23 February 2017

தந்தையும் வாலிபத்தை கடந்து வந்தவர்தானே :)

பெயர் பொருத்தம் சரியில்லையே :)
            ''இறுதி ஊர்வலத்தைப் பார்த்துகிட்டு  ,என்னடா யோசனை ?''
            ''மயானம் வரை போகிற அந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் , எதுக்கு 'சொர்க்க ரதம்'னுபெயர் வச்சிருக்காங்க ?''

காய்ச்சல் பலவிதம் ,அதிலே இது ஒரு விதம் :)          
             ''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே பாக்கெட் வாங்கவும் பயமா இருக்கு !''
              ''என்ன பாக்கெட் ?''
              ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''

 தந்தையும் வாலிபத்தை கடந்து வந்தவர்தானே  :)
              ''என்னங்க .நம்ம பையன்  பத்மாவையே சுத்தி சுத்தி வர்றானாமே ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பும் வழியைப் பாருங்க !''
              ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?
நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் தலைகள் கூட...
இப்போது  'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் நடக்கிறது !

16 comments:

  1. சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டதல்லவா?!

    பாக்கெட்டுப் பதிலா பாட்டிலில் வாங்க வேண்டியதுதானே...!

    அப்பனுக்குப் பிள்ளை தப்பியா பொறக்கும்...?!

    இள‘மை’ இதோ... இதோ...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. திருமணத்தைத் தானே அப்படி சொல்வார்கள் :)

      வந்தால் வாங்கத் தானே போகிறோம் :)

      மதுரையில் இருந்து இவர் செக்கானூரணி தாண்டியதில்லை :)

      கருமை இதோ ...இதோ :)

      Delete
  2. புளிக்காய்ச்சல் ஜோக்கையும், சொர்க்க ரதத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ரதத்தில் சென்றவர் புளிக் காய்ச்சலில் விழுந்து போனவர்தான் :)

      Delete
  3. ஆமா..... ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ..!!!!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஜெர்சி மாடு இறக்குமதி ஆகும் நேரத்தில் :)

      Delete
  4. நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. டெம்பிளேட்டை மாற்றுங்க ஜி :)

      Delete
  5. Replies
    1. எது அருமைன்னு குறிப்பா சொல்லுங்க ஜி :)

      Delete
  6. அருமையான நகைச்சுவை துணுக்குகள்.வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. முதன் முறை வருகைக்கு நன்றி சுபாஷ் ஜி :

      Delete
  7. போகிறவர்கள் எல்லோரும் நல்லவரே என்னும் நம்பிக்கைப்;போலும்
    புளி வாங்கிக் காய்ச்சலாமே .....!
    பத்மாவையும் கூட அனுப்பினால்தான் நடக்கும்
    ஹேர்டை கருப்பு நிறத்தில்தான் இருக்கவேண்டுமா

    ReplyDelete
    Replies
    1. அவர் தொழில் அப்படி ,ஐஸ் வைக்கிறார் :)
      அதுக்கு நேரமில்லையே :)
      ஹனிமூனுக்கு அனுப்பிட வேண்டியதுதான் :)
      நம்ம ஊரில் அதுதானே விற்கும் :)

      Delete