19 November 2016

உறவிலே முடித்ததால் உண்டான பிரச்சினை :)

மூணு  சக்கரத்துக்கே டிரைவர் இருக்காரே :)
               ''டிரைவர் இல்லாத பஸ் ஓட சாத்தியம் இல்லேன்னு ஏன் சொல்றே ?''
               '' ஆட்டோன்னு சொல்றாங்க ,அதுக்கே ஒரு டிரைவர் இருக்காரே !''

  உறவிலே முடித்ததால் உண்டான பிரச்சினை :)
             ''உறவிலே திருமணம்னா ,பின்னாலே பிரச்சினைன்னு  சொன்னப்ப  கேட்கலே , இப்போ ..மூக்கு  மூளியா பிள்ளைப் பிறந்து இருக்கான் !''
            ''பின்னாலே பிரச்சினைன்னா ஃபைல்ஸ் னு நினைச்சேன் , இப்படின்னு நினைக்கலே ,டாக்டர் !''

'டாஸ்மாக்'  மூடினா இவருக்கு லாபம் :)
               ''டாஸ்மாக்  கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
              ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''

மூணு வருசத்திலே டிகிரி வாங்கியது அந்த காலம் :)
             ''உங்க பையன் மூணு வருச படிப்பை வெற்றிக்கரமா  முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலை ஏதும் தேடுறானா ?''
              ''அட நீங்க வேற ,அவன் படிச்சு  முடிச்சது prekg ,Lkg ,Ukg தான் !''

கண்ணுக்கு குளிர்ச்சி அவள் :)
         ஊட்டியிலும்  இல்லை 
         நகரும் பூந்தோட்டம் .....
         ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி !
நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி.......
கேட்காத காதும் கேட்கும் !


 (அப்பாவுக்கு  காது  எப்படி கேட்க ஆரம்பித்தது  என்பதை, நாளைக்கு  தெரிஞ்சுக்குங்கலாமே !)

23 comments:

  1. நடை வண்டிக்கே டிரைவர் வேணுமே...
    ஹாஹாஹா
    அனுபவம்தான்
    அப்புறம் என்ன ?
    இந்தப் பொண்ணா ?
    ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டின்னா சும்மாவா ?ஹாரன் இல்லைன்னாலும் மணி ஆட்டிகிட்டே ஓட்ட டிரைவர் வேணும்தான் :)
      பைல்ஸ்னா பரவாயில்லையோ :)
      வாங்கின கை அரிக்கத்தானே செய்யும் :)
      பொண்ணு பார்க்கச் சொல்லிவிடலாமா :)
      இப்படி கேட்டு விட்டதால் பொண்ணை மாற்றிட்டேன்,நம்ம மானுடனுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு ...நீங்க பார்த்து ஓகே பண்ணுங்க :)
      குரங்கு மார்க் வெடி ஓசை நல்லாயிருக்கா :)

      Delete
  2. முதல் இரண்டு ஜோக்ஸ் மற்றும் குளிர்ச்சி கவிதையையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிதை மட்டுமா குளிர்ச்சி :)

      Delete
  3. நியுட்ரல்ல வைச்சு... நாலு பேர் பஸ்ஸ தள்ளிவிட்டா... டிரைவர் இல்லாம தானா ஓடுது... இதுக்குப் போயி அலட்டிங்கலாமா...?!

    மூக்கு மூளியா பிள்ளைப் பிறந்து இருக்கான்... மூக்கு மூளி இல்லேன்னாத்தானே பிரச்சனை... விடுங்க டாக்டர் மூக்குன்னா சளி இருக்கத்தானே செய்யும்...!

    ஏட்டு மாமூலா நினைக்கிறதுதானே...!

    அட நீங்க வேற... குப்பையக் கிண்டாதிங்க...தோட்டத்தில...!

    “பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா...?!” கொலையும் செய்வாள் பத்தினின்னு நெனக்கிறப்ப பயமா இருக்கு...!

    ‘காது’ கொடுத்துக் கேட்டேன்...! கேக்காது... கேக்காத காதும் கேக்கும்...!

    த.ம. 5




    ReplyDelete
    Replies
    1. பயணிகளை இறக்கி விட்டு தள்ளி விடுங்க :)

      இங்கே மூக்கு இல்லாமலே சளி வருதே :)

      மாமூல் நினைப்புத்தான் வயிறை வளர்க்குதோ :)

      குப்பையா இருந்த அதுக்கு பெயர் தோட்டமில்லை,காடாச்சே :)

      கொலை செய்ற மாதிரி ஏன் நடந்துக்கணும் :)

      எல்லா காதுக்கும் எல்லா நேரமும் எல்லாம் கேட்கும்னு சொல்ல முடியாதில்லே :)

      Delete
  4. ஆட்டோ நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தானாக இயங்க மாட்டேங்குதே :)

      Delete
  5. ஆட்டோ நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அதற்கு தமிழில் தானி என்பதும் நன்றாகயிருக்கே :)

      Delete
  6. அனைத்தும் அருமை!
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. காது கேட்ட கதை எப்படி இருக்கு ஜி :)

      Delete
  7. // நகரும் பூந்தோட்டம் .....//

    ரசித்தேன்; படம் பார்த்துச் சிலிர்த்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நான் மானுடன் உங்கள் தளம் மூவிங்கிலேயே இருக்கின்றது படிக்க முடியவில்லையே...

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன். கேளா காது கேட்டது பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்று ,காது சரியான விதம் அறிந்திருந்திருப்பீர்கள் ,சரியான முடிவுதானே :)

      Delete
  9. ஆட்டோ மேடிக்கா சிரிப்பு வந்தது! பாராட்டுக்கள் ஜி!

    ReplyDelete
    Replies
    1. அப்படி வந்தாதான் சிரிப்பு ,இல்லைன்னா இளிப்பு :)

      Delete
  10. செமஸ்டர் இல்லா மூன்று வருடப் படிப்பு கஷ்டம்தானே :)

    ReplyDelete
  11. அகத்திலே முடித்தால் இந்தப்பிரச்சனை..புறத்திலே முடித்தால் ஆணவ படுகொலை... அய்யகோ...!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. என்று தீரும் இந்த சா'தீய 'படுகொலை :)

      Delete
  12. வாசித்து ரசித்தேன்
    இனிய நன்றி.
    தமிழ் மணம் 12.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. ப்யூர் மெண்டல் க்யூர் கிளினிக் எங்கே இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு :)

      Delete