16 February 2017

கடன் யாரிடம் கேட்கலாம் :)

அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
          ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு, என்னடா யோசிக்கிறே ?''
           ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதானே ,தொடர்ந்து பெய்ற மழையை 'அடை'மழைன்னு ஏன் சொல்றாங்க ?''

இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)          
          ''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
          ''அது ,அவ புருஷன் கையிலே போனா  வம்பாயிடுமே !''
சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா :)
         ''அவர்  ....சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டு ' நவீன நாரதர் 'ஆயிட்டாரா ,எப்படி ?''
         ''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''

கடன் யாரிடம் கேட்கலாம் :)
         ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !''

அழகைப் பார்த்தால் நிறைய 'அழணும் '  :)
5ஸ்டார்  ஹோட்டல் போல்  அழகாய்  உயர்ந்து நிற்கும் 
தனியார் மருத்துவமனைகளைப்  பார்க்கையில் ...
அட்மிட் ஆகி செத்தால்கூட பரவாயில்லை போலிருக்கிறது !
பில்லை நினைத்தால் ...
படுத்த படுக்கையாய் போய் சேர்ந்துவிடுவதே 'நலமாய் 'படுகிறது !

20 comments:

  1. Replies
    1. From new jersy என்னாச்சு :)

      Delete
  2. Replies
    1. இதுக்குப் பெயரும் காதல் கடிதமா ? ம் தானா :)

      Delete
  3. அடடா மழைடா அடை மழைடா...!

    காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா...? திரும்பியும் வந்ததா...?! உனக்குக் கொடுத்ததை ஏன் உன் அம்மாவிடம் கொடுத்தாய்...?!

    இதுக்குத்தான் நடராசன்னு பேரு வக்கக்கூடாது... அந்த நாலு பேருக்கு நன்றி சொல்லி நடையக்கட்ட வேண்டியதுதான்... பரப்பன அக்கராத்துக்கு... அக்கிரமத்துக்கு ஒரு அளவே இல்லை...!

    கடன் நட்பை மட்டுமில்ல... சொந்த நாட்டையே முறிக்கும்...! ஒங்களோட மல்லுக்கட்டவே முடியல... முடியல...!

    அப்ப... அப்ப அல்லோ... போக வேண்டியதுதானே...!

    த.ம. 2









    ReplyDelete
    Replies
    1. அடை மழைதான் என்றாலும் அணைகள் நிறையா மழைடா:)
      அம்மாவே முடிவெடுக்கட்டும் என்றுதானே :)
      நடராஜன் நடந்துகிட்டு திரிய வேண்டியதா ஆகிப் போச்சே :)
      நட்பின் எல்லையை சொல்ல முடியாதே :)
      அங்கே போனால் அள்ளாமல் விட மாட்டார்களே :)

      Delete
  4. Replies
    1. ஹனிமூன் சுகத்தை தருதே ,உங்க மூணும்:)

      Delete
  5. Replies
    1. நவீன நாரதர் சொன்னதையும்தானே :)

      Delete
  6. Replies
    1. அழகைப் பார்த்தால் நிறைய 'அழணும் ' தானே :)

      Delete
  7. ரசித்தேன் ஜி அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. நட்பு விரும்பிவரும் கடன்காரனை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. தெரிந்தவர்களே! கடன் தர கை விரிக்கும்போது..தெரியாதவர்..எப்படி தருவார்...???????????????

    ReplyDelete
    Replies
    1. தர்மம் செய்ய நினைப்பவர்கள் தருவார்கள் :)

      Delete
  9. ஒன்றென்ன ஒன்பது கூட சாப்பிடலாம் ஆமாம் ஏன் அடைமழைன்னு சொல்றாங்க
    மணமானவர்தானே கடிதம் ஏன் ஒரு விழியின் மொழி போதுமே
    நடப்பவரெல்லாம் நவீன நாரதரா
    கடன் பட்டார் நெஞ்சம் தெரியாதா
    இருந்தும் கூட்டம் அள்ளுதே

    ReplyDelete
    Replies
    1. அடை சாப்பிட்டுகிட்டே யோசிங்க ,விடை கிடைக்கும் :)
      கள்ளக் காதலுக்கும் விழியின் மொழிதானா :)
      தம்புரா மீட்டிவந்தால் தான் நாரதரா :)
      இப்போ கடன் கொடுத்தார் நெஞ்சம் தான் பதைபதைக்கிறது :)
      உயிர்மேல் ஆசை விடாததால் தான் :)

      Delete
  10. ரசித்தோம் அனைத்தையும் ஜி!

    ReplyDelete
    Replies
    1. கடன் வாங்க இப்படி எத்தனைப் பேர் கிளம்பி இருக்காங்களோ)

      Delete