்க முடியாத பொருத்தமா :)

      வீட்டிலே கல்யாணம் என்றால் ஐநூறு கோடி ஏன் செலவு செய்ய மாட்டார்கள் :)

      என்ன தப்புன்னு யூகிக்க முடியுதோ :)

      Delete
  5. வெ ல் டி ங் அருமை

    ReplyDelete
    Replies
    1. இவர் பற்ற வைத்தாலும் ஸ்ட்ராங்கா இருக்கும் :)

      Delete
  6. தொடரும் கதை தொடர - நானும்
    தொடர்ந்து வருவேன் - உங்கள்
    தொடரைப் படிக்க...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையே எனக்கு உவகை ,வாருங்கள்:)

      Delete
  7. தலை வழுக்கையாக இருந்தால் நிறைய அறிவு இருக்குமுன்னு வலி வலி வந்த நம்மிஃஃஃஃக்கை...அதில் முடி வளர்ந்தால் அறிவு மழுங்கி போய்விடும் என்ற கரணமும் இருக்கலா...ம் அல்லவா.......

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமா ?'அந்த' விசயத்திலும் கில்லாடிகளாய் இருப்பார்கள் என நம்பப் படுகிறது ,முடி வளர்ந்தால் அதில் ஆட்டம் கண்டுவிடுவார்களா :)

      Delete
  8. 'தன் கையே தனக்குதவி’ என்பதை ஏன் மறந்தார்?!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,தனக்கு ஆபத்து வரும் போது உதவாத கை இருந்தாலென்ன ,போனாலென்ன :)

      Delete