22 December 2015

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் :)

இதையுமா ஓசி கேட்பது :)

                   ''முந்தி பேனா டைப் இன்சுலின் சிரிஞ்ச்சை பையிலே எப்பவும் வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''

                   ''அதையேன் கேட்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

இப்படியும் ஏமாற்றலாமா ?
             ''நான்  புதுசா வாங்கின செல்போனில் யார் நம்பரைப்  போட்டாலும் போக மாட்டேங்குது ,என்ன பிரச்னைன்னு பாரேன் !''
           ''அடப்பாவி ,பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம்  தெரியாதா ?''

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?

               ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
             ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
            ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
             ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''
உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள்:)

'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா ''வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...இப்படி இவ்வளோ பீல் பண்றது ...திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...யமுனாவின் கணவரை ...கணவரின் நண்பரை ...நண்பரின் கார் டிரைவரை ...தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்ல ...சூரசம்ஹாரமாம் ...இந்த சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...கராத்தே பயின்றதால் இவனுக்கு டாங் லீ என்று பட்டப் பெயர் வந்ததாம் ...வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !


    26 comments:

    1. மருந்தையுமா ஓஸி கேட்கிறார்கள்! அடங்கொக்கமக்கா!!

      இப்படிக் கூடவா ஏமாறுவார்கள்! அட மக்கா!

      படிச்ச ஜோக்... ஆனாலும் மறுபடி ஒரு கமெண்ட்! டாக்டரா கொக்கா!

      ம்ம்... படிச்சதுதான்!

      தம +1

      ReplyDelete
      Replies
      1. பேனான்னு நினைச்சு இதையும் கேட்கிறார்கள் ,இன்சுலின்னு சொன்னால் அதைத்தான் கேட்கிறேன் என்கிறார்களே :)

        ஏமாறுபவன் இருக்கும் போது ...:)

        டாக்டர் நல்ல பிசினஸ்மேனும் கூட :)

        டங் லையை மறக்க முடியாதுதானே :)

        Delete
    2. சிரஞ்சைக் கூடவா கேட்கிறார்கள்?

      ReplyDelete
      Replies
      1. அந்த சிரிஞ்ச் தேவைப்படும் மனிதர்கள் பெருகி விட்டார்களே :)

        Delete
    3. சிரிஞ்சீவி நீங்கதான்னு சொல்லுங்க...!

      நான்கூட செல் போன பாக்கெட் கால்குலேட்டர் மாதரி தயாரிச்சுட்டாங்களோன்னு நெனச்சேன்...!

      எஸ்.எம்.எஸ்.க்கு முன்னூறு ரூபாய்... கால் பண்றதுக்கு ஐநூறு ரூபாய்... நல்லா ஞாபகம் இருக்கு... இனி ஞாபக மறதியே வராது... நல்லா வைத்தியம் பண்றீங்க...!

      டங் ஸிலிப்பாயிடுச்சு...யமுனான்னா சொன்னேன்...யமுனா கதை வேற... சாரி... இது ஜமுனா...!

      த.ம.1



      ReplyDelete
      Replies
      1. சஞ்ஜீவியாய் வாழ நினைக்கும் சிரிஞ்சீவி கூட :)

        ஏமாந்த பிறகு இப்படியும் ஒரு பேச்சா:)

        இனியும் இந்த கிளினிக் பக்கம் போவீங்களா :)

        அதுவும் இருக்கா :)

        Delete
    4. Replies
      1. SMS கட்டணக் கொள்ளையுமா:)

        Delete
    5. எதைத்தான் ஓசி கேட்பது என்னும் வியவஸ்தை இல்லையா?கால்குலேட்டரை செல் என்று ஏமாந்துஇருக்கிறார்/ ஏமாற்றப்பட்டு இருக்கிறார் நினைவு மறதிக்கு நல்ல செலவு டாங் லை கண்ணனின் கூற்று அவரது “மனசாட்சிப்படி” சரிதானே

      ReplyDelete
      Replies
      1. அவர் அவசரம் அவருக்கு ,ஓசி கேட்டுட்டார் :)
        இப்பவுமா இப்படி :)
        இனி மறக்க மாட்டார் :)
        அது வேறு அவருக்கு இருக்கிறதா :)

        Delete
    6. 01. நம்ம ஆளுக ஃப்ரீயா கிடைச்சா பினாயிலும் குடிப்பாங்களே...
      02. முதல்ல இவனை கண் டாக்டர் கண்ணபிரானை பார்க்கச் சொல்லுங்க ஜி
      03. மெஜேஜ் போதும் செலவை சிக்கனப்படுத்தனும்.
      04. அடப்பாவமே...

      ReplyDelete
      Replies
      1. குடிச்சிட்டு பாலுன்னு நினச்சி குடிச்சிட்டேன் என்பார்களே :)
        ENT டாக்டரை பார்த்தாலும் சரிதான் :)
        அது முடியாது இங்கே அது கட்டாயம் :)
        பாவம் ஜெயில்லே தவிக்கிற கிருஷ்ணன் தானே :)

        Delete
    7. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

      ReplyDelete
    8. //பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாதா ?''//
      ஹா ஹா ஹா,சூப்பர்

      ReplyDelete
      Replies
      1. இவர் எந்த ஊர் என்று தெரியலே :)

        Delete
    9. //''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''//

      ஒவ்வொரு வேளையும் நேரில் வந்து சொல்வதற்கு எவ்வளவு சார்ஜ்னு சொல்லவேயில்லையே?

      ReplyDelete
      Replies
      1. அது சொல்ல வரும் நபர்,ஆணா,பெண்ணா என்பதை பொருத்து மாறும் :)

        Delete
    10. ரசித்தேன் நண்பரே!
      த ம 8

      ReplyDelete
      Replies
      1. டான்சில் கம்மல் அழகுதானே :)

        Delete
    11. அப்போ உண்மை காதலன் இல்லீயா......!!!!.

      ReplyDelete
      Replies
      1. அவளுக்கு காதலன் ,அடுத்தவருக்கு கொலைக்காரன் :)

        Delete
    12. இதையுமா ஓசி கேட்பது :)
      ''முந்தி பேனா டைப் இன்சுலின் சிரிஞ்ச்சை பையிலே எப்பவும் வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
      ''அதையேன் கேட்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

      இது ஓர் எச்சரிக்கை!

      மாற்றார் பாவித்த சிரிஞ்ச்சைப் பாவித்தால்
      எயிட்ஸ் வரலாம்
      எப்படி?
      செந்நீர் (குருதி) வழியாக...

      சிரிஞ்சில செந்நீர் ஒட்டியிருக்காட்டி
      நம்முடலில் எயிட்ஸ் ஒட்டாதே
      அப்படியா - அதற்கு
      மருத்துவரை நாடுங்க...

      ReplyDelete
      Replies
      1. அவருக்கு எயிட்ஸ் எல்லாம் கிடையாது ,பாவம் அவரை விட்டுடுங்க :)

        Delete
    13. மருந்துமா/ ஊசியுமா ஓசி?!!!!

      அடப்பாவமே!

      ரசித்தோம்....

      ReplyDelete
      Replies
      1. எதைத் தான் கேட்பதென்று சிலருக்கு தெரிய மாடேங்குதே :)

        Delete