27 February 2017

'இச்' என்றால் தெரியும் ,இக்சி என்றால் :)

சொல்லாமலே தெரியும் எரிச்சல் :)           
            ''நீண்ட நாளாய்  பாத எரிச்சல் எனக்கு  இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா ?''
             ''எதுக்கெடுத்தாலும்  வயித்தெரிச்சல்  படுவீங்க ,அது மட்டும்தான் தெரியும் !'' 

 இவர் எல்லாம் எதுக்கு ஃபிரிட்ஜ் வாங்கணும் :)                
          ''என்னங்க ,ஃபிரிட்ஜ்ஜிலே  வச்சு இருந்ததெல்லாம் கெட்டு போயிருக்கே ,என்ன செய்ஞ்சீங்க ?''
          ''உள்ளே லைட் வேஸ்ட்டா  எரியுதுன்னு   நான்தான் ஸ்விட்ச்சை ஆப் செய்தேன் !''

படித்த செய்தி .....
இக்சி முறையில் எந்த வயதினரும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் !
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ? உங்களுக்கு  'இச் 'முறையிலேயே  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன :)
               ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

அரைகுறை அகராதியால் என்ன பயன் :)
                 ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
                  ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் :)
 பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
 பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
 நாம் பெற்ற பேறு ...
 நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

18 comments:

  1. வயிற்றிசெரிச்சல் வேறு, நெஞ்செரிச்சல் வேறா?!!

    சுருளிராஜனைத் தோற்கடிக்கும் கஞ்சனாயிருப்பார் போல!

    :)))

    முன்னாள் ராணுவ அதிகாரியாய் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்!

    அகராதியே தகராறு!

    ம்ம்.....

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீர்களா ,வயித்தெரிச்சல் என்று சொல் வழக்கில் உள்ளது வருகிறது ,எழுத்து வழக்கில் உள்ளதை டைப்பிக்க முடியலே :)

      அதானே ,விட்டால் பல்பையே கழற்றிவிடுவார் போலிருக்கே :)

      இக்சி ,தேவைப் படுவோர்க்கு மட்டுமே தெரியும் .அப்படித்தானே :)

      அவர் என்ன சொன்னார் என்று கோடிட்டுக் காட்டுங்க ஜி :)

      அவரே அகராதிதான் :)

      யார் பெறுவார் இந்த பேறு:)

      Delete
  2. வணக்கம்
    ஜி

    அனைத்து சிறப்பு இரசித்தேன் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உள்ளே லைட் வேஸ்ட்டா எரியுதுன்னு ஸ்விட்ச்சை ஆப் செய்ததை ரசிக்க முடியுதா :)

      Delete
  3. Replies
    1. தோன்றிய மொக்கையை ரசிக்க முடியுதா :)

      Delete
  4. பாத காணிக்கை செலுத்த வேண்டியதுதானே...!

    இனி லைட்ட அணைக்காதிங்க... லைட்டா அணைக்காதிங்க...!

    பிள்ளைக்கு ஒரு பா(ட்)டு...!

    தள்ளுவதைத் தள்ளவில்லை என்றால் மாறுதல் வரும்...! அவரைக்கும் தலைவர் வெளியே இருந்தா பார்த்துத் தள்ளலாம்...!

    அகராதியா பேசியே உள்ள போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க...! என்னதான் அடிச்சாலும் உள்ளே போனவர் மீண்டு(ம்) வர முடியாதாம்...!

    ‘மூடப்பழக்கமில்லை... கேரளத்துப் பெண்களுக்கு மூடப்பழக்கமில்லை...!’

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. வயித்தெரிச்சல் அதனால் போகுமா :)

      மனுஷன் அணைப்பதிலேயே குறியா இருப்பாரோ :)

      பச்சை மரம் ஒன்று இக்சி கிளி ரெண்டுன்னு பாடுவாங்களோ:)

      தள்ளுபடியே உலகமாகிப் போச்சு :)

      ஜால்ரா போடும் கூட்டமும் குறைந்து விடும் :)

      அதெல்லாம் அந்த காலம் :)

      Delete
  5. Replies
    1. இந்த சிலையை நேரில் பார்த்து இருப்பீர்களே ஜி :)

      Delete
  6. இக்சி முறையிலாவது சரி
    'இச்' முறையிலாவது சரி
    குழந்தை பெற்றவர்களை
    வாழ்த்துவோம்!

    ReplyDelete
    Replies
    1. எப்படிப் பிறந்தால் என்னா ரத்த வாரிசுதானே :)

      Delete
  7. மலம்புழா அணையில் இருக்கும் இந்த சிலையும்தானே :)

    ReplyDelete
  8. செல் வழி வந்து கருத்துக்கு நன்றி ஜி :)

    ReplyDelete
  9. பூக்குழி மிதித்தவரோ
    புத்திசாலி
    போதும் போதும் என்று கூறுமளவுக்குப் பெற்றவர்களின் வம்சத்தாருக்கு இந்த புரியாத இக்சி முறை ஏதுக்கையா
    கடைசி நேர மாற்றங்கள் வரும் கட்சி அ இ அதிமுக தானே
    மலம்புழா சிலைதானே அது
    பார்த்துக் கிழித்த அகராதியா

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லப் படாது ,சாமிக் குற்றம் ஆயிடும் :)
      புத்திசாலிக் கஞ்சனா இருப்பானோ :)
      புரிந்த முறையில் பிள்ளைப் பிறக்கலைன்னா தேவைப் படுமே :)
      கடைசி நேர மாற்றங்கள் மட்டுமா ,அங்கே :)
      மறக்க முடியாத சிலைதானே :)
      படித்துக் கிழிக்க தாமதமாகுமே :)

      Delete
  10. பகவான்'ஜி - இந்தச் சிலை மலம்புழா அணைக்கட்டில் இல்லை. அது இன்னும் கொஞ்சம் எக்கு தப்பான சிலை. இது கோவளம் பீச்சிலோ அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள ஏதாவது ஒரு பீச்சிலோ இருக்கிறது. இரண்டையும் செய்தவர் ஒரே சிற்பி.

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வது உண்மைதான் ,கேரளாவில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் உள்ளதென கூகுள் ஆண்டவர் சொல்கிறார் :)

    ReplyDelete