ஒரு பானைச் சோறுக்கு ....:)
''என்ன சொல்றீங்க ,நாடு உருப்படும் போலத் தெரியலையா ?''
''நம்மாளுங்க காணாம போனவங்களைத் தேடுற மாதிரி தெரியலே !''
(2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)
புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)
''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''
மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !
'' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே , டாக்டருக்கு போன் பண்ணி வரச் சொல்லிட்டியா ?''
''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''
அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய் நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !
''என்ன சொல்றீங்க ,நாடு உருப்படும் போலத் தெரியலையா ?''
''நம்மாளுங்க காணாம போனவங்களைத் தேடுற மாதிரி தெரியலே !''
(2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)
புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)
''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''
மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !
'' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே , டாக்டருக்கு போன் பண்ணி வரச் சொல்லிட்டியா ?''
''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''
அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய் நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !
|
|
Tweet |
ஜாக்கெட் ஜோக்கையும், கடைசி உண்மையையும் ரசித்தேன்.
ReplyDeleteஜாக்கெட்டை விட உண்மை இனித்ததா :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteபக்கத்து ஊர் டாக்டரை வரச் சொன்ன மருமகளையும்தானே :)
Deleteதேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன்... தேடல்தானே வாழ்க்கை...!
ReplyDelete‘ஏ’ மாற்றம்...!
டாக்டர்... கால் நடையா வந்து சேருவாரு...!
ஆமாம்... நிச்சயம் தந்தை கோழியாத்தான் இருக்கும்... கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! கொந்தளிக்கும் நெஞ்சிலே, கொண்டிருக்கும் அன்பிலே, அக்கறை காட்டினாத் தேவலே...!
த.ம. 3
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் :)
Deleteதாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்தால் கஷ்டம்தான் :)
அதுக்கு முன்னாலே அந்த நாலு பேர் வந்துடுவாங்களே :)
தந்தைக் கோழிக்கு பாசமில்லாமல் போகுமா :)
என் பாக்கெட்டில் இருந்த பணம்
ReplyDeleteஅவ ஜாக்கெட்டில் போனது தான்
சேமிப்பு
சேப்டி லாக்கரில் இருந்தால் நல்லதுதானே :)
Delete’கோழி மிதித்து.....’ -மனதைத் தொட்ட கவிதை!
ReplyDeleteதாய்க்கோழி இல்லை என்றால் குஞ்சை மிதித்தது யாரோ :)
Delete/அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)/
ReplyDeleteதேடினவங்க உருப்பட்ட மாதிரிதான்!
அப்புறம் எப்படி நாடு உருப்படும் :)
Deletetha.ma.7
ReplyDeleteகருத்தை விட உங்கள் வோட்டு பலவற்றைச் சொல்கிறதே :)
Deleteமூன்றும் நன்கு ரசித்தேன் சகோ..
ReplyDeleteநன்றி.
நன்று சகோதரா நேரமிருக்கும் போது
என் தளத்திலும் கருத்திடுங்கள். நன்றி.
https://kovaikkavi.wordpress.com/
ரசித்ததற்கு நன்றி :)
Deleteநானும் ரசிக்க வருகிறேன் !
01. உருப்படா''தூ''
ReplyDelete02. A-மாற்றம்தான்
03. சொந்த பந்தங்களுக்கு சொல்லி விடலாம்
04. உண்மைதான் ஜி
யார் மேலே இந்த தூ :)
Deleteநடமாடும் பீரோவில் இருக்கட்டுமே :)
டாகடர் வருவதற்குள் வந்து விடுவார்கள் :)
தாய் மிதித்தாலும் சுகம்தானா :)
பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனது நல்ல மாற்றம்....
ReplyDeleteதாலி பாக்கியமோ இது :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteஅய்யா ஜம்புலிங்கம் அவர்களுக்கு தந்த பின்னூட்டப் பதில் உங்களுக்கும் பொருந்தும் :)
Deleteரசித்தீர்கள் சரி ,பலரும் ரசிக்க ஒரே ஒரு த ம வாக்களிக்க வேண்டாமா :)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகிறேன் வருகிறேன் தங்களின் ஆயுதப் பூ பறிக்க வருகிறேன் :)
Deleteசிரி சிரி என்று சிரித்தேன்! அருமை!
ReplyDeleteநீங்கள் சிரித்த சத்தம் இங்கே எனக்கும் கேட்டது ,நன்றி :)
Delete