இதுக்குத் தான் கால நேரம் முக்கியம்னு சொல்றது :)
''என்னங்க ,பெண் பார்க்க வர்றவங்களை சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
'' டிவி சீரியல்களைப் பார்க்காம ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு !''
'நளன் 'னா மனைவிகளுக்கு பிடிக்கத்தானே செய்யும் :)
''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''
ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா ?
''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?
|
|
Tweet |
1. அப்படியும் சொல்லலாம். சீரியல் பார்க்க முடியாமப் போகும். அதனால ஞாயிற்றுக் கிழமை வாங்கன்னும் சொல்லலாம்! சனிக்கிழமைகளிலும் சீரியல்கள் இருக்கே..
ReplyDelete2. நலனின் சமையல் மசாலா இல்லாமல், ஃபாஸ்ட்புட் இல்லாமல் எப்படி இருந்ததோ... இப்போ ஒத்து வருமா!!!!!
3. நோட்டுக் கலாச்சாரம் இனியாவது ஒழிய வேண்டும் என்று நினைக்கிறேன்.
4. கண் தெரியாத சிகை அலங்கார நிபுனருக்குப் பாராட்டுகள்.
கல்யாணமா முக்கியம் ,சீரியலை விட :)
Deleteஅதானே ,இது kfc களின் காலமாச்சே :)
ஜனநாயக நாட்டிலா :)
என் பாராட்டையும் சொல்லி விடுகிறேன் :)
பரவாயில்லை...உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடிஞ்சிடுது...வெள்ளம்தான் வடியவே மாட்டேங்கிது...!
ReplyDeleteநளனப் பிடிச்ச நளினி தமயந்திதான்...!
'நோட்டா 'ஓட்டுக்கு ‘நோட்டு’ போய்ச் சேரலையோ என்னமோ...?
‘உறுப்பு அறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன்...!’
த.ம2
வடிய விட மாட்டார்கள் ,வடிந்து விட்டால் அரசியல் பண்ண முடியாதே :)
Deleteஅதான் ,பெண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு ஓடிப் போனார் போலிருக்கு :)
அந்த நிலையும் வந்திடுமா :)
கலங்காத மனதுக்கு கலக்கல் வாழ்த்துக்கள் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
தலைப்பைக் கூடவா :)
Deleteசெய்தி ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. வழக்கம்போல் சிரிப்பு
ReplyDeleteபார்வைத் தெரியாதவரே உழைக்கிறார் அங்கே ,இங்கே நல்லா இருக்கிறவனும் ...டீ கடையில் ,நம்மை நிம்மதியா ஒரு டீயைக் குடிக்க விட மாட்டேங்கிறான் :)
Deleteபொண்ணுப் பார்க்கவும் நாள் இருக்கிறதோ!
ReplyDeleteத ம 5
சைட் அடிக்க நாளும் கிழமையும் ஏது:)
Deleteஓட்டுக்கு துட்டு கிடைக்கையில் நோட்டா கூடுவதுதான் இனிமேல் அதிசியம்...
ReplyDeleteஉண்மை உணர்ந்த மனத்தை பணத்தால் வாங்கி விட முடியாதே :)
Deleteஹஹஹஹ சரியான நாள் ஞாயிறு...ஆனா பாருங்க ஜி இப்போதெல்லாம் ஸ்கைப் வழியா பார்த்துக்கிறாங்க...கல்யாணமே கூட பண்ணிக்கிறாங்களாமே...
ReplyDeleteவாங்கற நோட்டு "நோட்டா" ஆக மாறினால் ஒரு புரட்சி நடக்குமல்லவா ஜி?!!!! நல்லதும் நடக்குமே
சேர்ந்து வாழறாங்களா ,இல்லே 'ஸ்கைப் 'பிலேயே குடும்பம் நடத்தறாங்களா:)
Deleteஅந்த நோட்டுதான் டாஸ்மாக்கில் சேர்ந்து வசூல் புரட்சி செய்யுதே :)
வணக்கம்
ReplyDeleteஜி
நீங்கள் எங்கோ போயிட்டீங்கள்.... ஜி.. அருமையாக உள்ளதுவாழ்த்துக்கள். த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தலைப்பைப் பார்த்து பல்பு வாங்கியதை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் ,சரியா ரூபன் ஜி :)
Delete01. அடடே இப்படியும் இருக்கோ..
ReplyDelete02. மத்தவங்களுக்கு கிடைக்காதோ..
03. உண்மைதானே....
04. நம்மூருல கஷ்டம்தான் அங்கே சடை பின்னல் அவசியமில்லை.
சீரியல் இப்படித்தானே மக்களை புத்திசாலி ஆக்கியிருக்கு :)
Deleteஅந்த யோகம் சிலருக்குத்தான் :)
நோட்டு படுத்தும் பாடு :)
குதிரைவால் கொண்டை சிம்பிள்தான்:)
எல்லாவற்றையும் ரசித்தேன்
ReplyDeleteநளபாக சாப்பாடு சூப்பர் தானே:)
Deleteசீரியலே இல்லைனாலும் டிவியை ஆன் பண்ணாவிட்டாலும்கூட, அந்த டிவியையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் பலர்!
ReplyDelete-
தப்பா நினைக்காதீங்க ,நேற்றுவரை முடிந்த கதையை மனத்திரையில் அசைப் போட்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள் :)
Deleteவழக்கம் போல !!!!!!
ReplyDeleteபூரண நலத்துடன் நீங்களும் இருக்கணும்னு நானும் நினைக்கிறேன் அய்யா :)
Delete