23 December 2015

நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)

தரகர் சொன்னதும்  ,சொல்லாததும் :)

               ''இந்த வீட்டடி மனையை வாங்கும் போதே ,பத்து அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொன்னதை நம்பியது  ,தப்பா போச்சா,ஏன் ?''
               '' வீட்டிலேயும் பத்தடி தண்ணீர் வரும்னு சொல்லாமல் விட்டுட்டாரே!''
    
  காலையில் வடித்த சாதம்,மதியமும் அதே சூட்டில் ?              
             
             ''அதெப்படி ,உன் சாப்பாடு மட்டும் சூடாவே இருக்கு ?''
             ''ஹாட் பாஸ்க்சை , இன்னொரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வருகிறேனே! ''


மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா :)

             ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''

 நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)
                 ''அந்த நடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டான்ஸ் டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரே ,என்னது ?'
 ''டான்சில் தான் வீக் ,ஃடான்சிலுமா வீக்னு கேட்கிறார் ''

பொன் நகைகளின் இருப்பிடம் !
கோடீஸ்வரர்களின் நகைகளும் 
நடுத்தர வர்க்கத்தின்  நகைகளும் 
வங்கிகளில்தான் அடைக்கலம் ...
ஒன்று  ஃசேப்டி லாக்கரில் ,
இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!




18 comments:

  1. 1. இனியாவது நல்ல ஏரியா நல்ல ஏரியா என்று தரகர் சொல்லும்போதே "நல்ல ஏரி ஐயா அது" என்று பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்!

    2. ஹாட்டான விஷயமா இருக்கே..

    3. ஒன்னொண்ணுக்கும் தனித்தனிக் கல்லு வாங்கிடலாமே பாஸ்!

    4. டைரக்டர் கஷ்டம் டைரக்டருக்கு!

    5. பாவம்.

    ReplyDelete
    Replies
    1. நாலடி தண்ணீர் வருமான்னு தெரிஞ்சுக்கணும் :)

      ஆனாலும் BADடான விசயமில்லே:)

      நல்ல ஐடியா ,அப்படியே பண்ணிடலாம் :)

      போட்டுகிட்டு அனுபவிக்காமல் உள்ளே வைத்திருப்பது தானே :)

      ஆட்டுவிக்கிறது என்றால் சும்மாவா :)

      Delete
  2. பத்து அடி உயரத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொல்றதுக்கு பதிலா... வாய் தவறி பத்து அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொல்லிட்டேன்...!

    மனசப்போலதான் சாப்பாடு இருக்கும்...!

    எதை எதை எதுல செய்யணுமோ இருக்குல்ல...!

    இதுக்குத்தான் டான்டிசில் கலக்க சிலுக்கு இருந்திருந்தா இந்த பேச்சே வந்திருக்காது...!

    பொன் நகைகளின் புன்நகைக் கூடம் வங்கிதான்... கோடிஸ்வரின்னு சொல்லுங்கோ...!

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சமாளிக்கக்கூடாது :)

      ரெண்டும் சூடாயிருந்தால் நல்லதா :)

      அது சரி ,வாயினால் செய்ய வேண்டியதை மூக்கினால் செய்ய முடியுமா :)

      ஞாபகப் படுத்தாதீங்க ,மனசு ரணமா ஆயிடுது :)

      வங்கியில் வைத்து திருப்ப முடியாமல் புன்னகையை இழந்தவர் எத்தனை பேரோ :)

      Delete
  3. Replies
    1. டான்சில் கம்மலைதானே:)

      Delete
  4. புரியாதா டை.. டக்ரு..ருா இருக்காரு

    ReplyDelete
    Replies
    1. இதுவும் டக்கரு தான்னு சொல்லணுமா:)

      Delete
  5. மழைவந்தால் என்று சேர்த்து சொல்லி இருக்கவேண்டும் நல்ல ஐடியா.வயிற்றிலேயே ஆம்லெட் போடுகிறவர்கள் உண்டு என்று அவரிடம் எடுத்துச் சொல்லவும் டான்சில் படம் அழகு....!டான்சிலில் பொன் நகையையும் வைக்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஏன் அதை கேட்கலைன்னு சொல்லவும் கூடும் :)
      அவரை ,கிறுக்கன்னு உலகம் சொல்லுதே :)
      வயிற்றுக்குள் ஆம்லெட் போடுவதில் தப்பில்லையே :)
      வைக்கலாம் ,இதுக்கும் டான்சில் நகை அணி விழா என்று :)

      Delete
  6. தோசைகல்லில் தோசை தான் போடலாம்.ஆம்லெட் கல்லில் தான் ஆம்லெட் போடலாம் சார்.

    ஏரி வராத ஏரியா வில் தண்ணீர் வருமா?

    அனைத்தும் அருமை. உங்கல் நகைச்சுவைகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கின்றது\

    ReplyDelete
    Replies
    1. உங்க தீர்ப்பே இறுதி தீர்ப்பு :)

      தண்ணி இல்லாத ஏரியாவில் கூட இப்போ தண்ணி வருதே :)

      சிந்திக்க வைத்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல :)

      Delete
  7. 01. சந்தப்ப நகைச்சுவை நன்று
    02. அறிவுக்கொழுந்து
    03. இவள் அறிவுக்கொழுந்தாயாள்
    04. இந்த நடிகை பேரு டான்சி ராணியா ?
    05. யதார்த்தமான உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. மொக்கைப் போட உதவிய பேரிடருக்கு நன்றி :)

      கொழுந்து(கிரீன் ) டீயை குடித்து வளர்ந்தவரோ :)

      உங்கள் எதிர்ப்பதம் சூப்பர் :)

      பொருத்தமான பெயர்தான் ,இந்த பெயருக்கு உரிமை கொண்டாடி யாரும் சண்டைக்கு வர மாட்டார்களே :)

      ஒன்று பசியேப்பக்காரன் நகை ,இன்னொன்று புளிச்சயேப்பக்காரன் நகை :)

      Delete
  8. தரகர் சொன்னது
    மழை வெள்ளம் போடாத வேளை
    தரகர் சொல்லாதது
    மழை வெள்ளம் போட்ட வேளை
    பாதிப்பு நம்ம உறவுகளுக்கே...

    ReplyDelete
    Replies
    1. காலுக்கு கீழே இருக்க வேண்டிய தண்ணீர் ,தலைக்கு மேலே வந்தால் என்னதான் செய்ய முடியும் :)

      Delete
  9. ஏரியா எல்லாம் ஏரி ஆகிப் போனதன் விளைவு ஹும் என்னத்த சொல்ல. இனி நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்..

    டான்சில் வார்த்தை விளையாட்டு ஹஹஹ் ரசித்தோம்..

    ReplyDelete
    Replies
    1. கண்மாயில் இடம் வாங்கிய மாய்க்கான் என்று சொல்லாதவரை சரி :)

      Delete