ஏட்டையா ஓடினார் என்பதே நம்ப முடியலே :)
''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
''நல்ல வேளை.தொப்பை இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
மனைவிக்கு சுருக்கமா கையெழுத்து போட மனசு வரலையாம் !
''முதல் இரவும் அதுவுமா ,முதல் காரியமா நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தர் பெயரை அவசியம் மாற்றிக்கணும்னு சொல்றீயே ,ஏன் ?''
''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின் முதல் எழுத்தையும் சொல்லும் போது 'எமன் 'மாதிரி இருக்கே !''
''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின் முதல் எழுத்தையும் சொல்லும் போது 'எமன் 'மாதிரி இருக்கே !''
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் :)
''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே இருந்து மனுசங்க கத்துக்கணும்னு சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''
''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''
கரெண்ட் கட் நேரத்திலே யோசிப்பாங்களோ :)
''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றீங்களே ,ஏன்?''
பேங்க் பாலன்சை சொல்லலீங்க:)
கயிற்றின் மேல் அடி மேல் அடி வைத்து
கழைக் கூத்தாடி கற்று தந்தான் ...
'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !
|
|
Tweet |
ஏட்டையா பதில் " இதுதான் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை கதையோ!
ReplyDeleteஆந்தைக் கண்கள் இந்தக் காலத்தின் அவசரத் தேவை! :)))
மண் ஓட்டினாலும் தட்டி விட்டுக்கலாம் ,மொக்கு உடைந்தால் என்ன செய்வது :)
Deleteஅடிக்கடி கரெண்ட் கட்,அரசுக்கு அவப் பெயர் என்பதை ஆந்தையார் சொன்னால் நல்லது :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
காக்கா கூட்டத்தையும் தானே :)
Deleteதொப்பை இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே... தொப்பிக்கும் ஒண்ணும் ஆகலே...!
ReplyDeleteஎமன் வந்தாலும் எவன் வந்தாலும் கவலைப் படாதே...! முதல்ல நமக்கு மகன் வரணும்... ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட...அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட’
-பாட்டக் கேட்டதில்லையா...?
காக்கா கூட்டத்தப் பாருங்க... இதை அதுக்கு்க கக்துக் குடுத்தது யாருங்க...? மனுசங்கதானோ...?!
கரெண்ட் போகலைன்னாலும்... பகல்லையும் பார்வை தெரியலைன்னாலும் பரவாயில்லேயோ?
'பாலன்ஸ் ' வராததால் பாலன்ஸ் போயி... உயிர் போயிடுச்சே...!
த.ம.4
ஒரு வேளை ,இந்த நன்மைகளைக் கருதித்தான் தொப்பை வளர்க்கிறார்களோ:)
Deleteநல்ல காரியம் ஆரம்பமாகட்டும் :)
காக்கையும் கெட்டது மனிதனால் தானா:)
இந்த மனுஷ ஆந்தைக்கு பகலாவது இரவாவது ?எல்லா நேரமும் பார்வை நேரம்தான் :)
காசை மட்டுமே உயிராய் நினைத்தால் இப்படித்தான் ஆகும் :)
ஆரம்பமே...எமனா.......??????????
ReplyDeleteஅநேகமாய் இருவருக்கும் தீர்க்காயுசு என நினைக்கிறேன் :)
Deleteஆந்தைக்கண்கள் அஹஹ் அருமை..
ReplyDeleteபாலன்ஸ் அருமை...
கரெண்ட் கட் நீடித்தால் இருட்டிலும் பார்க்கும் சக்தி தானாகவே வந்து விடக்கூடும் தானே :)
Deleteபாலன்ஸ் பண்ணத் தெரியாட்டி பொழப்பு நாறிடும்தானே:)
வணக்கம்
ReplyDeleteஜி
தொப்பை இருப்பது பல வகையில் நன்மைபோல...ஹா...ஹா...
மற்றவைகளை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தலைக்கு வந்தது தொப்பையோடு போயிற்று என்று சொல்லவும் கூடுமோ :)
Delete01. மீசையிலே மண்ணு ஒட்டலையா ?
ReplyDelete02. இது குழப்பம்தான்.
03. இதுவும் உண்மைதான் ஜி
04. அப்படீனாக்கா மனுஷக் கண்ணை என்ன செய்வது ?
05. ஸூப்பர் ஜி
மூக்கே மண்ணைத் தொடலே,மீசைக்கு ஆபத்தில்லே:)
Deleteகணவன் எமன்னு கூப்பிட நாள் இன்னும் இருக்கே :)
காலம் கெட்டு போச்சு ,காக்கா மனுசங்ககிட்டே இருந்து கற்றுக்குதே :)
தேவைப் படுறவங்களுக்குத் தரலாமே :)
பயத்தைத் தொலைக்க நல்ல வழி இதுதானே :)
ரசித்தேன்! - “காக்கா கூட்டத்தைப் பாருங்க, அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க?” நினைவுக்கு வந்தது.
ReplyDeleteகாக்கா அதுவா கற்றுக் கொண்டதைக் கூட மறந்து விட்டதே :)
Deleteஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!
ReplyDeleteபடமும் சூப்பர்தானே :)
Delete''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''
ReplyDeleteஐய்ய்ய்யோடா!
ஆந்தைக்கண் ஐடியாவை நான் எங்க உள்ளூர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பிச்சேன். டெஸ்ட்குக்கு ஆந்தையோட கண் இருக்காம். மனிதர் தான் வேண்டுமாம். என்ன செய்யலாம் என சொல்லுங்கள் சார்?
தானாட விட்டாலும் சதையாடும் என்பார்களே ,அது இதுதானோ :)
Deleteஎதுக்கு யாரையாவது எதிர்பார்க்கிறார் ,ஆராய்ச்சியாளரே பொருத்திப் பார்த்துக் கொள்ளலாமே :)
முதல் படமும், அந்த துணுக்கும் அருமை அருமை.
ReplyDeleteதேடினால் கிடைக்கும் என்பார்கள் ,கூகுளில் ரசிக்கும் விதமாய் படங்கள் கிடைக்கின்றனவே :)
Delete