20 February 2017

கணவன் குறட்டை விடும்போது .... :)

தோசை  சுடும் போது யோச்சிச்சது:)                 
             ''கல்லுலே வேகிற தோசையும் பேசுமா ,எப்படி  ?''
             ''ஒரு ஓரமா  லேசா எந்திரிக்கும் ,அதுக்கு அர்த்தம் 'என்னை திருப்பி போடு'ங்கிறதுதான் !''

இப்படி வாழ்நாளை ஈடு கட்டலாமா :)           
          ''தம் அடித்ததும் ,ஜோக் படிச்சு சிரிக்க ஆரம்பித்து விடுறீங்களே ,ஏன் ?''  
         ''சிகரெட் குடிச்சா  ஆயுள்  குறையுமாம் ,சிரிச்சா ஆயுள் கூடுமாமே !''
கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)
             ''கொசு விரட்டி லிக்யூட் தீர்ந்து போச்சு  ,வார்னிங் லைட்டாவது  எரியட்டும்னு ஆன் பண்ணி வைச்சேன் !''
            ''கொசு ஏமாந்து போச்சா ?''
            ''என்னையா ஏமாத்துறேன்னு  இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி  !''

கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது :)
            ''கரடியும் மனுசனை மாதிரியே குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கெப்படி முன்னாடியே தெரியும் ?''
           ''குறட்டை விடுறப்போ நீங்களும் அப்படித்தானேங்க  இருக்கீங்க  !''

'கை கழுவுறது 'நடிகைகள் மட்டும்தானா :)
            ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
            ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''

படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு :)
               படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
              அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
              எனச்  சொல்ல  வந்த  தந்தையின்  வாயை அடைத்தது  ...
              'கரெண்ட் கட் ' !

24 comments:

  1. அனைத்தும் உண்மையிலே அருமை

    ReplyDelete
    Replies
    1. தோசைன்னா உங்களுக்கும் பிடிக்கும்தானே :)

      Delete
  2. அனைத்தும் நன்று. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆறும் 'அறு'சுவைதானே :)

      Delete
  3. Replies
    1. கை கழுவின அனுபவம் சரிதானே :)

      Delete
  4. உயிரில்லா தோசையே சுட்டால் எழுந்திருக்க முயற்சிக்கிறதே... உன்னைச்சுட்டால் கூடச் சுரணை இல்லையே!

    ‘தம்’ கட்ட வேண்டி இருக்கிறதே... கட்டிப்புடி கட்டிப்புடிடா... கண்ட... படி கட்டிப்புடிடா...!

    கொசு விரட்டி லிக்யூட... கொசு குடிக்கப் பழகிடுச்சு...!

    சும்மா... கரடி விடாதீங்க...! கரடி பயங்கர கருப்பா இருக்கும்... நீங்க கருப்பா பயங்கரமா இருக்கீங்க...!

    ஏழு எழுபது பேர் வந்தாலும் இந்த பழக்கம் என்னை விட்டுப்போகாது... இல்லேன்னா பன்றிக் காய்சல் வந்திடுமுல்ல...!

    அந்தக் காலத்தில யாருமே வீட்டுல கரண்ட் இழுக்கல... எல்லாமே தெருவுலதான்...!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. காரணம் உயிர் இருப்பதால்தானா :)

      அது சரி ,புகைதான் பிடிக்கப்படாது ,கையோடு கையுமா :)

      செம டேஸ்டுன்னு விரும்பி வருதோ :)

      கொஞ்சம்தானே முன்னேபின்னே வித்தியாசம் :)

      வந்தாலும் போனாலும் என்று கூட சொல்லலாமா:)

      இன்னும் மின்சாரம் நுழையாத வீடிருக்கே :)

      Delete
  5. முதல் ஜோக் புன்னகைக்க வைக்கிறது.

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய சமையல் ரெசிப்பீஸ் நீங்கள் கொடுக்கலாம் ,நான் தோசை மட்டும்தான் சுட முடிகிறது :)

      Delete
  6. Replies
    1. புகை உருவமும்தானே :)

      Delete
  7. கணவன் குறட்டை விடும்போது .... :)//

    ஜோக்காளியின் துணைவியார் கொடுத்துவைத்தவர்.

    ReplyDelete
    Replies
    1. தோசை சுட ஜோக்காளிக்கு தெரிவதால்தானே :)

      Delete
  8. கணவன் குறட்டை விடும்போது .... :)//

    ஜோக்காளியின் துணைவியார் கொடுத்துவைத்தவர்.

    ReplyDelete
    Replies
    1. ஆயுள் குறையும் காரி்யத்தை செய்யாமல் இருப்பதாலா :)

      Delete
  9. வார்னிங் லைட்டை நீங்களும் எரியவிடுவீர்கள் தானே :)

    ReplyDelete
  10. குறட்டைவிடும்போதுதான் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறதோ...?????????

    ReplyDelete
    Replies
    1. யார் குறட்டை விடும் போது யாருக்கு வருகிறது :)

      Delete
  11. அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. நடிகைகள் 'கை கழுவுறது ' தப்பில்லையே:)

      Delete
  12. என்னை திருப்பி போடுடா நாயேன்னும் சொல்லுமா :)

    ReplyDelete
  13. Replies
    1. கரடி குறட்டை விடுவதையும்தானே :)

      Delete