25 February 2017

தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)

குரு  விளக்கம் சொல்வாரா :)             
               ''சீடனே, உனக்கென்ன சந்தேகம் ,கேள் !''
               ''மனிதன் உள்நோக்கித்தான் பார்க்கணும் ,மேல் நோக்கிப் பார்த்தால் கழுத்துதான் வலிக்கும்னு சொல்றீங்க ,பிறகெதுக்கு உங்க மையத்தில் இவ்வளவு உயர சிலை ?''

அண்ணன் காட்டிய வழியம்மா :)           
             ''சொல்றதுக்கு சங்கடமா  இருக்கு ,உன் தங்கச்சியை நான் காதலிக்கிறேண்டா !''
             ''இதிலே வருத்தப்பட என்ன இருக்கு  ,உன்னை நண்பனாக்கிகிட்டதே  இப்படி நடக்கணும்னுதானே  !''

தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       
             ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ,ஏன் ?''
            ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமா  :)
             '' என் பெண்டாட்டி  ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
             ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''

உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா :)
            ''நான் கட்சி  தாவுனதுக்காக ,நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
             ''ஏன் தலைவரே ?''
            ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''

ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)
  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
 பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
 நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
 ஜாதகம் சேரவில்லை என்று !

18 comments:

  1. Replies
    1. நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும், முதல் வருகைக்கு :)

      Delete
  2. வலி நிவாரணத்திற்குதான் யோகா இருக்கே... யோகம் வந்தாச்சு... நல்ல நேரம் வந்தாச்சு...!

    விரித்த வலையில் மாட்டிக்கிட்டாயா...?!

    அகம் புறம் கரம் நீட்டினால் வெட்டப்படும்...!

    மஞ்சக் கயிறுதானே... தங்கம் இல்லல்ல...! போனா போகட்டும் விட்டுவிடு...!

    உப்பு சப்பு இல்லாத விஷயம்...!

    வரனின் தட்சனை சாதகமாக இல்லையே...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. யோகா என்ன சகலரோக நிவாரணியா :)

      இனி தப்பிக்கவே முடியாது :)

      அரிவாள் படத்தையும் போட்டா நல்லாயிருக்கும் :)

      இப்போ வருத்தப் பட்டு என்ன செய்ய:)

      அரசியல்வாதிக்கு பிடித்த வியாதியாச்சே :)

      வரா தட்சனையாகவே போகட்டும் :)

      Delete
  3. பக்கத்தில் வந்துதான் பார்க்கவேண்டும் என்றில்லை என்று சொல்கிறார்களோ என்னவோ!

    காரியக்கார நண்பரின்!

    காலால ஓங்கி ஒரு மிதி மிதிக்கவேண்டியதுதான்!!

    மாஞ்சாக்கயிறு வெற்றிகரமான மூன்றாம் முறையா!


    உண்மைதானே!

    மனசு நோகாமல் சொல்கிறார்களே... நான் கூட இதை வைத்து ஒன்று எழுதி இருட்ந்தேனே..

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ,முழு உருவச் சிலை வைக்கவில்லை, மார்பளவு சிலையை இவ்வளவு உயரமா இருக்கே :)

      நண்பன் விரித்த வலையில் மச்சான் மாட்டிகிட்டாரே :)

      தர்ம அடியில் இதுவும் அடங்கும் :)

      ஒரு முறையே சரியாய் முடிச்சு விழலையே:)

      இதுக்கெல்லாம் அசந்தா அரசியல் பண்ண முடியுமா :)

      சட்ட ஓட்டைப் போலத்தான் இதுவும் :)

      Delete
  4. Replies
    1. அண்ணன் காட்டிய வழி சரிதானா :)

      Delete
  5. Replies
    1. உங்களுக்கும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி :)

      Delete
  6. Replies
    1. ஜாதகத்தை இப்படியும் சாதகமாய் பயன்படுத்திக் கொள்வது அருமையா :)

      Delete
  7. ரசித்தேன் ஜி...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தது ....தர்ம அடியைத் தானே ?
      அருமை ....மாஞ்சாக் கயிறு தானே

      Delete
  8. ஜக்கி வாசுதேவின் நினைவா
    ஆண்புத்தி முன் புத்தி
    எழுதிப் போட்டாலும் கால் நீளுதே
    அதை எடுத்துப்போட்டு ஓட எவ்வளவு நேரமாகும்
    தூத்துக்குடியில் அதிக உப்பு சேர்க்கிறார்களோ
    ஜாதகம் பொருந்தவில்லை என்று சொல்ல இதுவும் ஒரு காரணமா

    ReplyDelete
    Replies
    1. உள்ள சிலைகள் போதாதா ,இவர் வேறு :)
      இங்கே பெண் புத்தியும் :)
      லத்தியால் கவனித்தால் சரியாய் போகும் :)
      கட்டும் போதே கழுத்தை அறுக்கும் கயிறாச்சே அது :)
      அதை பரிசோதிக்கும் தருணம் இதுவரை வரவில்லை :)
      இதுதான் முக்கிய காரணம் :)

      Delete
  9. அனைத்து நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அதிகம் நன்றாயிருப்பது எது :)

      Delete