நல்லாவே பேசுறார் டாக்டர் :)
''உங்க பை பாஸ் ஆபரேசன் கட்டணம் ரொம்ப அதிகமா இருக்கே ஏன் , டாக்டர் ?''
''பைபாஸ் ரோட்டில் சென்றாலே டோல் கேட் சார்ஜ்ஜும் அதிகமாதானே கட்ட வேண்டியிருக்கு !''
நமீதா வீட்டு நாய்க்குமா டப்பிங் வாய்ஸ் :)
'' அந்த நாய், நடிகை வீட்டு நாயா இருக்கும்னு ஏன் சொல்றே ?'' '' குரைக்குது ,ஆனால் சத்தம் வரலையே !''
எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :)
''முப்பத்திரண்டு வகை பவுடரை காட்டியும் 'வாசனையே இல்லை'ன்னு இந்தம்மா சொல்றாங்க, என்ன செய்றது முதலாளி ?''
'' எறும்பு பவுடரை வேணா காட்டிப் பாரு !''
வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)
''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?''
மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை :)
கடந்த சில ஆண்டுக்கு முன் , மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
எதற்காக ?...
ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான் கையெழுத்து இயக்கமாம் ...
சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !
உண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா :)
பூமித் தாய் படைத்த உணவினை உண்டபின் ...
மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை
'ஜீரணிக்க 'முடியவில்லை ...பூமித்தாயால் !

|
|
Tweet |
டாக்டரின் வாதம் அருமை.
ReplyDeleteடப்பிங் கொடுப்பவர் லீவோ!
எறும்பு கூட பவுடர் போட்டுக்குமா? அட!!
வள்ளுவரை வம்புக்கிழுத்திருப்பது அருமை!
பூமித்தாய் பற்றிய கவலை அருமையிலும் அருமை.
toll gate கட்டணத்தை நீக்கி விட்டால் இலவசமாய் சிகிச்சை அளிப்பாரா அந்த டாக்டர் :)
Deleteஅவருக்குத் தொண்டைக் கட்டாம் :)
வெறுப்பேற்றவும் ஒரு அளவு இல்லையா :)
வாசுகி அம்மையார் கொடுத்து வைத்தவர் :)
இப்போது கொஞ்சம் குறைந்து இருப்பது போல் தோன்றுகிறது ,நெகிழி பயன்பாடு :)
பை பாஸ் ஆபரேசன் கட்டணம் மட்டும்தானா...?!
ReplyDeleteகுட்டி... நாய்தானே...!
பிளிச்சிங் பவுடர்தான் பிடிக்குதாம்... வாசமில்லா மலரிது...!
தீயினால் சுட்ட பண் உள் ஆறும்...! ஆறு மனமே ஆறு...!
M L A குள்ள நரிகளைப் பயன்படுத்த வேண்டியதுதானே...! பொய் எனப் பெய்யும் மழை...!
‘நெகிழி’(ச்சி)யான செய்தி...! இனி மகிழ்ச்சியாக இருக்க முடியாது...!
த.ம. 2
டாக்டர் எல்லாவிதத்திலும் காஸ்லிதான்:)
Deleteஇந்த சந்தேகம் எப்படி வந்தது :)
பியூட்டி பார்லர் சென்று அடிக்கடி ஃபேஷ் பிளிச்சிங் செய்துக்குவாரோ :)
சுட்ட பன் என்றால் பூரிக்குமே :)
அரசியல்வாதிக்கு பிடித்தது நரி என்பதில் ஏதோ உள்குத்து தெரியுதே :)
உற்பத்தியைத் தடை செய்தால் மகிழ்ச்சி அடையலாம் :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteகுட்டி 'நாய் ' ரொம்ப அழகுதானே ஜி :)
Deleteபடத்தில் நடிக்க வைத்தால் சத்தம் போட்டு குறைக்குமே.....!!!!!!!!!!
ReplyDeleteநாய் குறைப்பதையும் இசை அமைப்பாளர் டிஜிட்டலைஸ்டில் கொண்டு வந்து விடுவாரே :)
Deleteஇரசித்தேன் நன்றி ஐயா.
ReplyDeleteமதுரை மேதையைப் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்குமே :)
Deleteதீயினால் சுட்ட புண் உள்ளாறும்...
ReplyDeleteஆறும்தானே:)
Deleteதீயினால் சுட்ட புண் உள்ளாறும்...
ReplyDeleteஇன்னுமா சந்தேகம் :)
Deleteரசித்தேன் அனைத்தும் நன்று
ReplyDeleteநல்லா பேசுற டாக்டர் பேச்சில் நியாயமில்லைதானே :)
Deleteதொடரட்டும் நகைப்பணி
ReplyDeleteதொடரத்தான் நினைக்கிறேன் :)
Deleteதிருக்குறளையும், டப்பிங்க் வாய்ஸையும் அனைத்தையும் ரசித்தோன் ஜி
ReplyDeleteஉங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது :)
Deleteஉண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா?
ReplyDeleteபொலித்தீன்/ பிளாஸ்டிக் கழிவுகளை
அகற்றக் கற்றுக்கொடுப்போம்!
இல்லையேல்
பொலித்தீன்/ பிளாஸ்டிக்
உற்பத்திகளைத் தடுப்போம்!
மது ,புகையிலை ,நெகிழி போன்றவைகளின் உற்பத்தியை தடை செய்ய மாட்டார்களாம்,ஆனால் ,பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துவார்களாம்,என்ன நியாயம் இது :)
Deleteஇவர்களால் வர வேண்டிய மழையும் வராதுதானே :)
ReplyDeleteநீங்களே சொல்லுங்க ,டோல் கேட் சார்ஜ் மிகவும் அதிகம்தானே :)
ReplyDelete