9 December 2015

காதலுக்கு மரியாதை இதுதானா :)

 உண்மை  ஒருநாள் வெளியே வந்தே தீரும்   :)                      

             ''ஏம்மா அஞ்சலை ,உன்னைப் பார்த்தா ,எழுபது கிலோ வெயிட் இருக்கிற மாதிரி தெரியலையே !''

                ''அய்யாவும் இப்படித்தான் சந்தேகப்பட்டு என்னைத்  தூக்கிப் பார்த்தாரே ,அம்மா !''




 காசு மட்டும்தான் காசா ?
                     ''திருடு போன பர்சிலே பணமே இல்லைன்னு சொல்றீங்க ,அப்புறமும் ஏன் இவ்வளவு வருத்தப் படுறீங்க ?''
                   ''அந்த பர்ஸ் விலையே ஐந்நூறு ரூபாயாச்சே !''  
      

காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?



மருமகள் துடிப்பது ....நடிப்பா:)
  1.            'உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன் ?''
  2.              ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''



  3. தேவதைகள் உலா வரும் நேரம் !



    அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
    தேவதைகள்  உலா வரும் நேரம் என 
    கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
    அந்தகாலம் !
    தேவை இல்லாதவை எல்லாம் நுழையுமென 
    எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
    இந்தகாலம் !
  4. --------

18 comments:

  1. Replies
    1. எல்லாமே ஒரு மார்க்கமாவே இருக்கே :)

      Delete
  2. 1. ஹா.... ஹா.... ஹா....

    2. பர்ஸ் விலை 500 ரூபாய். உள்ளே இருப்பதோ 50 காசா! :))))

    3. இவர்கள் காதலர்கள் இல்லை. காமுகர்கள்.

    4. புத்திசாலி மருமகளா, மாமியாரா? :))))))

    5. உண்மை!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. இப்படி வெகுளியாய் இருந்தால் அய்யாதான் என்ன செய்வார் :)

      எடுத்தவன் என்ன செய்திருப்பானோ :)

      முகர்ந்தால் போதுமென நினைப்பதாலா :)

      யாராவது ஒருவர்தான் இருக்க முடியும் :)

      அனுபவ உண்மையும் கூட :)




      Delete
  3. நா சந்தேகப்பட்டது சரியாப்போச்சு... வாடி ஏய்...சக்காளத்தி...!

    ஒனக்கெல்லாம் எதுக்குடா ஒரு பர்ஸ்...? இல்லாதவன் வச்சிட்டு போறான்...!

    ஆசிட்டை வீசிய அவனின் வாழ்க்கைச் சீட்டைக் கிழித்தெறிய வேண்டியதுதான்...!

    உன் நடிப்பு உன் மாமியாருட்ட எடுபடாதிடி...!

    அந்தி வரும் நேரம் வந்ததொரு ஜாலம்... கதவு ஜன்னலை திறந்து வைத்தால் ‘டெங்கு’ல போக சங்கு ஊத வேண்டியதுதான்...!

    த.ம.3





    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,அம்மா போட்டு வாங்கிட்டாங்களா :)

      பர்சை மட்டுமா :)

      நீதியின் தாமதம் அவனுக்கு துணையா இருக்கே :)

      அதுசரி ,புருஷன் கிட்டே வேண்டுமானால் எடுபடும் :)

      டெங்கு வந்ததால் சங்கு வந்ததா :)

      Delete
  4. Replies
    1. அஞ்சலையின் உளறலைத் தானே :)

      Delete
  5. 1) அப்ப ஐயா பொண்டாட்டிக்கு “ அஞ்சலை“ ன்னு சொல்லுங்க!
    2) பல்லில்லாதவனுக்கு ஏன் பக்கோடா?
    3)அப்ப இது ஒருதலைக் காதல் இல்லை. தறுதலைக் காதல்.
    4)காக்கா வலிப்புப் போகனுங்கிறதுக்காக, உயிரை விட முடியுமா? சாவிலதான உயிரே இருக்கு.
    5) தேவதைகள் ஜன்னல் எல்லாம் வைத்து ஆடை திறந்திடும் காலமும் இதல்லவா பகவானே.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் 'என்ற வள்ளுவரின் வாக்கைப் படித்து இருப்பாரோ :)
      ஏன் ஊறப்போட்டுசாப்பிடக் கூடாதா :)
      அதே ,அதே :)
      உயிர் சாவியிலுமா இருக்கும் :)
      ஆடவரின் பார்வைக் கடியை இந்த ஜன்னல் தேவதைகள் உணர்வார்களா :)

      Delete
  6. உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும் :)அட உண்மை இப்படி வந்திருச்சா......!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ,உளறலா வெளியே வந்திடுச்சு :)

      Delete
  7. 01. உளறுவாய்ச் சிறுக்கி
    02. யானையைவிட அங்குசம் விலை அதிகமோ...
    03. இந்த வகை அரக்கர்கள் இப்பொழுது தமிழ் நாட்டிலு அதிகரிப்பது வருந்தக்தக்கது ஜி
    04. அறுவாள் மனையாவது எடுத்துக் கொடுத்திருக்கலாம்
    05. தேவதை ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாவம் அவ வெகுளிங்க :)
      தங்கத்தால் செய்து இருப்பார்களோ :)
      காமுகர்களுக்கு தேச எல்லை ஏது :)
      மகன் செத்தாலும் பரவாயில்லை என்பது போல் உள்ளது :)
      வதைக்காமல் போனால் சரி :)

      Delete
  8. ஐயா 50கிலோ தாஜ்மகால் என்று நினைத்தாரோ.?திருடன் பர்சை விற்றுப் பணம் பார்க்கவா முடியும் வீசிக்கடாசி இருப்பான் . தன் கையில் இருக்க வேண்டிய இரும்புச் சாவி மாமியார் இடுப்பிலேயே இருந்ததைப் பார்த்திருப்பாள் அப்போதெல்லாம் கொசுத்தொல்லை இருக்கவில்லையா.

    ReplyDelete
    Replies
    1. தாஜ் மகால் அழகு ,50 கிலோ தாஜ் மகால் அழகோ அழகு :)
      பர்ஸ் அருமை அறியாதவனோ :)
      கள்ளச் சாவி போடாமல் இருந்தாளே:)
      நம்ம சிறு வயதிலேயே அவ்வளவாக இல்லையே :)

      Delete
  9. நலமா நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் வெள்ளம் என்றதும் ,உள்ளம் தங்களை நினைத்தது !தங்களின் நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி அய்யா :)

      Delete