25 December 2015

மனைவியிடம் மறைக்க நினைத்தவருக்கு...:)

கொழுப்பு ஜாஸ்தி ,குடும்பத்தில் எல்லோருக்கும்  :)                      

             ''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''

                    ''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை விட்டுடுங்க என்று டாக்டர் சொல்லி விட்டாரே !''

            தொழில் செய்வதிலும் தலைக்கீழ் தானா :)        
           ''உங்கப்பா  ஐம்பது வருடம் முன்னாலே செய்த வியாபாரத்தை ,நீ இப்போ தலைக்கீழா செய்றீயா ,அப்படின்னா  ?''
           ''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''


 மனைவியிடம்  மறைக்க நினைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா :)

                        ''உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
                   '' ATM ல் பணம் எடுத்தவர் பணத்தை  குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு ,பாலன்ஸ்  சிலிப்பைக் கொண்டு வந்திருக்கிறாரே,டாக்டர்  !''


    1. நாட்டுப் பற்றிலே இது ஒருவகை :)

                           ''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் 
    2.  குடிக்கிறேன்னு சொல்றீயே ,ஏன்?''
    3.                          ''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் 
    4. போச்சுன்னா....அரசாங்கம்  பணத்துக்கு எங்கே போகும் ?''

    5. இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை :)

      திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
      வரதட்சனைத் தண்ணீரால் 
      வாடாத அபூர்வப் பயிர் !

17 comments:

  1. வணக்கம் ஜி !

    அப்பள ஆசை .............? உள்குத்து
    வைர வியாபாரம் .........? வரிக்குத்து
    நாட்டுப் பற்று ..............? நரிக்குத்து
    வரதட்சணை ..............? வம்புக் குத்து

    எல்லாத்துக்கும் தலை அப்பளக் குத்து
    எல்லாமே அருமை ஜி தொடர வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. குத்து எனக்கு விழுந்துவிட்டது

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி!

    ReplyDelete
  3. நீங்க எப்பவும் எள்ளுண்ணா எண்ணெய்யா நிக்கிறது டாக்டருக்கும் தெரிஞ்சு போச்சா...! இனி எள்ளுண்ணா எள்ளோட மட்டும் நில்லுங்க...!

    அப்பா செஞ்சது திருட்டுத் துப்பாக்கி ரவை வியாபாரமா...?! பையனோட துர்பாக்கியம் திருட்டு வைர வியாபாரமா...?!

    ‘பணம் குப்பையிலேன்னு...’ யாரோ அவருக்குத் தவறாச் சொன்னதக் கேட்டு சரியா நடக்கிறதா நெனைக்கிறாரு போல இருக்கு...!

    அரசாங்க நிர்ணயிச்ச டார்கெட்ட எட்டிப்பிடிக்க ஏதோ என்னாலான சின்ன உதவி...ராமர் பாலம் கட்ட அணில் உதவி செஞ்சுச்சாமே... அது மாதரி... இரண்டுமே உண்மை மாதரி தெரியல... எல்லாம் சொல்றதுனால சொல்றேன்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... டாஸ்மாக் சரக்க உள்ள இறக்கிட்டு வந்தாத்தான் உண்மை தெரியும்...!

    வரதட்சனைத் தண்ணீர் இல்லாம காய்ந்து போச்சு முதிர் கன்னிப்பயிர்... ரொம்ப முத்திப்போச்சு...!

    த.ம.6





    ReplyDelete
    Replies
    1. இல்லை என்றால் ,இந்த லொள்ளுதானே வேண்டாம்னு சொல்றேன்னு டாக்டர் சொல்லக்கூடும் :)
      இருக்கும் இருக்கும் :)
      பாட்டை ரசித்தால் இப்படியும் கோளாறா :)
      முதல்லே அந்த நல்ல காரியத்தைப் பாருங்க :)
      அடப் பாவமே :)

      Delete
  4. சீப்பை மறைத்தா கல்யாணம் நிக்காதுன்னு டாக்டருக்குத் தெரியவில்லை. வைரம் ரவைக்குத் தலைகீழா?எப்பவுமே இப்படி என்றால் டாக்டர் செக் செய்ய வேண்டியதுதான் நாட்டுப்பற்று நல்ல லாஜிக். வரதட்சிணை கண்ணீரால் வாடாத என்று இருக்க வேண்டுமோ.

    ReplyDelete
    Replies
    1. தாலியே இல்லாட்டியும் கல்யாணம் நடக்குமே :)
      வேறெப்படி சொல்லலாம் :)
      டாக்டர் பீசையாவது கிழிக்காமல் போனால் சரிதான் :)
      இருந்தாலும் லாஜிக் இடிக்குதே :)
      சரியாக சொன்னீர்கள் ,திருத்தி விட்டேன் ,நன்றி ஐயா :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்.
    த ம 7

    ReplyDelete
  6. ரசித்தேன் ஜி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தா ,எதுக்கு ? நெட் கட்டாகி ரெண்டு நாள் நிம்மதியாய் இருப்பேனென்று நினைத்து விட்டீர்களா :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் ...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்பளக் குத்தை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. ரவை வைரம்...ஹஹ

    டாஸ்மாக் அடப்பாவி!! ஹும் அப்ப நல்ல அரசாங்கம்ல மக்கள் நலன் மீது பற்று...??!!!

    ரசித்தோம் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வியாபாரம் ஓஹோதான் :)

      இதைதான் பரஸ்பர நம்பிக்கை என்பதா :)

      Delete