16 December 2015

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் HRO :)

மூத்தவள் , முன் ஜாக்கிரதை 'முத்த'ண்ணாவின் உண்மை வாரிசோ :)                    
           ''உங்க சின்னப் பெண்ணை  மட்டும் ,உங்க ஜாதிக்கார காலேஜில் மட்டுமே சேர்க்கணும்னு பிடிவாதமா இருக்கீங்களே ,ஏன் ?''
                      ''வேற காலேஜில் படித்த மூத்த பொண்ணு ,வேற ஜாதிக்கார பயலோடு ஓடிப் போயிட்டாளே !''

இந்த சட்டத்தால் போலீசுக்கு நிம்மதி ?           
           ''இப்போதெல்லாம் யாரும் செல்போன் டவரில் ஏறி  கீழே குதிக்கப் போறேன்னு  மிரட்டுற மாதிரி தெரியலையே ,ஏன் ?''
              ''தற்கொலைப் பண்ணிக்கிறது  சட்டப் படி தவறில்லை  என்று சட்டம்  வந்திருச்சே !''



ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் HRO :)

             ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை,எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
              ''அவனுக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு !''

மார்க் வராத காரணம் மங்கைகள் தானா ?
             ''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே எனக்குத் தெரியும் !''
  1.             ''என்ன தெரியும் ?''
  2.                 ''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே  மதிப்பெண்கள்  வரப்போறதில்லைன்னு தான் !''

22 comments:

  1. சின்னப் பொண்ணு அக்கா படிச்ச காலேஜ்தான்... நல்ல காலேஜ்... அங்கேதான் நல்ல புரபசர் இருக்காங்களாம்... அதே காலேஜில சேர்த்து விடுங்கன்னு ஒத்தகால்ல நிக்கிறா...!

    ‘கொலையும் செய்வாள் பத்தினி...!’ தற்காப்புக்காகக் கொலை பண்றது தப்பில்லைன்னு சட்டம் இருக்கிறது யாருக்குத் தெரியுது?

    ‘நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொன்னத நீங்க தவறா புரிஞ்சிக்கிட்டீங்க... !’

    மதிப்பெண்ணா சோறு போடப் போவுது... பெண்தான் வடிச்சுக் கொட்டப் போறாள்... மதிகெட்டுப் பேசாதீங்க...!

    த.ம.2





    ReplyDelete
    Replies
    1. வில்லங்கத்தை விலைக் கொடுத்து வாங்க அப்பங்காரன் தயாராக இல்லையே :)

      தெரிஞ்சா ,நிறைய கொலை விழலாம் :)

      அதை எல்லாம் வீட்டுலேதான் வச்சுக்கணும் :)

      வடிச்சுக் கொட்ட மட்டும் பெண் வேணுமாக்கும்:)

      Delete
  2. Replies
    1. HRO செய்தது சரிதானே ஜி :)

      Delete
  3. அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் ,பெண்கள் அம்மிக் குத்துவது அருமையோ அருமை ,அப்படித்தானே அய்யா :)

      Delete
  4. Replies
    1. மார்க் குறைந்த காரணத்தைத் தானே :)

      Delete
  5. அனைத்தும்ரசனை பகவானே!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சமணம் பற்றி அருமையாக எழுதுவதால் ஒரு கோரிக்கை ...திகம்பரத்துறவிகள் எல்லாம் அம்மணமாய் இருப்பது ஏன் ? சமணமும் அம்மணமும் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் போட வேண்டுகிறேன் :)

      Delete
  6. 01. ஆஹா இப்படிப் பிரட்சினையும் இருக்கா ?
    02. ஆஹா இப்படியும் வந்துருச்சா ?
    03. ஆஹா இவனுக்கு கல்யாணமும் ஆச்சா ?
    04. ஆஹா இவன் வீணாப் போனானா ?

    ReplyDelete
    Replies
    1. பெண்ணைப் பெற்றவங்களுக்குதான் எத்தனைப் பிரச்சினை :)
      இனி எவனும் மேலே ஏறி மிரட்ட முடியாது :)
      ஏன் ஆச்சுன்னுதான் தெரியலே :)
      வீணா பின்னாலே திரிந்து வீணாப் போனானே:)

      Delete
  7. // ''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே மதிப்பெண்கள் வரப்போறதில்லைன்னு தான் !''//

    ஹா.. ஹா.. ஹா...

    பெண்களும் அவனை மதிப்பதில்லை;
    அவனும் மதிப்-பெண்களை மதிப்பதில்லை!

    ReplyDelete
    Replies
    1. நல்லா வருவான் :)

      Delete
  8. வணக்கம்
    ஜி

    எல்லாம் படிதாண்டும் பறவைகள்...
    தற்கொலை அதிகரிக்கும் போல...
    மற்றவைகளை இரசித்தேன் ஜி
    த.ம9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் ஜி ...
      இந்த பறவைகள் ...வேடனே ,புரிஞ்சுக்கோ ,நாங்கள் பறக்கும் உயரத்துக்கு உன்னால் அம்பு எய்ய முடியாது என்று சொல்கின்றனவோ :)
      காப்பாற்ற யாரும் வரலேன்னா கூடத்தானே செய்யும் ,அது சரி ,எதுக்கு யாரும் வரணும் :)

      Delete
  9. ரசித்தேன் நண்பரே!
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. புது மாப்பிள்ளை எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்வதைத்தான் என்னால் ரசிக்க முடியல :)

      Delete
  10. வணக்கம் ஜி !

    இந்த HRO மதி இரண்டும் அசத்தல் ( எல்லாம் நல்லாத்தான் இருக்கு )
    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. hro வின் மதிநுட்பத்தையும் பாராட்டத் தான் வேண்டும் :)

      Delete
  11. ரசித்தோம்...மதி முழுவதும் பெண்கள்....மதிப்"பெண்கள்" உட்பட....

    ReplyDelete
    Replies
    1. இதுதானே நடக்கும் ,சரிதானே :)

      Delete