14 November 2016

புருஷன் பெண்டாட்டிக்குள் ஒத்து வரலேன்னா :)

கண்ணுக்குத் தெரியாது என்பது மட்டுமா :)
      ''எங்கும் நிறைந்திருக்கும்  வை ஃபை  மாதிரிதானா கடவுளும் ?''
      ''ஆமாம் ,துட்டுப் போட்டாதானே பலன் கிடைக்குது ?''

ஆட்டோவுக்கும்   காசிருக்காது :)             
           ''என்ன சொல்றீங்க ,சொந்த காரிலே வந்து இறங்கின அந்த நோயாளியா  ஏழை ?''
            'ஆமாம் டாக்டர் ,அட்மிட் ஆகும் போது  கோடீஸ்வரனா இருந்தாராம் !''
      
மகிழ்ச்சியும் ,வெறுப்பும் தரும் ஒரே வார்த்தை  இதுதான் :)
         ''டாக்டர் சொன்னப்ப சந்தோசமும் ,ரேசன் கடைக்காரர் சொன்னப்ப  கோபமும் வந்ததா,அதென்ன வார்த்தை ?''
         ''உங்களுக்கு சர்க்கரை இல்லை !''

ஓடிப் போக நல்ல நேரம்தான் :)
             ''ஐயையோ ,கல்யாணம் பண்ணிக்க ,நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''
             ''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவர் கண்டுக்க மாட்டார்  ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''

காதலில் உண்மை உண்டா:)
             ''உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்று  பாடுற பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணனும் !'' 
             ''என்னான்னு?''
              ''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும்  ஏன் காதலிக்கிறேன்னுதான் !''

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படியா  பண்ணுவது :)
புருஷன் பெண்டாட்டிக்குள் ஒத்து வரலேன்னா ...
சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...
கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
பாலன்ஸ்  செய்து நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
       நாம் பிறக்கும்  முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

25 comments:

  1. மூளைக்கு வேலை தரும் கதை

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்ணுக்கு மூளை வேலை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே :)

      Delete
  2. சர்க்கரை இல்லாத ஜோக் சூப்பர் ஜி. அந்தக் கதை.. அது போல ரயிலில் இவனுடன் அழகான பெண்.. இவன் என்னவோ ஏதோ எண்டு ஜொள் விட, அவள் கத்தியைக் காட்டி மிரட்ட, இவன் தான் செவிட்டூமை என்று சொல்லி எழுதிக் காட்டச் சொல்லி அதனை வைத்து மிரட்டுவதாக வரும் கதையையும் ரசிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன கதை ,தலைப்பையும் சொல்லலாமே ஜி :)

      Delete
  3. துட்டுப் போட்டா... தானே பலன் பூசாரிக்குக் கிடைக்கும்... சுட்டுப் போட்டாலும் வராது...கட உள்...!

    ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ங்கிறது இதுதானோ...?!


    டாக்டர் “சர்க்கரை வரும்... ஆனா வராது...!” ரேசன் கடைக்காரர் “ சர்க்கரை இருக்கு... ஆனா இல்லை...!” இது எப்படி இருக்கு...?!

    எப்பபடியாவது வீட்டை விட்டுப்போனா போதும்ன்னு நினைப்பாரு...!

    ‘நான் காதலிக்கிறேன்’னு சொன்னது மட்டும் உண்மையா...?!

    ஜஸ்ட் மிஸ்... சாரி மிஸஸ்... குட் பை...!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. அர்ச்சகர் தட்டுலே துட்டு விழுந்தால்தான் கடவுளுக்கே ஆரத்தி என்பது சரிதானே :)

      அதற்குள் நாடி அடங்கிடும் போலிருக்கே :)

      வராதுன்னா சந்தோஷம்,இல்லைன்னா சந்தோஷப் பட முடியுமா :)

      கண்ணில் பட்டாலும் கண்டுக்க மாட்டோரோ :)

      நல்ல ஜோடிதான் :)

      கெடுவாள்கேடு நினைப்பாளா :)

      Delete
  4. Replies
    1. தம்பதிக்குள் சண்டை : "வாராய் நீ வாராய்... போகும் இடம் வெகு தூரமில்லை" எனும் பாடல் நினைவுக்கு வந்தது ஜி...!

      Delete
    2. கொல்வதற்கு அவருக்குக் கிடைத்தது மலைஉச்சி,இவருக்கு குளத்தங்கரை :)

      Delete
  5. இதுக்குத்தான் கோயில்களில் உண்டியல் வைக்கிறாங்களா ?
    கார் இல்லாமல் ஆட்டோவில் போறவன் ஆட்டோவை விற்க முடியாதே... ?
    இருந்தாலும் ரேஷன் கடையில் வேலை செய்வது பாவச் செயல்தானோ... ?
    மகளுக்கு தெரியாத தகப்பனா ?
    டைம்பாஸுக்குத்தான் பாஸ்
    என்றும் இரசிக்கும் கதையே...

    ReplyDelete
    Replies
    1. இப்போ நாலணா தேறாத உண்டியலில் கூட லட்சக்கணக்கில் பணம் விழுதாமே:)
      ஏன் சொந்த ஆட்டோ யாரிடமும் இல்லையா :)
      டாஸ்மாக் வேலை மட்டும் புண்ணியமா :)
      அவர்தான் மகளை அனுப்பி விட வந்திருப்பாரா :)
      அவளுக்கு டைம் பார் ஆகிவிடுமே :)
      அந்த காலத்து செம :)

      Delete
  6. அட..கவிமணிக்குள் இத்தனை கொடூரம் இருந்தது இப்பத்தான் வெளிவருகிறது...

    ReplyDelete
    Replies
    1. டேக் இட் ஈசி!ஜஸ்ட் ஃபன் என்று எடுத்துக்கலாமே ஜி :)

      Delete
  7. சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ரேசன் கடை சீனி இனிக்குதா :)

      Delete
  8. அதுதான் திருப்பதி உண்டியல் நிரம்பி வழிகிறதோ
    இன்றைய நிலையில் காசிருந்தும் ஏழைதான் அதை நினைவூட்டுகிறது
    எங்களுக்கு சர்க்கரை இல்லை என்று சொல்ல ரேஷன் கடைக்கா போகிறோம்
    அப்பாடா ஒரு பொறுப்பு விட்டது
    கவிதைக்கு பொய் அழகு
    ஒரு கதை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. திருப்பதி உண்டியல் மட்டும்தானா :)
      கைக்கு எட்டியும் வாய்க்கு எட்ட மாட்டேங்குதே :)
      ரேசன் கார்டு இருந்தால் அங்கேதானே போகணும் :)
      அப்பாடா,அப்பாவோட ஒரு பாரம் குறைந்தது:)
      கவிதை பொய் சொல்லலாம் ,கவிஞன் சொல்லலாமா :)
      ஜோரான கதைதானே :)

      Delete
  9. Replies
    1. உங்களுக்கும் ,செந்தில் குமார்ஜிக்கும் நடுவில் வந்து த ம வோட்டு போட்டது யார் ?:)

      Delete
  10. அனைத்தையும் ரசித்தேன்..!
    த ம 10

    ReplyDelete
    Replies
    1. பத்திலே ஒண்ணா நீங்களும் வாக்களித்தமைக்கு நன்றி :?)

      Delete
  11. // ''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவர் கண்டுக்க மாட்டார் ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''//

    வியாதி இல்லேன்னாலும் கண்டுக்காத அப்பாக்கள் இருக்கிறார்கள். செலவு மிச்சம்!

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை ,மகளை வழி அனுப்ப வந்த அப்பாவாக இருப்பாரோ :)

      Delete
  12. ஆகா கையக் கட்டி கதையை முடித்தவன் ...மயூரம் இன்னும் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் செமை ஹாஸ்யமான பேர்வழி போல
    தம +

    ReplyDelete
  13. ஃவைபை கிடைக்கும் ,அருள் கிடைக்குமா நண்பரே :)

    ReplyDelete