13 February 2017

இப்படியும் ஒரு பேரழகா :)

பொய்யிலே  மிகப் பெரிய பொய்  இதுவாச்சே :)             
             ''ஆயிரம் பொய் சொல்லியாவது  கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்வாங்க ,நான்  சொன்ன ஒரே ஒரு பொய்யைக்  கண்டுபிடித்து என்னை டைவர்ஸ்  பண்ணிட்டா  என் மனைவி !''
                '' அப்படியென்ன சொன்னீங்க ?''
                 '' ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகலைன்னுதான் !''

 நிரந்தர வேலைன்னு சொல்லலாமா :)
              ''காலாகாலத்தில் ஒரு 'நிரந்தர' வேலையைத் தேடிக்கோன்னு சொன்னால், ஏண்டா எரிஞ்சு விழுறே ?''
              ''இந்த உலகமே நிரந்தரமில்லைன்னு  அடிக்கடி நீங்க தானேப்பா  சொல்றீங்க?''

நாணயம் வேணும்தான் ,அதுக்காக  இப்படியா :)
            ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''

பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா :)
            ''இரும்புச் சத்தைக் கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னதுக்கு நீ என்ன செய்யப் போறே ?''
          ''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''


இப்படியும்  ஒரு  பேரழகா :)
பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
புராதனக் கண்ணாடி ...
என் இனியவளின்  முகம் பார்த்ததும் 
சுக்கு நூறாய்  சிதறியது ...
பிறவிப் ப(ய)லன்  கிடைத்ததென்று !

20 comments:

  1. இது சின்ன பொய்தான்

    ReplyDelete
    Replies
    1. மனைவிக்கு பெரிய பொய்யா படுதே :)

      Delete
  2. நாணயமானவர் முழு வாடகையையும் நாணயமாகவே தருகிறாரோ.....

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐடியா அவருக்கு இன்னும் வரலே :)

      Delete
  3. Replies
    1. நிரந்தரமில்லா உலகத்தையும்தானே :)

      Delete
  4. இப்படியான பேரழைகை எல்லாம் கண்டு கழிக்க எமக்கு கொடுப்பினை இல்லை தலைவரே....

    ReplyDelete
    Replies
    1. 'கிளாஸ்'சில் நீங்க டீயை மட்டும்தான் குடிப்பீங்க போலிருக்கே :)

      Delete
  5. விவரம் தெரியாத கணவனாக இருப்பான் போலிருக்கிறதே நானாக இருந்திருந்தால் எனக்கு ஏற்கனவே இன்னொரு கல்யாணம் ஆகிடுச்சு என்று சிரித்து கொண்டே சொல்வேன் புது மனைவியோ மாப்பிள்ளை ஜோக் அடிக்கிறார் என்று நினைத்து போய்விடுவார் அப்புறம் என்ன இன்னொரு கல்யாணத்திற்கும் நாம ரெடியாக்விடலாமே

    ReplyDelete
    Replies
    1. ஃப்பூ இவ்வளவுதானா ?ஜோக் அடிப்பதாக முதலில் எடுத்துக் கொண்டாலும் ,உண்மை தெரிந்ததும் ஜோட்டாலே அடிப்பாளே ,பூரிக் கட்டை அடி என்றாலும் தாங்கிக் கொள்ளலாம் :)

      Delete
  6. ஒரு பொய்தானே...?!

    ஒன்னுமே புரியல உலகத்தில...!

    ஒன்னும் ஒன்னும் இரண்டுதானே...!

    ஒரிஜினல் இரும்பு மனிதன் என்று அப்பத்தான் பெயர் வாங்க முடியும்...!

    இனியவளே என்று ஓடி வந்தேன்... இனி அவள்தான் என்றவுடன் ஓடிவிட்டேன்...!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. உச்சபட்ச பொய் என்று இதைச் சொல்லலாமா :)

      போகப்போக புரியும் :)

      12 மணி மர்மம் புரிகிறது :)

      இரும்பு மனுஷி என்று இப்படித்தான் பட்டம் வாங்கியிருப்பாரோ :)

      கண்ணால் காண்பதும் பொய்யென்று புரிந்ததா :)

      Delete
  7. அடுத்த முறை எனக்கு டைவொர்ஸ் ஆகலைன்னு பொய் சொல்லலாம்
    காயமே இது பொய்யடா
    நாணயங்களாகவே தருவாரோ
    கணவன் மனைவி டூ இன் ஒன் தானே
    கண்ணாடியிலும் முழுமையாக வர முடியாதவர்

    ReplyDelete
    Replies
    1. டைவர்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னாதானே பொய்யாகும் :)
      ஆமாம் ,எந்த காயமும் ஆறிவிடும் ஒருநாள் :)
      அதுவும் பலபேர் வாங்க மறுக்கிற பத்து ரூபாய் நாணயங்களாக கொண்டு வருவாரோ :)
      அந்த ஓட்டை ஸ்கூட்டரில் செல்லும்போதுதானே:)
      எவ்வளவு குண்டானாலும் கண்ணாடி அடக்காதோ :)

      Delete
  8. 1. ஹஹஹஹஹ் ப்பூ இம்ம்புட்டுத்தானா....

    2. ஹஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இதுக்கே எரிமலை வெடிக்குதே :)

      Delete
  9. Replies
    1. பிறவிப் ப(ய)லன் அதுதானே :)

      Delete
  10. அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. நிரந்தர வேலைன்னு சொல்வது சரிதானா :)

      Delete