6 December 2015

சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது :)

 கால் சென்டர் பெண்ணைக்  கட்டிக் கிட்டவன் பாடு :)          

            ''என்னைக் கட்டிக்கிட்டு கணவன் ஆனதுக்கு பதிலா ,கஸ்டமராவே இருந்து இருக்கலாம்னு ஏன் சொல்றீங்க ?''

           ''கஸ்டமருக்கு  மட்டும்தானே உன்னாலே  பொறுமையா பதில்  சொல்ல முடியுது  ?''



 வாலிப வயதை அறிந்த தந்தை  :)
                      ''என்னங்க .நம்ம பையன் வேலையை  தேடிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
                        ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''

கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்:)

           ''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''
             ''வெங்காயம் நறுக்குங்க என்று சொன்னா , கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேட்குதே !''

  1. சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது :)

    நாம் விரும்புகின்ற ஒன்றில் மனம்  லயித்துப் போகும்போது ...
    நம்மை நாமே இழந்து விடுகிறோம் ...
    இது காதலில் வேண்டுமானால் சுகமாய் இருக்கலாம் ...
    மற்ற விசயங்களில் துக்கத்தைத்தான் தரும் என்பதற்கு உதாரணம் இதோ ...
    நேற்றைய தினம்...
    மாமியாரும் ,மருமகளும் சேலை வாங்க மதுரையில் புகழ்பெற்ற ஒரு கடைக்கு சென்றுள்ளார்கள் ...
    ஒன்றரை மணி நேரம் சேலைகளில் மனம் லயித்து ...
    'பெரும் புதை பொருள் ஆராய்ச்சி செய்து'
    சேலையை செலக்ட் செய்து பில் வாங்கி ...
    கவுண்டருக்கு சென்று சோல்டர் பேக்கை திறந்து பார்த்தால் பர்சைக் காணவில்லை ...
    கடை உரிமையாளரிடம் விபரத்தைச் சொல்லி ...
    cctvகேமரா பதிவுகளைப் பார்த்தால் அதிர்ச்சி தரும் காட்சி விரிந்தது ...
    எட்டு வயது பெண் குழந்தை சோல்டர் பேக்கை திறந்து பர்சை எடுத்து அருகில் இருந்த அவள் அம்மாவின் கையில் கொடுக்கிறது ...
    பெரும் பாடுபட்டு சம்பாதித்த பணத்துடன் அவர்கள் உடனே எஸ்கேப் ஆவதும் தெரிகிறது ...
    திருடப் பட்ட பர்சில் 'செல்'லும் இருந்ததால் உடனே தொடர்பு கொண்டபோது  ...
    சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது ...
    நொந்து நூலாகி வீட்டிற்குச் செல்ல டூ வீலர் சாவியை தேடினால் ...
    பர்சோடு சாவியும் போனது தெரிந்தது ...
    மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ...
    டூப்ளிகேட் சாவிக்கும் இருநூறு அழுது தொலைத்துள்ளார்கள் ...
    இவையெல்லாம் மனம் ஒன்றில் மட்டுமே லயித்ததால் வந்த வினைதானே ?

    1. குருவிடம் கேட்கக் கூடாத கேள்வி :)

    2.             ''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே என்ன கேட்டார்?''
                    ''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!''
    3. டெங்கு ...அந்த பயம்  இருக்கட்டும் !

      எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும் 
      மூடிக் கிடப்பது ,,திருடனுக்கு பயந்து அல்ல ,
      கொசுவுக்கு பயந்துதான் !

18 comments:

  1. என் தளத்துக்கு வருவதற்கும் ஏதேனும் பேரிடர் ஏற்பட்டுள்ளதா ?வலையுலக உறவுகளே கொஞ்சம் சொல்லுங்களேன் :)

    ReplyDelete
  2. கஸ்ட காலம்தான்னு சொல்லுங்க...! பொறுத்தது போதும்... பொங்கி எழு...!


    பத்மாட்ட இருந்து செக் வருமான்னு செக் பண்ணிக்கிட்டு பையன் வெளிநாட்டுக்குப் போக இருக்காங்க...!


    என்ன சொல்றான்னே இந்த சாப்ட் இன்ஜியருக்கு கேக்கலை... மொதல்ல சாப்புட்டிட்டு வாரேன்!


    மாமியாரும் ,மருமகளும் சேர்ந்து சேலை வாங்கப் போகக்கூடாதுங்கிறது... மாமியார் எங்க வந்தாலும் பெரும் நஷ்டம்தான்...! ஏங்க... இதுக்குத்தான் மாமியார விட்டிட்டு தனியாக போகலாமுன்னு சொன்னா நீங்க எங்க கேக்குறீங்க...!


    இந்திரன் கெடவில்லை... கெட்டது அந்த அகலிகை பெண்தானே...! பெரிய அகழி ஆகிப் ஆயிரங் கண்ணுடையவளாகிப் போனாளே...! குரு எந்தக் காலத்தில கெடப்போறார்...?


    அந்த... அந்த... பயம் இருக்கட்டும்... கடுகு சிறுத்தாலும் காரம் போகாது...!

    த.ம.2














    ReplyDelete
    Replies
    1. பொங்கி எழுந்தால் பாலை ஊற்றி அணைச்சுடுவா போலிருக்கே :)

      உப்புமா பததுமா கிட்டே இருந் செக்கா :)

      சாப்டாதான் காத்து கேக்குமோ :)

      மாமியாரை விட்டுட்டு போக இப்படியும் ஒரு பழமொழியா :)

      கெடுக்கணும்னா ,ஆயிரங் கண் உடையாள் மீது இந்திரனுக்கு எத்தனைக் கண்ணோ:)

      பேரிடரின் தொடர்ச்சியாய் இன்னும் என்ன கெடுதல் தரப் போகிறதோ கொசு :)

      Delete
  3. Replies
    1. மழைக்கும் நல்லவர்களுக்கும் சம்பந்தம் உண்டா :)

      Delete
  4. செக்கு - செகோஸ்லோவேகியா...அஹஹஹ்

    ஆமாம் கொசுவிற்குப் பயந்து சன்னலை கதவை மூடி போர்வைக்குள் புகுந்து கொள்ள வேண்டியிருக்கே ஜி...

    ReplyDelete
    Replies
    1. செக்கு மாடு சுற்றி வரலாம் ஊர் போய் சேராது தானே :)

      கொசு ரத்தம் குடிப்பதும் இல்லாமல் ,லேப் டெஸ்டுக்கும் ரத்தத்தை தூக்கிட்டு அலைய வச்சிடுதே :)

      Delete
  5. 01. டைவேர்ஸூக்கு அப்ளை பண்ணலாமே...
    02. அங்கே கூட விசா கிடைக்காதோ...
    03. காரியக்கார காது
    04. பட்டால்தானே தெரிகிறது
    05. அவசியமில்லாத கேள்வி
    06. உண்மைதானே... போலீஸ் அதிகாரியே பயப்படும் பொழுது...

    எனக்கு பேரிடர் இல்லை ஜி வழக்கம் போல் இந்தியநேரம் மாலை 05.30 மணிக்குதான் என்னால் வரமுடிகிறது ஆனால் ? வாக்குச்சாவடி வேலையை காலையிலேயே முடித்து விடுவேன் செல்மூலம்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மறுநாளே போட்ட மறுமொழி என்னாச்சு ,சாரி ,கில்லர் ஜி :)

      Delete
  6. - கஸ்டமருக்கு மட்டும்தானே உன்னாலே பொறுமையா பதில் சொல்ல முடியுது ?''
    - 'செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
    - டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேட்குதே !''

    - இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!''
    இப்படி ஒரே அசத்தல்!
    சிரிப்புத் தான் சகோதரா....
    நன்றி
    .https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தொழில் தர்மம்,கணவரை விட கஸ்டமரே மேல் என்று நினைக்க்கிறாரோ :)

      Delete
  7. மனம் லயித்தால் பின்னாடி துன்பம் வரும் என்பது நிச்சயமாச்சு......

    ReplyDelete
    Replies
    1. மெய் மறந்து நின்றால் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட உருவி விடுவார்கள் ,ஜாக்கிரதை :)

      Delete
  8. //சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது :)//

    திருடன்(ள்)களுக்கு அறிவு ஜாஸ்திதான்!

    .

    ReplyDelete
    Replies
    1. திருடள்...பெண்பாற் சொல் ,நல்லாயிருக்கே !திருடிகள் இதை ஒப்புக் கொள்வார்களா :)

      Delete
    2. திருடி
      திருடள்
      - எது சரி?
      பட்டிமன்றம் வைக்கலாமா?


      .
      .

      Delete
  9. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. தொண்டர்கள் கடவுளின் பிள்ளைகள் என்றால் ,அப்பன்கார கடவுளுக்கே கருணை இல்லையா :)

      Delete