18 December 2015

முதலீடே இன்றி என்றும் வருமானம் :)

                   ''மனுஷனுக்கு பிரச்சினை  இருக்கும் வரை கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் ...இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க ?''
                    ''கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் வரை  அர்ச்சகருக்கு  தட்சணை இருக்கும் !''

 சொல்வது எளிது ,செய்ய முடியுமா ?

              ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீ யா ,ஏன் ?
            ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காட்டுன்னு சொல்லத்தான் !''

        

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா ?

              ''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
                   ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''




பயத்துக்கும் ஒரு அளவில்லையா:)

           
             ''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே விற்கிற பாக்கெட்டை வாங்கக்கூட பயமா இருக்கா ,என்ன பாக்கெட் ?''
             
               ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''



தேவதாஸ்களின் புலம்பல் :)
பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா  என்ன ?


17 comments:

  1. அர்ச்சகருக்குத் தட்சணை இருக்கும் வரை பட்சணம் பண்ணமுடியும்...!

    சிங்கஅரசன் சிங்கிளா அன்றே கொல்லும்... கொசு கூட்டமா வந்து நின்று ‘டெங்கு’வால் கொல்லும்...!

    பையனுக்கு மூச்சுமுட்டுதாம்...மூச்சு பேச்சில்லாமா...கிடக்கிறான்...!

    புளிக்குப் பிறந்தது டெங்குக் காய்ச்சல் ஆகாது... தைரியமா வாங்குங்க... அப்படியே வந்தாலும் கேக்கத்தான் நீங்க இருக்க மாட்டிங்களே... பயப்படாமா வாங்குங்க...!

    பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே... என் உள்ளத்தில் உள்ளத சொல்லிவிட்டுப் போங்க...!

    த.ம.2





    ReplyDelete
    Replies
    1. ஒருவரின் பிரச்சினை இன்னொருவருக்கு பட்சணம் ஆவதுதான் கேயாஸ் தியரியா:)

      கூட்டமா வந்து கூட்டமா அள்ளிட்டு போயிடும் போலிருக்கே :)

      அப்பனுக்கு பக்கத்திலேயே இவனையும் படுக்கப் போட்டு விட வேண்டியதுதான் :)

      காய்ச்சலைக் காசு போட்டு வாங்கிறதான்னு யோசிக்கிறாரே:)

      அது யாருக்கும்மா தெரியும் :)

      Delete
  2. ஆணின் மனதைக் கூடவா :)

    ReplyDelete
  3. 01. ஸூப்பர் உண்மை
    02. சர்க்கஸ் மாஸ்டர்தான் வருவான்
    03. இது ஊருல ஜி
    04. ஹாஹாஹா
    05. அதானே,,,, நல்ல கேள்விதான்

    ReplyDelete
    Replies
    1. போட்ட முடிச்சு சரிதானே :)

      மாஸ்டர் கூட அப்படி சொன்னதா தெரியலே :)

      நம்ம ஊருலேயும் :)

      ருசியா இருந்ததா :)

      அப்படி தெரிந்தால் அப்பாவிப் பெண்கள் பலரும் தப்பித்து இருப்பார்களே :)

      Delete
  4. // பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
    ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
    நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா என்ன ? // நல்லா கேளுங்க ஜீ. எல்லா ஜோக்கும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி ,ரொம்ப நாளாச்சே நம்ம பேட்டைக்கு வந்து :)

      Delete
  5. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தேவதாஸ்களின் புலம்பலையும் ரசிக்க முடியுதா :)

      Delete
  6. சாமிதரும் வரத்தைப் பூசாரி தடுக்கக் கூடாதல்லவா அதற்குத்தான் பூசாரியை மகிழ்விக்க தட்சிணை. தேடுபவர் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் நானும் பார்க்கவேண்டும் அவரை பேச்சும் மூச்சும் பணம்சார் பணம் ..பல வீடுகளில் இந்தப் புளிக்காய்ச்சலால் கஷ்டப்படுவது தெரியுமா?அதைப் பெண்களிடம் கேட்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நாம் கொடுத்தால் தட்சணை ,பல இடங்களில் கந்துவட்டிக்காரன் போல் பிடுங்குகிறார்களே,இது தட்சணையா :)
      உங்கள் பங்குக்கு தர்ம அடி கொடுப்பீங்களா :)
      இப்படித்தான் இருக்கணும் சமூக டாக்டர் :)
      என் வீட்டு பெண்மணிக்கு தெரியவில்லையே ,யாரிடம் கேட்பது :)

      Delete
  7. சாமிக்கு அர்ச்சனை....பூசாரிக்குத் தட்சிணை ...அஹஹஹ

    டெங்குக் காய்ச்சல்.....புளிக் காய்ச்சல்....அஹ்ஹ ஜி.....

    மூச்சு இருக்கறவரைக்கும் நோ டிஸ்சார்ஜ்....அடப்பாவிங்களா... ஹஹ்ஹ்

    ReplyDelete
    Replies
    1. னை க்கு ணை சரிதானே :)

      ஒண்ணு நல்லதா :)

      செத்தாலும் ,பைசாவைக் கறக்காம விட மாட்டாங்களே :)

      Delete
  8. ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கிறோம் என்பது
    மனிதருக்கு மட்டுமன்றி
    இறைவனுக்கும் இசைகிறதா?
    அதனை
    முதலாம் நகைச்சுவையில
    குத்திக் காட்டிறியளே!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக் காட்டுகிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நெற்றி டைட்டிலையும் தானே :)

      Delete