7 December 2015

தொழிலுக்கு முதல் விரோதி மனைவிதான் :)

                    ''உங்க டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை மூட ,உங்க மனைவியின் கிண்டல்தான்  காரணமா ,ஏன்  ?''
                     ''கொசு பேட்டினால் கொசுவை அடிக்கத் தெரியாத,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சான்னு  கேட்கிறாளே !''

இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' :)

                 ''அதெப்படி, நான்  பொறந்த மாசம் 'மே 'ன்னு சரியா கண்டுபிடிச்சே ?''
              ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

இப்படியா  மனைவி மேல் பாசமாய் இருக்கிறது :)

            ''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
                
           ''நல்ல வேளை ,வண்டிக்கு  ஒரு கீறலும் இல்லையாம் !''
அவர் மூலம் காதல் கடிதங்கள் அனுப்பியவர்களாவது வருந்தி இருப்பார்களா ?
  1. காதல் கடிதமோ ,வேறெந்தக் கடிதமோ சம்பந்தப் பட்டவர்களிடம்
     சரியாக கொண்டு சேர்க்கும் பணியை செய்த தபால்காரர் ஒருவர் ...
    சரியாக இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காததாலேயே  ...
    இறந்து போனார்னு சொன்னால் நம்பமுடிகிறதா ?
    அந்த தபால்காரர் ,55 வயது பெரிய மனிதர் ...
    டாஸ்மாக் வாசனையுடன் மதுரையில் பஸ் ஏறியவர்...
    சமய நல்லூரில் இறங்கியிருக்க வேண்டும் ...
    போதை இறங்காததால் இறங்க மறந்துவிட்டார் ...
    பெரிய மனுஷனாச்சே  என்று இரக்கப் பட்டு அவரை ...
    நடத்துனர் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளார் ...
    ஸ்டாப்அருகே டூவீலர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ...
    ஏற்கனவே பெரியவருக்கு அறிமுகம் ஆனவர் ஆகையால் ...
    'வாங்க வாங்க ,என்ன இங்கே வந்து இறங்குறீங்க 'ன்னு ...
    பேசிக்கொண்டே ஒரு திட்டத்துடன்   நடந்து வந்தவன் ...
    ஆள் நடமாட்டம் இல்லா  இடம் வந்ததும் ...
    பெரியவரின் கையில் இருந்த பையைப் பறிக்க முயல ...
    பெரியவர் தடுக்க முயல ...
    அருகே இருந்த அடர்ந்த புதரிலே அவரை தள்ளி ...
    ஹேக்சா  பிளேடினால் கழுத்தை அறுத்து ...
    அவரிடமிருந்த பையையும் ,ஓரு பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்ட மெக்கானிக் ...
    பையிலே ஏதும் பைசா இல்லாததால் தூக்கி எறிந்து விட்டு ...
    மோதிரத்தை அடகு வைத்து ,வந்த பணத்தில் ...
    இரண்டு நாட்கள் ஜாலியாக இருந்தாராம் !
    இவனின் ஜாலியும் டாஸ்மாக் சரக்கில்தான் இருந்திருக்கும் ...
    தற்போது  ஜெயிலில் ஜாலியாக இருப்பான் என்றே நம்பலாம் !
    பெரியவரை உரிய ஸ்டாப்பில் இறங்க விடாதது...போதை !
    ஒரு பவுன் மோதிரத்துக்காக கொலை செய்ய வைத்ததும் ..போதைதானே ?

  2. உள்ளத்தில் உள்ளது தானே உதட்டில் வரும் :)

  3.          ''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
  4.         ''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?''
  5.            ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு 
  6. நீங்க பாடிட்டு இருந்ததை கேட்டேனே!''



16 comments:

  1. கொசு பேட்டினால் டென்னிஸ் கோச்சிங் கொடுத்தால்...மூடவேண்டியதுதான்!

    ஆடாதாரை ஆட்டுவித்தால் ஆடாதாரோ...?

    மனைவிக்கு ஒன்னும் ஆகலையாம்... சின்ன ஆக்ஸிடண்ட்தானாம...!

    இதுக்குத்தான் சரக்க இறக்கி வச்சிட்டு சரக்க அடிக்கணும்...!

    இறைவனுக்கு மட்டும் நல்ல அழகான மனைவியா...?

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. கொசுவை அடிக்க முடியாதவர் எப்படி பாலை அடிப்பார் ?மனைவியின் சந்தேகம் நியாயமானது தானே :)

      ஆடு வித்த காசும் மேமேன்னு கததுமா :)

      என்ன ஆகணும்னு நினைக்கிறீங்க :)

      இந்த விவரம் அவருக்குத் தெரியலியே :)

      இந்த பொறாமை இறைவனுக்கே அடுக்காது :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன-

    ReplyDelete
    Replies
    1. போதையின் கொடுமையை ரசீத்தீர்களா :)

      Delete
  3. 'கொசு பேட்டினால் கொசுவை அடிக்கத் தெரியாத,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சான்னு கேட்கிறாளே !'' AAhaa!.....
    - உன் 'ஆட்டு மூளை 'யை வச்சுத்தான் !''....அட! கடவுளே!.....
    - ''நல்ல வேளை ,வண்டிக்கு ஒரு கீறலும் இல்லையாம் !'' ooohhhoo!....
    ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு
    நீங்க பாடிட்டு இருந்ததை கேட்டேனே!'' நன்று!...நன்று நன்கு சிரித்தேன்..
    இரவு கலக்கப் போவது யாரு பார்த்துச் சிரித்த போது
    உங்கள் நகைச்சுவைகளும் இப்படித்தானே என்று
    எனக்குள் நினைத்தேன்..சரி தானே....!!!!!!!!
    இனிய வாழ்த்துகள் சகோதரா....
    https://kovaikkavi.wordpress.com/


    ReplyDelete
    Replies
    1. கணவனின் கைவண்ணம் மனைவிக்கு தெரியாதா :)

      சிரிக்கும் போதெல்லாம் என் நினைப்பு வருதா ,நன்றி நன்றி :)

      Delete
  4. 01. நியாயமான கேள்விதான்.
    02. ட்யூப் லைட்டு
    03. வண்டி முக்கியம்தான்
    04. வேதனையான விடயம்
    05. பாட்டு ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. புருஷன் அடிப்பதில் கில்லாடியா இல்லையா என்று மனைவிக்குதானே தெரியும் :)
      எலக்ட்ரானிக்ஸ் சோக் மாட்டினால் சரியா போகுமா :)
      இவர் காசு போட்டு வாங்கியதாலா :)
      இவராக வரவழைத்துக் கொண்டதுதானே :)
      அதை ,மனைவி சொன்னால் நல்லாயிருக்கும் :)

      Delete
  5. கொசு எம்மாம் பெரிசு பால் தம்மாத் தூண்டுஎதற்கு எதை உபயோகிக்க வேண்டும் என்று தெரியாதவர் கோச்சிங் நடத்துவது தப்பே.

    ReplyDelete
    Replies
    1. எட்டு பட்டி சார்பா, நீங்க சொன்ன தீர்ப்பை எல்லோருமே ஏற்றுக் கொலவதை தவீர வேற வழியில்லை :)

      Delete
  6. ஓட்டு போட்டால் இப்படி வருகிறது நண்பரே... No Such Post இப்போ எனக்கு முதல் எதிரி யாருன்னு தெரிஞ்சு போச்சு நண்பரே........

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்படித்தான் வருகிறது ,ஜோக்காளிக்கு வந்த சோதனையாய் இருக்கிறது ,நேற்றே இந்த பிரச்சினை .தமிழ்மணத்துக்கு தகவல் அனுப்பியுள்ளேன் ,விரைவில் சரியாகுமென நம்புகிறேன் !

      Delete
  7. ரசித்தேன் நண்பரே!
    த ம திறக்க மறுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே :)
      தமிழ் மண சர்வரில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது ,அதன் பாதிப்பு என் தளத்திலும் உள்ளது போல் தெரிகிறது !

      Delete
  8. //அவர் மூலம் காதல் கடிதங்கள் அனுப்பியவர்களாவது வருந்தி இருப்பார்களா ?//


    பாதை
    மாற்றிய
    போதை
    - என்று சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,அருமையான பொருத்தமான தலைப்பு தான் :)

      Delete