14 February 2017

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)

நியாயம் தெரிந்த தாத்தா :)         
              '' சாக்லேட்டை கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுற பேரனைக்   கண்டியுங்கன்னு  சொன்னது தப்பா போச்சா ,ஏன்  ?''
              ''சர்க்கரை  நோய்  இருக்கிற எனக்கே, இனிப்பு தின்கிற ஆசை விடலே ,போயிட்டு போறான் விடும்மான்னு  சொல்றாரே  !'' 

தெரிந்தே எவனும் குழியில் விழுவானா :)             
          ''அந்த பொண்ணுக்கு  லேசுலே கல்யாணம் ஆகாதா ,ஏன் ?''
         '' நன்றாய் சமைக்கத் தெரிந்த வரன் தேவைன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்து இருக்காரே !''

காதல்  முறிஞ்சு போச்சே :)      
          ''என்னடி சொல்றே ,உன் காதலர்  'பணப் பூர்வமாய் 'தான் உன்னை விரும்புறார்னு  தெரிஞ்சுபோச்சா ,எப்படி ?''
         '' கல்யாணத்துக்கு அப்புறமும் ,நான் கட்டாயம் வேலைக்கு  போயாகணுமாம் !''

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)
             ''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிக்கலையே ,போலீஸ்  ஸ்டேசன்லே ஏன் மொய் வச்சுட்டு வர்றே ?''
              ''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 

டைம்பாஸ் காதலுக்கு தாலி எதுக்கு:)
             ''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் யாரையும் காணாமே ,ஏன் ?''
             ''வர்றவங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைப்போம்னு ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கே !''
காதலர்கள் ஜாக்கிரதை:)
பிப்ரவரி 14...
காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்... 
நவம்பர் 14...
குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !

23 comments:

  1. ரசித்தேன் ஜி அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்களை நம்பாதே படம் எப்படி, சூப்பர்தானே :)

      Delete
  2. Replies
    1. பலமான உண்மைகள் கூட :)

      Delete
  3. அப்பத்தானே... சர்க்கரை ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ன்னு சொல்ல முடியும்...!

    தப்பான தகவலைப் பதிவு செய்யாதிங்க... இப்பல்லாம் கேட்டரிங்தான் மாணவர்கள் அதிகமா படிக்கிறாங்க...!

    ஆணுக்கொரு நீதி... பெண்ணுக்கொரு நீதியா...?!

    வலை வீசித் தேடுறோமுன்னு வழக்கமாச் சொல்றதுதான்... அதைப் போயி நம்புறியே...!

    ஒனக்கு விருப்பமுனா... ஒனக்குப் பிடிச்சிருந்தா கல்யாணம் செஞ்சுக்க... அவுங்கள்ல யாராவது ஒருத்தரை...!

    சாரி... குழந்தைகள் தினத்தைக் கொண்டாடத்தான் ஒன் புருஷன் இருப்பானே...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. இதுவும் தாத்தா ,பேரனுக்குத் தர்ற சொத்துதானா :)

      பாராளுமன்றத்திலேயே பதிவானதை அழிச்சிடடாங்கலாம் ,நானும் ...:)

      சரி சரி ,சமையலை நான் பார்த்துக்கிறேன் ,பாத்திரத்தை நீங்க தேய்க்க வாங்க :)

      வலையிலே மீன் மாட்டிக்கும் ஓடிப் போன மீனா மாட்டிக்குவாளா :)

      பழகிப் பார்த்து முடிவெடுக்கிறேனே:)
      கள்ளக் காதலர்கள் தினம்னு ஒண்ணு இருந்தா கொண்டாடலாமா :)

      Delete
  4. Replies
    1. ஜாக்கிரதை தேவைதானே :)

      Delete
  5. Replies
    1. கேட்டரிங் படித்த பையன் ,கேட்ட ரிங்கைப் போட்டு கல்யாணம் முடிப்பாரா மாமனார் :)

      Delete
  6. ''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் யாரையும் காணாமே ,ஏன் ?''//

    இந்த வருடம் ரோஜா விற்பனை சரிஞ்சிடிச்சாமே!!!

    ReplyDelete
    Replies
    1. பணம் மதிப்பிழந்து போச்சா ,காதலர் தினம் மதிப்பிழந்து போச்சா :)

      Delete
  7. பொதுவாக
    இன்றைய நகைச்சுவைகள் யாவும்
    வாழ்க்கையில் வந்து போகும்
    நிகழ்வுகளே - ஆனால்
    சமைக்கத் தெரிந்த வரன்
    கட்டாயம் வேலைக்கு
    இரண்டும் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே , கண்ணில் காண்பதுதானே மனக் கண்ணில் வரும் :)

      Delete
  8. ஹஹஹ் காதலர் தினம் - குழந்தைகள் தினம் ஹஹ்

    ரசித்தோம் அனைத்தையும் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு தினத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கே ஜி :)

      Delete
  9. அருமை அனைத்தும் அருமை !!!

    ReplyDelete
    Replies
    1. பணப் பூர்வ காதல் உண்மைதானே :)

      Delete
  10. Replies
    1. சமைக்கத் தெரிந்த மாப்பிள்ளையும் சூப்பர்தானே :)

      Delete
  11. டைம் பாஸ் காதலுக்கு தாலி தேவையில்லைதானே :)

    ReplyDelete
  12. தன்னைப் போல் பேரன் வர தாத்தாவுக்கு தடை இல்லையே
    அப்போ காட்டரிங் படித்தவர்கள்தான் கணக்கில் இருப்பார்கள்
    கால நிலவரம் தெரிந்தவர்
    காணாமல் போனவர் தானாக வரமாட்டார் என்பது தெரியும் பாழாய்ப்போன போலீஸ் கண்டுபிடிக்கக்கூடாது அல்லவா
    படம் கதை சொல்லுதே
    நல்ல கணக்குத்தான்


    ReplyDelete
    Replies
    1. அதுக்காக சர்க்கரை நோயாளியா ஆவதை வரவேற்க முடியுமா :)
      நேரடியா கேட்டரிங் வரன் தேவைன்னு சொல்லி விட வேண்டியதுதானே :)
      வேண்டிய அளவுக்கு இவரால் சம்பாதிக்க முடியாதவரோ :)
      வம்பு பண்ணி மாமூல் சம்பாதிப்பதே அவர்கள் தொழிலோ :)
      இதைதான் படம் சொல்ல முடிந்த அளவுக்கு எழுத்து சொல்லாது என்கிறார்களோ :)
      இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கே :)

      Delete