24 December 2015

கணவன் ,மனைவிகளும் கற்பூர வாசனை அறியாதவர்களா:)

அழையா விருந்தாளின்னா அவமதிப்புதானா :)

             ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
               ''வெறும் கையோட வந்து ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''



டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் :)
         '' டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
                     ''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''

  1. சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா :)

    உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
    தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...
    டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
    மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும்  பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
    அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
    நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
    அந்த  பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
    ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
    சோனியா காந்தி பெயரில் பிறப்புச்  சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
    அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
    அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
    நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருக்கும் தகவல் இது !
  2. வங்கி கணக்குமா கரெண்ட் கட் :)


                     ''அவர் கொடுத்த செக் எல்லாம் பணம் இல்லாமே திரும்ப வருதே ,ஏன்?''
                 ''அவரோட  கரண்ட் அக்கௌன்ட் ,கரண்ட் கட்  அக்கௌன்ட் ஆகி இருக்கும் !''

    1. கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா?




      கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
      கணவனோ,மனைவியோ 
      'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !



28 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முப்பத்தேழு நிமிடம் யோசித்து அடுத்த கருத்தைச் சொன்னதற்கு நன்றி :)

      Delete
    2. இடையில் ஒரு ஹிஹி மாட்டி கிட்டிருந்தது அதை தூக்கிட்டு புதியதாய் போட இத்தனை நிமிடம் ஆச்சா? ஹைய்ய்ய்யோ ஹைய்யோ!

      Delete
  2. ஹாஹா!

    கோழியை நினைத்தால் டீச்சர் நினைவுக்கு வருவார்...
    எங்கேயிருந்து இத்தனையும் பிடிக்கின்றீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. நினைவுக்கு வருவது கோழியால் டீச்சரா ,டீச்சரால் கோழியா :)

      கோழி பிடிக்க கூரையா ஏற முடியும் :)

      Delete
  3. முதல் ஜோக் படித்தால் பாவமாய் இருக்கிறது! ஒருதரம் செய்தால் பாவம் அவர். இதையே வழக்கமாக்கினால் பாவம் மற்றவர்கள்!!

    டீச்சர் ஜோக் புன்னகைக்க வைக்கிறது!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. கை கால் நன்றாகஇருப்பவரைப் பார்த்து பரிதாபப் பட்டால் நாம் தான் ஈனா வானா :)

      ஏட்டு முட்டை ஆம்லெட்டுக்கு ஆகாது என்பதாலா :)

      Delete
  4. Replies
    1. களவாணிப் பய பிள்ளயை விருந்தில் உட்கார வைக்கக்கூடாது தானே :)

      Delete
  5. புது செருப்பு கடிக்குங்கிறதுனால... ஒங்களுக்கு நல்லது பண்ணறதத்தவிர வேறெரொன்றும் அறியாதவர தப்பா நெனக்கலாமா...?

    கூமுட்டை இருக்கக்கூடாதுன்னுதான் முட்டை போடுறாங்க... சத்துணவு... முட்டைதானே...!

    தவறான நீதியை வழங்கியதற்காக மதுரையை எரித்த கண்ணகியைக் கூப்பிடுங்க...!

    ‘செக்’கு மாடு போல சுத்தி வரவேண்டியதுதானே...!

    கழுதைக்கு வாழ்க்கை பட்டா(ச்)சு...!

    த.ம.3





    ReplyDelete
    Replies
    1. அடடா .இவ்வளவு நல்ல எண்ணம அவருக்கு இருக்கா :)

      உண்ண முடிந்தால் சத்துணவு ,இல்லாவிட்டால் செத்த உணவுதானே:)

      கண்ணகி செய்த காரியதுக்கே ஒரு விசாரணைக் கமிஷன் வைக்கணும்னு சொல்றாங்களே :)

      சுற்றி வந்தால் ஊர் போய் சேருமா :)

      ச் எதுக்கு ,முப்பத்திரண்டும் பத்திரம் :)

      Delete
  6. முதல் ஜோக்கில், பாவம் அவர் சாப்பிட்டு முடித்த பிறகு அடித்து துரத்தியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருணை உள்ளம்,அவங்களுக்கு இல்லாமல் போச்சே :)

      Delete
  7. Replies
    1. கற்பூர வாசனையும் தானே :)

      Delete
  8. 01. நாட்டுல நிறைய டிக்கெட் இப்படி திரியுது ஜி
    02. அப்படீனாக்கா வாத்தியாரைப் பார்த்தால் என்ன ஞாபகம் வரும் சேவலா ?
    03. நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி ஜி
    04. இதுதான் கரண்ட் அக்கவுண்டா ?
    05. அடடே....

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் நெட் காணாமல் போனதால் ,உடன் மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
  9. ரசித்தேன் ஜி...
    டீச்சர் முட்டை ஜோக் அருமை போங்க...
    சும்மாவே நம்ம பயலுக டீச்சர் முட்டை போடுவீங்களான்னு கேட்டு அடிவாங்கியிருக்கானுங்க... அதை ஜோக்கில் சொன்ன வித அருமை.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் நெட் காணமல் போனதால் ,மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
  10. அப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால் பந்திவரை ஏன் விடவேண்டும் கோழியும் டீச்சரும் தவிர யார் யார் முட்டை போடுவார்கள்அந்தப் பெயரில் வேறு யாரும் பிறக்கக் கூடாதா என்ன.?அவர் மீது வழக்குத் தொடர வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் நெட் காணமல் போனதால் ,மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
    2. இரண்டு நாள் நெட் காணாமல் போனதால் ,மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
  11. //வெறும் கையோட வந்து ,புது செருப்பு காலோட//

    ஜோக்கில வார்த்தை விளையாட்டு!
    சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் நெட் காணமல் போனதால் ,மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
  12. //''அவரோட கரண்ட் அக்கௌன்ட் ,கரண்ட் கட் அக்கௌன்ட் ஆகி இருக்கும் !''//

    நல்லவேளை... ஷாக் அடிக்கலையே?

    .

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாள் நெட் காணமல் போனதால் ,உடன் மறுமொழி கூற முடியவில்லை ,மன்னியுங்கள் !
      நன்றி :)

      Delete
  13. 1. பாவம் அவர்...இப்படி நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள்..வறுமையில்

    டீச்சர் ஜோக் ஹஹஹஹ்..

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. வறுமை என்றால் சாப்பிட்டு போகட்டும் ,செருப்பை திருடினால் எப்படி :)

      Delete