1 December 2015

பொண்ணோட சைசுக்கு இது தேவையா :)

                       ''கல்யாணத்தில் அம்மி மிதிக்கிற சடங்கெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் ,கேட்டீங்களா?''

                        ''என்னாச்சு ?''
                         ''அம்மிக் கல்லே உடைஞ்சு போச்சே !''

மாமூல் நூறு வகை ?

                         ''அந்த  ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் 

,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
                 

            ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி 

வெளியிட்டு இருக்காரே !''


 அதுவுமா இருக்கும் ?  

                 ''அந்த அகராதிகிட்டே  கல்யாண 

ஆல்பத்தைக் காட்டாதேன்னு   சொன்னா ,கேட்டியா ?''
                
          ''இப்போ அதுக்கென்ன ?''
             
          ''பஸ்ட் நைட்  போட்டோ ஒண்ணுமே 

இல்லையேங்கிறான் !''
  1. இவர் நம்ம ஊர் சர்தார்ஜி போலிருக்கு!
  2.         ''ஆனந்தவிகடன்  வாங்கவா வாராவாரம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு  வந்து போறீங்க?''
  3.             ''அங்கே வாங்கினா 27 ரூபாய் ,இங்கே வாங்கினா 25 ரூபாய் ஆச்சே !''

சுய ஒளி சூரியனாய் இருக்கணும் !

இரவில் நிலா மின்னுவது 
இரவல் ஒளியால் ..
இரவல் வாங்கி ,வாங்கியே 
ஒருநாள்  ஓடி ஒளிந்துக் கொள்கிறதா?

23 comments:

  1. இப்ப வர்ற கல்லெல்லாம் ஸ்டாங் இல்லைன்னு இப்பவாவது நம்புங்க... சொன்ன கேக்கமாட்டிங்களே...!


    பத்தாவது பதிப்பாம்... பத்தாதா பின்னே...! இன்ஸ்பெக்டர் மாமூலவிட இதுல நல்ல கலக்சனானம்...!


    பஸ்ட் ‘நைட்ல’ போட்டோ எடுத்ததாலே... இருட்டுல ஒன்னும் தெரியல...!


    சர்தார்ஜி விவரம் தெரியாம அலையுறாரு... ஆனந்தவிகடன் வாங்கவா? சீக்கிரமா பெங்களூர் ‘உள்ளே’ போகச் சொல்லுங்க...!


    ‘சூரியப்பெண்’ என்பது இப்பத்தானே தெரியுது...! மாசத்தில ஒரு நாள் ஒதுங்குதே தனியாக...! ஒரு வேளை நிலா இரவல் வாங்கிய கடனைக் கேட்ட போயிருக்குமோ?

    த.ம.1














    ReplyDelete
    Replies
    1. போலியான சடங்கில் உண்மையான் அம்மி எதுக்குன்னு நினித்ஹு விட்டார்களோ :)

      பல மொழிகளில் வேறு மொழி பெயர்ப்பு வரப் போகிறதாமே :)

      பிலாஸ் லைட்டை போட்டு எடுத்தால் பளார் என்று அறை கிடைக்கும் என்று பயந்து விட்டாரா :)

      அதானே ,ஆவி விற்கிற கடையே கல்லடி வாங்கிற நேரத்தில் தேவையா :)

      ஒதுங்குவது நிலாப் பெண் இல்லையா :)

      Delete
  2. Replies
    1. அம்மிக் கல் உடைந்ததைதானே :)

      Delete
  3. மாமூல் ஜோக் நல்ல வழிகாட்டி.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நானும் தானே நல்ல வழிகாட்டி :)

      Delete
  4. அம்மியொ்ட கல்லே உடஞ்சு போச்சுன்னா..ஏப்ப..சாப்ப..கணவன் என்னாவான்,,,????

    ReplyDelete
    Replies
    1. அதான் தாலி கட்டாம ஓடிட்டானோ :)

      Delete
  5. அம்மிக்கல் அருமை

    ReplyDelete
    Replies
    1. மிதித்தவள் எப்படி :)

      Delete
  6. அம்மிக் கல் உடைந்து,,,,,,,,,
    இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல,,,,,,
    அனைத்தும் அருமை,

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்த்த அனுபவம் இது :)

      Delete
  7. அம்மிக்கல் உடைந்து..... கோழி மிதித்து குஞ்சு சாகுமா.?மாமூல் முன்பே படித்த நினைவு.ஃபர்ஸ்ட் நைட் போட்டோ... ஏதோ ஆர்வம்தானேன்னு விடாம....

    ReplyDelete
    Replies
    1. குஞ்சு சாகுமான்னு அவர் வீட்டுக்காரர்தான் சொல்லணும் :)நீங்க படிச்சது முதல் பதிப்பா இருக்கும் :)
      இதிலேயுமா ஆர்வம் :)

      Delete
  8. 01. மனைவி ஸ்ட்ராங்க்....
    02. நமக்கு 1 வாங்கி அனுப்புங்க ஜி
    03. விவகாரமானவனோ....
    04. 2 ரூபாய் மிச்சமாகுதே...
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஆபத்தாச்சே :)
      மீசை உள்ளவரெல்லாம் s i யாக முடியுமா :)
      'வில்லன்'கம்மானவனும் கூட :)
      வாங்காமல் விட்டால் நிறைய மிச்சமாகுமே :)
      ஒழியும் இடம்தான் தெரியலே :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    ரசித்தேன் ... வாழ்த்துக்கள் ஜி.த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மாமூலாய் வந்து ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  10. 'அம்மி மிதித்த மம்மி'யா?
    'அம்மி மிதித்த பொம்மி'யா?



    .

    ReplyDelete
    Replies
    1. வயசு ரொம்ப கம்மி :)

      Delete
  11. சுய ஒளி சூரியனைத்தானே :)

    ReplyDelete
  12. எல்லாமே ரசித்தோம் என்றாலும் சுய ஒளி சூரிய ஒளியாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் ரசித்தொம்

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகில் எத்தனை சுய ஒளி சூரியன்கள் இருப்பார்கள் :)

      Delete