4 December 2015

கணவனுக்கு பிடித்தது,மனைவிக்கும் பிடிக்குமா :)

   இந்த மழை போதுமா ,இன்னும் ......(:              

                 ''பேய் மழையினால் ஒரு தொல்லை விட்டதா ,என்ன அது ?''

                            ''இனிமேல் வீட்டுக்கு வீடு மழைநீர்  சேகரிப்பு தொட்டி கட்டச் சொல்ல மாட்டாங்களே !''
     
            

கணவனுக்கு பிடித்தது,மனைவிக்கும் பிடிக்குமா :)

                  ''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
           ''அவளுக்கு என்னை அதி'காரம்'  பண்ணத்தானே  பிடிக்குது ?''

வடிவேலுவின் 'ஔவ்வ்வ்' வள்ளுவருக்குப் பிடிக்குமா ?

            ''திருவள்ளுவர் இப்போ வந்தா ,வடிவேலு அடிக்கடி சொல்ற பஞ்ச் வார்த்தையை ரசிக்கமாட்டார்னு எப்படி சொல்றே ?''
            ''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற  எழுத்து வரவே இல்லையே !''


  1. ஓஹோதானாம் ,இந்தியச் சரக்கு,சொல்வது பிரிட்டிஷ் பயணி :)
  2. நம்ம ஊர் குடிமகன்கள் சாலையில் மட்டையாகி விழுந்துக் கிடப்பது ஒன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியல்ல ...
    நேற்றைய தினம் ...அதிகாலை 2 மணி ...
    வெள்ளைக்காரன் ஒருவன் மதுரை 
    கட்ட பொம்மன் சிலை அருகே இப்படி விழுந்து கிடந்ததால் மனசு தாங்கவில்லை  நமது மக்களுக்கு ...
    காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார்கள் ...
    வந்த போலீசார் தட்டி எழுப்பி விசாரித்தால் ...
    அந்த வெள்ளைக்கார போதையனிடம் இருந்து ஒரு தகவலும் பெற முடியவில்லை ...
    விடிய விடிய லாட்ஜ்களில் விசாரித்து கண்டுபிடித்து ..
    அவனை அறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார்கள்...
    போதை தெளிந்ததும் bad boys என்றே புலம்பினானாம் ...
    காரணம் ,ரூபாய் ஆயிரத்து ஐநூறுடன் அவன் பர்சைக் காணவில்லையாம்...
    நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது ...
    இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும் ?
    ஏற்கனவே நமது பெருமைமிகு பாரதத்தை பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று வெளிநாடுகளில் முத்திரை குத்தியுள்ளார்கள் ...
    உங்களுக்கு என்னாச்சு என்று மட்டையனிடம் கேட்டதற்கு சொன்னானாம் ...
    என் நாட்டு பீர் என்றால் 1 1 டின் சாப்பிடுவேன் ,ஆனால்இங்கே  5டின்னிலேயே போதை ஏறி விட்டது ,இந்திய பீர் சூப்பரோ சூப்பர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் 
    நமது குடிமகன்கள் மட்டுமே தெரிந்து இருந்த மதுவின் புகழ் இங்கிலாந்திலும் பரவி விட்டது ...
    எல்லா நாட்டினரும் நம்ம சரக்கின் அருமையை உணர்ந்து சுற்றுலா வரப் போவது உறுதி ...
    அந்நிய பண வரவால் நமது பொருளாதாரம் உச்சிக்கே போகப் போவதும் உறுதி ...
    மதுக் கடைக்களை மூடச் சொல்லும் நமது கலாச்சாரக் காவலர்களை சில வருடங்கள் நாடு கடத்தி விடலாம் !
  3. வாக்குச் [போட்டவனை ] சாவடி :)


               ''வாக்கு சாவடின்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
    ''ஏன்?''
               ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே சாவடிக்கிறாங்களே !''
    ..........................................................................................................................
             என் ஜோக்கை பல வருடங்களுக்கு  முன்  பிரசுரித்த  ஜூனியர் விகடனுக்கு நன்றி !

  4. பாம்பை அல்ல ,பயத்தைக் கொல்வோம் :)



    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால் 
    பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !

16 comments:

  1. பாருக்குள்ளே நல்ல நாடு :)

    முதல் பின்னூட்டம் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. குடி மகன்கள் தண்ணீயில் மிதந்தது போய்,ஊரே தண்ணீயில் மிதப்பதால் .barருக்குள்ளே நல்ல நாடுதான் :)

      Delete

  2. தண்ணீரில் மிதக்க வைத்தாய்... தெருக்கரைமேல் இருக்க வைத்தாய்... மழையே மக்களை கண்ணீரில் குளிக்க வைத்தாய்...மாநகரமே மழைநீர்த் தொட்டியாகி விட்டபிறகு... இனி நாடுதான் பெரிய மழைநிர்த் தொட்டிய (ஏரி குளத்தை) கட்ட வேண்டும்...!


    காரமே பொய்யடா... இது காற்றடைத்த பையடா...!


    ‘தமிழ்’ என்ற வார்த்தையைத் தவிர்த்தவராயிறறே... அய்யன்... அவ்...அவ்...அவ்...!


    நம்ம சரக்கு நல்ல சரக்கு...சும்மா நச்சுன்னு இருக்கு...!


    வாக்கு போடலைன்னை ஏண்டா போடலைன்னு சாகடிச்சுடுவாங்களே...அதுக்குப் பயந்துதான்...!


    பாம்புதான் அரசனாக வேண்டும்... வேண்டாம் என்றால் ‘நீயா?’ பாம்(பு)பாட்டிதான் அரசாள வேண்டும்...!

    த.ம.3






    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நடக்குமா என்று வியப்படைய செய்கிறது இயற்கை !

      அலங்காரம் மட்டும் என்ன உண்மையா :)

      தமிழையுமா ஆஆஆ :)

      சும்மா ஜிவ்வுன்னு ஏறும் ,சாட்சி இவர்தான் :)

      காசு வாங்கினா,அப்படித்தான் ஆகும் :)

      பாட்டி என்றாலும் அழகான பாட்டி :)

      Delete
  3. சென்னை மழை - விரைவில் இயல்பு நிலை திரும்பட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் விருப்பமும் அதுவே !

      Delete
  4. விரைவில் சென்னை உட்பட பாதிப்பு ஏற்பட அனைத்து மாவட்டங்களின் நிலைமை சீரடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கடந்து போகும் என்பது நீங்கள் அடிக்கடி சொல்வது தானே ஜி !

      Delete
  5. நமது அரசியல்வாதிகள் எதைத்தான் சரியாக கடைப்பிடித்தார்கல்
    நல்ல மனைவி
    புதிய விடயம்
    வாழ்க இந்தியா
    ஸூப்பர் ஜி
    உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. ஊரே தண்ணிக் காடா போன பின் கடைபிடித்தால் என்ன ,போனால் என்ன :)
      அலங் 'கார ' மனைவியும் கூட :)
      இதுவா அவ்வ்வ்வவ் :)
      இதிலா பெருமை :)
      சாவடிப்பது சரிதானா :)
      இதை சொல்ல பயமில்லையே :)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    விரைவில் மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பட்டும்...த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நம் அனைவரின் விருப்பமும அதுவே !

      Delete
  7. கணவர்கிட்டேதானே.... படைபலம் அதிகாரம் செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. படையும் இல்லாமல் பலமும் இல்லாமல் அதிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்கள் :)

      Delete
  8. காரம் அதி காரம்...செம...

    அஔவ்வ்வ்வ் ...ஹஹ்ஹஹஹ்

    தமிழகம் "தண்ணி"லதான் மிதந்துச்சு இப்போ நிஜமாவே தண்ணிலதான் மொதக்குது..

    ReplyDelete
    Replies
    1. மக்கள் அதிகாரம் என்பதைப் போல் ,இது மனைவி அதிகாரம் :)

      வடிவேலுவுக்கும் தெரியாதா செய்தி இது :)

      தமிழகம் அன்றும் இன்றும் :)

      Delete