7 February 2017

கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?

கட்டையிலே போக ஆசைப் படுறானோ :)             
               ''உனக்கென்னடா  சந்தேகம் ?''
                ''கட்டையிலே   நின்னா  கரெண்ட்  ஷாக் அடிக்க மாட்டேங்குது ,  'கட்டை' விரல்லே  தொட்டாலும்  அடிக்குதே  ஏன் ஸார் ?''
இப்போ,ஆம்பளைங்க பெரும்பாலோர் இப்படித்தான் :)
             ''கோவிலும் ,டாஸ்மாக்கும் ஒண்ணுன்னு ஏன் சொல்றீங்க ,அப்பா ?''
            ''பிரச்சினை வந்தா நாங்க கோவிலுக்குப் போனோம்  ,இப்போ ,டாஸ்மாக் கடைக்குப் போறாங்களே !''
இவர் சொந்த ஜாதியிலேயே மருமகளைத் தேடுவாரோ  :)
           ''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன்  ?''
            ''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லைன்னா ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''

மாமியார் கையில் துப்பாக்கி  இருக்குமோ :)
            ''எனக்கொரு ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,ஏண்டா ?''
           ''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் வேணுமாம் !''

ரஜினி பாடியதில் எது சரி?
        ''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினி பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றீயே ,ஏன் ?''
        ''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி ஏதும் தெரியாதுங்கிறாரே !''
         ''அப்புறமா அவரே  'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''

கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?
யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
கருக்கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !

18 comments:

  1. ‘கட்டை’ காட்டுக்குப் போனால் வேகுமா... வேகாதான்னு சோதனைதான்...!

    இரண்டிலுமே... நேரத்துக்குச் சொர்க்க வாசல் திறந்து மூடுறாங்களே... ‘இன்று போய்... நாளை வாராய்...!’

    நல்ல வேளை எ பையன வக்கீலுக்குப் படிக்க வைக்கல... சட்டம் பேசாம... அவனே பரம்பரை சொத்த எடுத்திட்டு... என்ன நடுத்தெருவில விட்டிட்டுப் போயிட்டான்...!

    அய்யோ... அதெல்லாம் வாங்கிக் கொடுத்து... அவள பிழைக்க விட்டுடாதே...!

    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...?!

    நீ சொன்னால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா... என்னா...?!

    த.ம. 1







    ReplyDelete
    Replies
    1. தேவையான இந்த சோதனை மாபெரும் வெற்றி பெறட்டும் :)

      டாஸ்மாக் கதவு மூடியிருந்தாலும் .ஏதாவது ஒரு ஓட்டையிருக்கும்,காசல் நீட்டினால் சரக்கு வந்திடும் :)

      படிக்காதவனும் இப்படிதான் இருக்கான் ,யாரை நம்புறது :)

      உங்க சண்டையிலே என் பொழைப்பைக் கெடுக்கிறீங்களே:)

      ராத்திரியில் பூப்பது அல்லி என்பார்களே :)

      கொடுத்தவனே பறித்துக் கொள்ளலாமா :)

      Delete
  2. போர்டு வசனத்தை இரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனுஷன் சாராயத்தைத் தொட்டதுமில்லை ,அது தொட்டவனை லேசிலேதான் விட்டதுமில்லை என்ற பாடல் வரிகளை நினைவு படுத்துதே :)

      Delete
  3. Replies
    1. ஆன்மீகவாதி ரஜினி பாடியதில் எது சரி,சொல்லுங்க ஜி :)

      Delete
  4. ரசித்தேன், சிரித்தேன்.

    தம பொறுமையைச் சோதிக்கும் அளவு சுற்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. சட்டம் பேசும் மகன் ,பிள்ளையைப் பெத்தா கண்ணீரு பாட வச்சிட்டானே :)

      சுற்றிக் கொண்டே இருக்கும்போது ,back சென்று மீண்டும் வாக்களித்தால் ,ஏற்கனவே வாக்களித்து விட்டீர்கள் என்று வரும் ,இது நான் வாக்களிக்கும் முறை :)

      Delete
  5. காலி...சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. திருந்த வேண்டியவர்கள் சிந்தித்தால் நல்லதுதானே :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. புல்லெட் புரூப் ஜாக்கெட் போட்டுக்கும் அளவுக்கு நிலைமை அந்த வீட்டுக்குள் இருப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  7. எந்தகட்டை தொட்டால்ஷாக் தெரியலையே
    இரண்டுமே சிந்திக்கத் தெரியாதோர் போகுமிடம்....!
    சொந்தத்தில் கட்டினால் சொத்து பிரியாதோ
    அவள் என்ன சரியான ரஜனி கந்தாவா
    காசுக்காகப் பாடியதில் எல்லாம் ஆராய்ச்சியா
    கவனமாக இல்லாததுதான் சோகம் பாவம் இவற்றுக்குக் காரணம்

    ReplyDelete
    Replies
    1. 'கட்டை ' விரல் இருந்தும் ஷா(க்)கடிக்குதே :)
      என் சிந்தனையும் அதுவே :)
      இப்படியும் சுயநலமா :)
      அப்படியும் இருக்குமோ :)
      பாடியதும் இல்லை ,வாய் அசைத்தது மட்டுமே :)
      அது, கல்யாணத்து பிறகும் பொருந்தும்தானே :)

      Delete
  8. Replies
    1. போர்டு வாசகம் உண்மைதானே :)

      Delete
  9. இப்போ ,டாஸ்மாக் கடைக்குப் போறாங்களே !''//

    அங்கிருந்தும் பிரச்சினையோடுதானே திரும்பணும்?!

    ReplyDelete
    Replies
    1. இதை யோசிக்கும் காலமும் வரும் :)

      Delete