17 December 2015

'கை கழுவுபவர்கள் ' ந டி கை கள் மட்டும்தானா :)

 அரிசி வகைக்குதானே பெயர் உண்டு  :)                       

                  ''கடையிலே இருக்கிற அரிசிகளை எல்லாம் எதுக்கு ரெண்டு மணி நேரமா , ஜூம் லென்சினால்  பார்த்து கிட்டே இருக்கீங்க ?''

                         ''எனக்குரிய  அரிசியில் என் பெயர் எழுதியிருக்கும்னு சொன்னாங்க ,அதான் !''

'கை கழுவுபவர்கள் ' நடிகைகள் மட்டும்தானா :)                             

            ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான்  பொருத்தம்னு ஏன் சொல்றே ?''

                      ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின '
அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...:)
               ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
              ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''


திட்டம் இட்டு செய்யும் போதே இப்படின்னா ....

          ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
                      ''ரவுடியை  தப்பவிட்டு சுடச்  சொன்னாக்கூட ,ஆடு மாடுதான் சாகிறதாம் !''
 காலத்திற்கு ஏற்ற கோலம்:)

  1. இளைஞர்களின்  இதய ஸ்வரம் 
  2. 'லப் டப் ''லப் டப் ' என்பது மாறி 
  3. 'லேப்டாப் ''லேப்டாப் 'என்றே துடிக்கிறது !

27 comments:

  1. வணக்கம் ஜி !

    வேலைக்காரியின் அடையாளத்தை சொல்லி இருக்கலாம் எதுக்கு அங்க அடையாளம் சொன்னீங்க பாஸ் அவ்வவ்

    அத்தனையும் அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. மனதில் ஆழமாய் படிந்த அடையாளத்தை சொல்லி மாட்டிக்கிட்டாரே:)

      Delete
    2. மாட்டிக்கிட்டாரா இல்ல மாட்டிக்கிட்டீங்களா?

      Delete
    3. வேலைக்காரி இருந்தால் அல்லவா ,நான் மாட்டிக்குவேன் :)

      Delete
  2. வாய்க்கரிசி வாய்க்க அவ்வளவு அவசரமா...?

    அந்த நடிகை ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா...?’ பாட்ட பாடுனப்பவே சந்தேகப்பட்டேன்...! சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு...விரைவில் வெள்ளி விழா காண வாழ்த்துகள்...!

    மனைவிட்ட சாட்சாங்கமா...அங்கப் பிரதட்சணை செய்துவிட வேண்டியதுதான்.,..!

    அவரு என் ‘கவுண்டர்’தான்... ஆனா அவரு ‘நான் வெஜ்’ பிரியரு...அதான் ஆடு மாட சுட்டுத்திங்கணுமுன்னு நெனக்கிறாரு... தப்பா நெனக்காதிங்க... அடுத்த தடவை தப்பவிடமாட்டாரு...!

    இப்ப அதுவும் மாறி இதயம் ‘டேப் லட்... டேப் லட்...’ன்னுதான் அடிக்கிதாம்...!

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வாய்க்கரிசியிலும்கூட பெயர் இருக்க வாய்ப்பில்லையே :)

      ஏழு கல்யாணம் வரை ஓ கே,இனிமேல் டைவர்ஸ் செய்தால் ஏழரைதான் ஆகும் போலிருக்கே :)

      செய்து விட்டால் தப்பு சரியாகிடுமா :)

      அடுத்த தடவை மான்கள் செத்து விழுமா :)

      விரைவில் லைபை லைபை அடிக்கப் போவுதே :)

      Delete
  3. Replies
    1. அரிசியில் உள்ள பெயர் உங்களுக்குத் தெரியுதா :)

      Delete
  4. அவங்க பேர் இல்லைன்னா வேறு யார் பேர் அந்த அரிசியில் எழுதியிருக்குன்னும் பார்த்து சொல்லச் சொல்லுங்க பாஸ்!

    நடிகை -------------- யைத்தானே சொல்கிறீர்கள்!

    ஓ.... வில் அங்கம் ஆயிடுச்சா!

    அவர் பிடிச்சதே ஆடுமாடுதானோ என்னவோ!

    காலத்துக்கேற்ற துடிப்புதான்!

    ReplyDelete
    Replies
    1. குப்பண்ணா பேமிலி அரிசின்னு எழுதி இருக்கும்னு நினைக்கிறேன் :)

      அதெப்படி சரியா கண்டு பிடிச்சீங்க :)

      அப்படித்தான் தோணுது :)

      பைசா கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவரின் திறமை அப்படித்தானே இருக்கும் :)

      இளமைத் துடிப்பு அப்படித்தான் இருக்கும் :)

      Delete
  5. 01. இதென்ன புதுக்கூத்து ?
    02. இது நல்ல பொருத்தம்
    03. பய உண்மையை உளறிட்டான்
    04. இவனை கறிக்கடைக்கு அனுபனும்... ஜி
    05. காலச்சூழல்

    ReplyDelete
    Replies
    1. இப்படி எழுதி இருக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா :)

      கழுவி ஊத்துறதிலேயும் பொருத்தம் :)

      எத்தனை நாள் மறைக்க முடியும் :)

      வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா போடவாவது தெரியுமா :)

      சிலருக்கு காலக்கிரகமா மாறிட்டு வருதே :)

      Delete
  6. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,கொஞ்ச நாளா காணாமேன்னு காத்திருந்தேன் :)

      Delete
  7. Replies
    1. 'லேப்டாப் 'பும் தானே :)

      Delete
  8. கை கழுவுபவர்கள் ' நடிகைகள் மட்டுமல்ல இல்லிங்கோ......

    ReplyDelete
    Replies
    1. பட்டியலை வாசியுங்கோ :)

      Delete
  9. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் ஜி த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அரிசியில் உள்ள உங்க பெயரைத்தானே :)

      Delete
  10. ஹேண்ட் வாஷ் லிக்விட் விளம்பரத்தை தானே :)

    ReplyDelete
  11. இளைஞர்களின் இதய சுவரம் லேப் "டாப்...."

    அனைத்தும் ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்கள் விருப்பத்தில் டாப் அதுதானே :)

      Delete
  12. Replies
    1. இதயமும் ,காலத்திற்கு ஏற்ற கோலம் போட்டதை ரசீத்தீர்களா :):)

      Delete
  13. கைகழுவிற, கைநழுவிற
    ஆளுகளைப் பற்றி
    அறிய முடிகிறதே
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. இது வாழ்க்கையில் அறிய வேண்டிய விஷயம் தானே :)

      Delete