26 February 2017

வாசலுக்கு வாசல் போராட்டம்தானா:)

          ''மறுபடியும்  இன்னொரு  வாசல்  போராட்டமா ?''
         ''வாடி'வாசல்'  திறக்கும் போராட்டம் முடிந்தது ,இப்போ நெடு 'வாசல் ' போராட்டம்  ஆரம்பித்து விட்டதே  !''

புதுசா நாய் வளர்ப்பவருக்கு வந்த ஆசை :)              
          ''குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
          ''அதை தெரிஞ்சிக்கத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொல்றேன் !''
நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா  :)
            ''மேக்கப் இல்லாமல் வீட்டுக்குப் போவதில்  உங்களுக்கு என்ன பிரச்சினை  ?''
            ''என் பையனுக்கே என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குதே!''

வருகிறது அரசு ஊழியர்களின் புதுமைப் போராட்டம் :)
             ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே ,ஏன் ?''
              ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''

 பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)
  பெற்றோர்கள் குழந்தைகளை 
 'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
 குழந்தைகள்  பெற்றோர்களை 
 முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

18 comments:

  1. வணக்கம்
    ஜி
    நாயும் பெண்ணும் அழகு. எழுதிய வார்த்தைகள் அத்தனையும் அருமை இரசித்தேன் ஜி.த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தில் ஏதோ ஒரு கவிதைத் தனம் தெரியுதே,கவனித்தீர்களா ,ரூபன் ஜி :)

      Delete
  2. வாசல் போராட்டங்கள்..

    நல்ல சோதனை; நல்ல படம்.


    மேக்கப் மகாதமியம்!


    நிரந்தர வேலைன்னா அப்படி அர்த்தம் எடுத்துக்கொள்கிறார்களா!


    பதிலுக்கு பதில்! பழிக்குப்பழி!

    ReplyDelete
    Replies
    1. ஓய்வதே இல்லையா :)
      படம் ஏதோ சொல்லுதே :)
      இருந்தாலும் இப்படியுமா :)
      தற்காளிக உலகில் நிரந்தரம் இது சரிதானே :)
      இரண்டும் ஒரே இடத்தில் இருந்தால் பேரப் பிள்ளைகளை கவனித்துக் கொள்வார்களே :)

      Delete
  3. வாடி... வாசலுக்கு... வருவீல்ல... வீட்டுக்கு வீடு வாசல்படி...!

    ஆனா... நீ அடிக்கடி கடிக்கிறீயே... ஓ... நீதான் அந்த ஜாதி இல்லையே...!

    பையன்கூட பரவாயில்லை... வீட்டுக்காரர் அடுத்த வீடு போய்ப் பாருங்க என்கிறாரே...!

    ‘நீங்க வியர்வை சிந்திப் பாடுபட்டது போதும்... இனி சிந்த வியர்வை இல்லை...’ நிரந்தரப் பொதுச் செயலாளர்ன்னு சொல்லி... வாழ்த்தி வழியனுப்பி வைக்கலையா...! ‘எங்கிருந்தாலும் வாழ்க...!’

    சேர்ந்து வாழ்வதற்குப் பதிலா... சேர்த்து வாழக் கற்றுக் கொண்டார்கள்...!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. வாசலுக்கு வந்தா வில்லங்கம் எல்லாமே வெளியே வந்திடுமே :)

      குரைக்காமல் கடிப்பது தப்பா :)

      விவகாரம் எங்கேயோ போவுதே :)

      செத்த பின்னாலே எப்படி வாழ்றது :)

      அப்படி சேர்த்து வாழ்ந்துதான் என்ன சுகம் கண்டார்கள் :)

      Delete
  4. Replies
    1. உங்க ஊரில் பூட்டு போடும் போராட்டம் எப்போ ,ஜி :)

      Delete
  5. Replies
    1. படம் சொல்லும் சேதி புரிந்ததா நண்பரே :)

      Delete
  6. எங்கே எங்கே நெடுவாசல் ?
    இது குரைக்கமலேயே கடிக்கும் போல
    கணவனுக்கு அடையாளம் தெரிந்தால் சரி
    நிரந்தர வேலை கட்சிப் பொதுசெயலாளர் போலவா
    அனாதரவாய் விடாமல் ஏதோ ஒரு இல்லத்தில் சேர்க்கிறார்களே

    ReplyDelete
    Replies
    1. முத்துநிலவன் அய்யாவோட ஊரிலேதான் இருக்கு :)
      கடிக்ககூடாதுன்னு சட்டம் ஒன்றும் இல்லையே:)
      அவருக்கும் தெரியாட்டி பெண்டாட்டின்னு சொல்லிக்க முடியாதே:)
      நிரந்தர முதல்வரே காணாமல் போய்விட்டாரே :)
      அது சரி ,பணம் இருந்தாலும் மனம் இருக்கே :)

      Delete
  7. Replies
    1. எதை ரசீத்தீர்கள் சொல்லுங்க ஜி :)

      Delete
  8. பெற்றோர்கள் செய்ததும்
    குழந்தைகள் செய்வதும்
    என்னால தாங்க முடியல

    ReplyDelete
    Replies
    1. பொருளாதார நிர்ப்பந்தம் அப்படிப் படுத்துதே ,என்ன செய்ய :)

      Delete
  9. Replies
    1. செல்லில் ரசித்தமைக்கு நன்றி ராஜ்வேல் ஜி :)

      Delete