2 December 2015

புது மணத்தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை :)

   வக்கனையா பேசத் தெரியுது ,ஆனா ......?        


           ''தேசீய கீதம் பாடச் சொன்னா ஜப்பான்லே சின்னக் குழந்தைக் கூட சரியாப் பாடுமாம் ,நீயும் இருக்கீயே !''

           

             ''அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''


கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?

                 ''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற  கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
                '' தப்பாச்சே ,ஒரு மாசமா  இப்படி திங்கிறார்னா முன்னாடியே  ஏன்  வரலே ?''
                 ''ஐம்பது கிலோ  அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''

  1. புது மணத் தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை !
  2. முன்பெல்லாம் கொள்ளையர்கள் ஆளில்லா வீடுகளைப் பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ...சமீப காலமாக அதிலும் நல்ல முன்னேற்றம் ...தைரியமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்து ...உள்ளே இருப்பவர்களின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ...பீரோவைக் கூட அவர்களை வைத்தே திறந்து கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல்  ...சில நாட்களுக்கு முன் ...திருமணமாகி பதினைந்தே நாளான  பெண்ணின் தாலிக் கயிறைக்கூட விட்டு வைக்காமல்  பறித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள்   ...உறவினர்கள் எல்லோரும் கூட பார்த்திராத திருமண ஆல்பத்தைக் கேட்டிருக்கிறார்கள் ...திருமணக் கோலத்தில் மணப்பெண்அணிந்துள்ள நகைகளை ஒவ்வொன்றாய் காட்டி... அதையெல்லாம் மிரட்டி வாங்கி ....ஹோட்டலில் ரிலாக்சாக நாம் சாப்பிடும் நேரத்தை விட அதிகமாக ...முக்கால் மணி நேரம் ஒருவீட்டில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் ...இந்தக் கொள்ளைக் கூத்து நடந்திருப்பது... மதுரை அருகே உள்ள 'கூத்த'ரசன் பட்டியில் !
              1. ASH TRAY கேள்விக்கு பதில் ஏது ?

          1. சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க 
            என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
            தன் நுரையீரலை சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை ..
            எனக் கேட்டது  ' ASH TRAY '

  3.                     



26 comments:

  1. வணக்கம்
    ஜி

    நம்ம நாட்டு கீதம் எல்லாம் 4 வரிகளுக்கு மேல் இப்படி இருந்தால் பாடுவது கஷ்டந்தான் ஜி.
    அரிசி மூட்டை நல்ல ஜோக் இரசித்து மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -.த.ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நச்சுன்னு நாலு வரியில் இருப்பது நல்லதுதானே :)

      வயிற்றிலே வீடு கட்டி இருப்பாரோ :)

      Delete
  2. ஆல்பம் பார்த்துக் கேட்பது புது டெக்னிக்காக இருக்கிறதே பகவானே!
    வீடு புகும் திருடர்கள் இந்தப் பதிவைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என மனம் பதைபதைக்கிறது. :)
    தொடர்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வீடு புகும் திருடர்கள் உங்கள் கருத்தைப் படித்து திருந்தினால் சரி :)

      Delete
  3. சின்னக் குழந்தை சரியாத்தான பாடும்... நீங்க பெரிய குழந்தைட்ட கேட்டா...?


    அப்ப உன் கணவர் நல்ல பொறுக்கின்னு சொல்லு...!


    ‘இதுக்குத்தான் நகைய பேங்கில வக்கக்கூடாது... இப்ப நகையோட போசசு... பேங்கில வச்சிருந்தா உயிரே போயிருக்கும்...!‘
    ஆமடியம்மா... நல்ல கூத்தால்ல இருக்கு...’


    நுரையீரல் சுத்தமா இல்லைன்னா என்ன இப்ப கெட்டுப்போச்சு... இருக்கவே இருக்கு ‘ஆஸ் டிரே’ சுடுகாடு...!
    த.ம.2


    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,பெரிய மனுசங்களுக்கே பாடத் தெரியாதே :)

      அதென்ன 'நல்ல ' பொறுக்கி:)

      உயிரைக் காப்பாத்திக்க இப்படியும் ஒரு வழியிருக்கா :)

      சாம்பலாய் போகும் முன் இதுவும் ஒரு எச்சரிக்கையா :)

      Delete
  4. Replies
    1. நாலு வரிக் கவிதையைத்தானே :)

      Delete
  5. Replies
    1. பதிலும் நல்ல விதமாய் இருந்தால் சரிதான் :)

      Delete
  6. பெயருக்கேற்றார்போல்....கூத்தரசன் பட்டியில் நடந்தது. நல்ல கூத்துதான்..

    ReplyDelete
    Replies
    1. இந்த கூத்து வேறெங்கும் தொடராம இருக்கட்டும் :)

      Delete
  7. 01. இப்படி இருந்தால் எல்லோரும் மனப்பாடம் செய்யலாம்தான்
    02. இப்படித்தான் சிக்கனமா இருக்கனும் அப்பத்தான் சீக்கிரம் கல்லுவீடு கட்டலாம்.
    03. பொருத்தமான ஊருதான்
    04. ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தாய் மொழியில் இருந்தால் இன்னும் நல்லது :)
      எங்கே வவுத்துலேயா :)
      கொள்ளைக் காரர்களுக்குத் தானே :)
      பலருக்கும் கேள்வி புரியவில்லையே :)

      Delete
  8. நம் தேசிய கீதத்தை ஜப்பானில் பாடுகிறார்களா.?கல்லைத் தின்னும் கணவர் . ஜோக்கானாலும்.நம்பமுடியவில்லையே. திருட்டுகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் மீண்டும் தத்துவம்

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பலரே பாடுவதில்லை அங்கே ஏன் பாடப் போகிறார்கள் :)
      தின்று காண்பித்தால்தான் நம்புவீர்களா :)
      கொடூர விதமாயிருக்கே :)
      மீள் தத்துவமும் கூட :)

      Delete
  9. புதுவிதக் கொள்ளை உண்மையில் புதுவிதமாக மிரட்டலாக இருந்தது.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. இன்னும் என்ன என்ன டெக்னிக்கை கண்டு பிடிபார்களோ :)

      Delete
  10. ஆஷ் ட்ரே கேல்வி கேட்குது!
    ஆன்ஸ் தான் யாரிடமும் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஏனில்லை ,புகைப்பதைக் கை விட்டவர்களிடம் உள்ளதே :)

      Delete
  11. வணக்கம் ஜி !

    சிந்திக்க வைத்த வரிகள் ஆமா அரிசி ஐம்பது கிலோத்தானே ????

    தொடர வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் தம +1

    ReplyDelete
    Replies
    1. ஐம்பது கிலோ அரிசிதான் ,அதில் கல் எத்தனை கிலோ என்றுதான் தெரியவில்லை :)

      Delete
  12. அடப்பாவிங்களா புதுசு புதுசா என்ன மாதிரி எல்லாம் கொள்ளையடிக்க கண்டுபிடிக்கிறாங்க...இந்த மூளையை வேறு நல்ல விஷயத்திற்கு உபயோகித்திருக்கலாமோ...(நம்ம அரசியல்வாதிகளையும் சேர்த்துத்தான்...!!!!)

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அப்படி முடியாமத்தானே இப்படி செய்றாங்க :)

      Delete