15 February 2017

உள்ளே இருந்தவர் வெளியே ,வெளியே இருந்தது உள்ளே :)

               ''அந்த காலத்திலே  மாமியார்  மருமகள்  ஒரே வீட்டிலே ரொம்ப 'அட்டாஷ்மெண்ட்'டோட  இருந்தாங்க !''
                ''இப்போ ?''
                 ''அபார்ட்மெண்ட்  வீட்டிலே  அட்டாச்ட்டு பாத்ரூம்  லெட்ரின்தான்  இருக்கு !''    

இப்படியா கேலி செய்வது :)                
                ''நடிகர் நாடாளத் துடிக்கிறார் ,ஆட்சிப் பொறுப்பு என்பது  அவர் தலையில் வைத்துக் கொள்ளும் விக் அல்ல ,அது ஒரு முள் மகுடம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் !''
சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)        
          ''அந்த கல்யாண மகால் பொருத்தமான இடத்திலே அமைந்துருக்கா ,எப்படி ?''
         ''அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ஜாக்கிரதைன்னு ,அந்த இடத்திலே போர்டு இருக்கே !''

தலை எழுத்து என்று தப்பிக்கமுடியுமா  ,கணவனால் :)
                ''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு  உன் மனைவி  சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
            ''அது சரி ,என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா யாராலே மாற்ற முடியும் ?''

மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா :)
            '' TV ல்   'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
           ''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா  பார்த்துட்டு செய் !''

பேசத் தெரிந்த  அரசியல்வாதி :)
நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும்   என்றதும் ...
ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
நியாய 'எடைக்' கடைகளை திறக்க வேண்டும் என்றதும் 
ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !

18 comments:

  1. மாமியார்... யாருன்னு காமி... ஒரு கை பார்த்திடுவோம்...!

    முடி சூடா மன்னி... முடி சூட எண்ணி முழுகிவிட்டாரே...! தலை முழுக வேண்டியதுதான்...! எங்களை எல்லாம் சந்தோஷமா இருக்க விட்டிட்டுப் போயிட்டியே... எங்கிருந்தாலும் வாழ்க... ‘முடி’ந்தால்...! ‘விக்’கி அழ முடியல...!

    இது சொர்க்கத்தின் திறப்பு விழா... வாங்க ஒங்கள அங்கதான் கூட்டிட்டுப் போறோம்...!

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... இரு கோல மயில் என் துணையிருப்பு...!

    செய்(து)... செத்து மடி...!

    நன்றாக எதையுமே எடை போடத் தெரிந்தவர்கள்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் தனிக் குடித்தனமே நல்லதுன்னு சொல்றாங்களோ :)

      செத்தும் கொடுத்த நவீன சீதக் காதியோ :)

      நீங்க சொல்ற சொர்க்கம் மண்ணில்தானா:)

      இரு கோல மயில்ன்னா அலங்கோலம் ஆகிடாதா :)

      சாப்பிட்டு மடின்னும் சொல்லலாமோ :)

      மக்களுக்குத்தான் அது தெரியலே :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. மொட்டைத் தலைக்கு விளம்பரம் கிடைக்குமா :)

      Delete
  3. Replies
    1. தலை எழுத்தை ரசிக்க முடியுமா ஜி :)

      Delete
  4. Replies
    1. விளம்பர பண்ண செலவு ரொம்ப அதிகம்தானே :)

      Delete
  5. Replies
    1. முயற்சி செய்து திணித்த ஐந்துக்க நன்றி :)

      Delete
  6. Replies
    1. நானல்லவோ உங்களுக்கு நன்றி சொல்லணும் :)

      Delete
  7. அவுகளுக்கு என்ன வசதியானவுக..ஒவ்வொரு ரூம்க்கும் தனித்தனியாக கோயில் கட்டிக்ருவாங்க.... இங்கே ஒரு கோயிலு கட்டுறதுக்கே..போகாதே இடமெல்லாம் போயி..மிதிக்க கூடாத இடத்தையெல்லாம் மிதிக்க வேண்டியிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. நீங்க கும்பிடுற கோவில் எதுன்னு புரியுது :)

      Delete
  8. சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)//

    நம் சமுதாயத்தில் கல்யாணம் மிகப்பலருக்கு மிகப் பெரிய விபத்துதான் பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. இந்த விபத்தில் கை கால் ஊனம் ஆனாலும் பரவாயில்லை ,வாய் அல்லவா மௌனமாகி விடுகிறது :)

      Delete
  9. இப்போதெல்லாம் தோழிகள் கூட அட்டாச்ட் ஆக வாழ்ந்திருக்கிறார்கள்
    கூடவே அதிகாரமும் வருமே
    திருமணம் விபத்தல்ல அதன் விளைவே விபத்து
    எங்கே காட்டுங்கள்
    செய்து சாப்பிடுவேன் என்று இருக்க வேண்டுமோ
    விவரம் தெரிந்ததால்தான் அவர் அரசியல்வாதி

    ReplyDelete
    Replies
    1. அது வேறு கதை ,கல்யாணம் வேண்டாம் என்பவர்கள் செய்வது :)
      அதுக்குத்தானே இவ்வளவு சண்டையும் :)
      விபத்துக்கு மூலம் அதுதானே :)
      அதானே ,இன்னொரு பெண்ணும் ஏமாறுவாளா:)
      அவர் சாப்பிடுவார் ,நம்மால் முடியணுமே :)
      அதை விட முக்கியம் ,பேசி ஏமாற்றத் தெரியணும்:)

      Delete