12 December 2015

பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா :)

உண்மையை சொன்ன உண்மை நண்பன் :)

             '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா ,தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''

            ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கும் !''
ரசனைக் கெட்ட ஜென்மங்களோ :)

                                     ''என்பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட  நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
                   ''வீட்டைக் காலி பண்ணமுடியாதுன்னு  சொன்ன ,  பக்கத்து போர்ஷன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !'' 

பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா :)

            ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன்னு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
              ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''
  1. இது திருமண வாழ்த்தா ..சாபமா :)


  2. இரயில்வே தண்டவாளம் போல் 
    இணை பிரியாமல் தம்பதியர் வாழ்கவென 
    வாழ்த்தியவர்  சிந்திக்கவில்லை ...
    தண்டவாளங்கள்  ஒன்று சேருவதே இல்லையென்று !


27 comments:

  1. காளை மாட்டுல பால் கறக்கிறவனாச்சே...!

    வீணை மீட்டுனது வீணாப் போகலைன்னு சொல்லுங்க...!

    உண்மையச் எப்பவுமே சொல்லக்கூடாதா...?

    திருமணத் ‘தண்டவாளம்...’ வாழ்த்த... வண்டவாளத்தில ஏத்தி தண்டம்தான்னு சொல்லிட்டீங்க...!

    த.ம.1



    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா எப்படி லோன் கிடைக்கும் :)

      வீணை வாணி ,அகராதிகளை போ நீ என்று விரட்டி விட்டாளே:)

      உண்மை சுடுமே :)

      இருந்தாலும் தண்டவாளப் பயணம் தொடரத் தானே செய்யுது :)

      Delete
  2. Replies
    1. பயபிள்ள கேட்டதையும் தானே :)

      Delete
  3. முதலிரண்டு ஜோக்குகளையும் அதிகம் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவை மூன்றாம் தரமில்லைதானே :)

      Delete
  4. Replies
    1. உங்களுக்கு பிடித்தது ,அந்த டொய்ங் டொய்ங் தானே :)

      Delete
  5. ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக் கெட்ட ஜென்மங்களை நினைத்துதானே:)

      Delete
  6. 01. முன் அனுபவம்
    02. நல்ல காரியம்தான்
    03. சரியான புள்ளைதான்
    04. இது சரியில்லைதான்

    ReplyDelete
    Replies
    1. என்னுடையது இல்லை :)
      புண்ணிய காரியமும்கூட :)
      தப்பாம பிறந்து இருக்கானே :)
      சொல்பவரை தண்டவாளத்தில் தள்ளி விடலாமா :)

      Delete
  7. உண்மையைச் சொன்னால் போலீஸ் அப்பனுக்கு பிள்ளைகள் மேல் எரிச்சல் வராமல் வேறு என்ன வரும்???

    ReplyDelete
    Replies
    1. உண்மை சுடுகிறதோ :)

      Delete
  8. அனைத்தும் ஹஹஹஹ என்றால் முதல் இரண்டும் மிக மிக ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பால் கறப்பதும் பணம் கறப்பதும் ஒன்றா :)

      Delete
  9. ரசித்தேன்.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. இணை சேரா தண்டவாளத்தைதானே :)

      Delete
  10. மாமூல் வசனத்தைத் தானே :)

    ReplyDelete
  11. இரயில்வே தண்டவாளம் போல்
    இணை பிரியாமல் தம்பதியர் வாழ்க
    "சமாந்தரங்கள்!"

    என்றெல்லாம் வாழ்த்துவோர்
    இருக்கிறாங்களே...

    ReplyDelete
    Replies
    1. சாமானியனுக்கு புரியாத சொல் சமாந்தரங்கள் என்பது ,நீங்களே விளக்கி விடலாமே :)

      Delete
  12. ஜோக்கிரியும் நகைச்சுவையும் போல் வாழ்க!
    .

    ReplyDelete
    Replies
    1. கீரியும் பாம்பும் போல அல்லவா சிலர் வாழ்கிறார்கள் :)

      Delete
  13. Replies
    1. இதுவும் நல்லதே :)

      Delete
  14. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் ஜி த.ம 13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ஜி ,மன்னியுங்கள் தாமதம் ஆனதுக்கு :)

      Delete