5 February 2017

மகளோட லட்சணம் ,தலைவருக்கும் புரிந்திருக்கு :)

          ' ' தலைவர் , மாட்டை அடக்கிறவருக்கு  காரைப்  பரிசு தரப் போறாராமே,ஏன்  ?''
          ''தன் பெண்ணைப் பரிசா தர்றேன்னு சொன்னா ,யாருமே மாட்டைப் பிடிக்க வர மாட்டேங்கிறாங்களாம்!''

அழுகைக்கு , உண்மையான காரணம் :)        
             '' செத்த பெண்டாட்டிக்காக அழவே மாட்டேன்னு அடக்கி கிட்டிருந்தே ,இப்போ ஏண்டா அழறே?''
              ''லேசா அசைவு தெரியுது ,பொழச்சுக்குவாளோன்னு  பயமாயிருக்கே !''

C C T V கேமராவை 'இங்கே' யா வைப்பது :)
            ''தப்பு பண்றவங்களை கடவுள்  நின்று கொல்லும் என்பதை கோவில் தர்மகர்த்தாவே நம்பலே போலிருக்கா ,ஏன் ?''
            ''கோவில்  கருவறையிலும்  CCTV  கேமராவை மாட்டி வைச்சுருக்காரே !''

மகன் செய்த தப்பு தாய்க்கு புரியாது :)
               ''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
               ''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''

வாய்தா கோர்ட்டில் கேட்கலாம் ,வீட்டில் ..:)
        ''வக்கீலான உன் வீட்டுக்காரரை  டைவர்ஸ் பண்றீயே ,ஏன் ?''
        ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''

 ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் :)
   பாட்டுதான் வந்தது ,இப்போ படமுமா ரீமிக்ஸ் என்று கேட்க நாதியில்லை  நமக்கு !
   தண்ணி பாலிலும்  நாம் தண்ணி சேர்ப்பதால் !

26 comments:

  1. பெண்ணை அடக்கினால் காலையைப் பரிசாகத் தர்றேன்னு சொல்லலாமோ!

    வக்கீலுக்கு 'வாய்தா'ன் சரியில்லை.

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. காளையை பரிசு பெறப் போகும் காளை இருக்காரா :)

      அதானே ,எங்கே எதை பேசுவது என்றே தெரியவில்லையே :)

      Delete
  2. Replies
    1. இப்படி cctv கேமரா வைப்பதெல்லாம் ஆகம விதிகளுக்கு முரண்பாடான விஷயம்தானே:)

      Delete
    2. ஆகம விதிகள் ஏற்பட்ட போது சி சி டி வி காமிராக்கள் இல்லை

      Delete
    3. மின்சார வெளிச்சம் கூட சிலைமேல் படக்கூடாது என்கிறார்களே ,cctv மட்டும் இருக்கலாமா :)

      Delete
  3. Replies
    1. கருவறைக்குள் இந்த கண்றாவி எல்லாம் நடப்பது கொடுமைதானே :)

      Delete
  4. Replies
    1. நல்ல கணவன்தான் ,வக்கீல் போல் வாய்தா வாங்க மாட்டேங்கிறாரே :)

      Delete
  5. கார் பரிசு கிடைத்தாலாவது நாம ஓட்டலாம்... பொண் பரிசாகக் கிடைத்தால் அவள்தானே நம்மல ஓட்டுவாள்...!

    செத்தும் கெடுத்தாள்... விடாது கருப்பு...!

    சாரி... பூசாரிக்காக வைக்கப்பட்டது...!

    பணம் மதிப்பிழந்ததுன்னு எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களோ...?!

    வாய்... தா... அவர் வாய்தா கேட்க மாட்டார்...!

    இதுக்குத்தான் அன்னப்பறவை இருக்கனுங்கிறது...!

    த.ம. 7





    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே ஓடுறதை விட ரோட்டிலே ஓட்டறது ஈசிதானே :)

      கருப்பு வெள்ளை சேலை கட்டிக்கிட்டு வந்து பயமுறுத்துமோ:)

      பூசாரியை தெய்வம் தண்டிக்காதா :)

      மதிப்பஇழப்பு இத்தனை மடங்கா :)

      மனைவியிடம் கேட்டால் கிடைக்காதே :)

      அன்னப் பறவைக்கு இப்படி அதிசய சக்தி இருக்கா :)

      Delete
  6. அத்தனையும் ரசித்தேன் ஜீ

    ReplyDelete
    Replies
    1. ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் என்பதில் உங்களுக்கு உடன்பாடுதானே :)

      Delete
  7. Replies
    1. பிஸியான நேரத்திலும் வந்து ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  8. அனைத்து நகைச்சுவைகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வக்கீல் வீட்டில் வாய்தா கேட்கக் கூடாதுதானே :)

      Delete
  9. அதானே யாருக்கு வேண்டு ம் தலைவரின் பெண் காரே போதும்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு செய்யவேண்டிய செலவை விட காருக்கு ஆகும் செலவு கம்மிதான் :)

      Delete

  10. பின்னூட்டங்கள் எழுதும் முன்னே க்ளிக்கிட்டேன்
    இருக்கும்போது அழவைத்தது போதாதா
    யாருக்கு வேண்டும் வாய்தா நேரே டிவொர்ஸ் தான்
    ஒரு வேளை கக்கா போகும்போது வெளி வந்திருக்கலாம் அதற்குப் போய் எட்டாயிரம் ரூபாயா
    ரிமிக்ஸ் ரசித்தேன் தண்ணிப் பாலில் தண்ணீர் சேர்ப்பது




    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வரி எழுதி கிளிக்கினாலும் தவறில்லை :)
      பிழைத்து எழுந்தால் நிறைய அழ வைப்பாளே :)
      அதுக்கும் காக்க வைக்குதே நீதிமன்றம் :)
      வரலைன்னா ஆபத்தாச்சே :)
      நம்ம பங்கு இதிலும் இருக்கவேண்டாமா :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தோம்ஜி

    ReplyDelete
    Replies
    1. ரீமிக்ஸ்யை ரசிக்க முடியுதா ஜி :)

      Delete
  12. வாய்தா ஜோக்கு ரசித்து சிரித்தேன் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. வாய்தா என்றாலே சிரிப்பு வருவது இயற்கை தானே :)

      Delete