15 July 2016

நாத்திகம் வளர இப்படியும் ஒரு காரணமா :)

              ''என்னங்க ,கல்யாணமான ஒரே மாசத்தில் நாத்திகனா  மாறி ட்டீங்களே .ஏன் ?''
             ''அறிவான மனைவி வேணும்னு வேண்டிகிட்டிருந்தேன் ,அது பலிக்கலையே !''

புருசன் மேல் இவ்வளவு நம்பிக்கைக் கூடாது :)
             ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர்  கத்திகிட்டே இருக்காரே , அவர்கூட  எப்படி வாழ்ந்து கிட்டிருக்கே ?''
             ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற  நம்பிக்கையிலேதான் !''
வேலைக்காரி வேணும் !
           ''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''
            ''வேலைக்காரி  வராத நாளில்  இருந்து !''
            ''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
            ''வேற வேலைக்காரியைத் தேட வேண்டியதுதான் !''

உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !
     இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
     உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ                      தெரியவில்லை ...
     என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

22 comments:

  1. கல்யாணமான ஒரே மாசத்தில் நாத்திகனா மாறிவிட்ட காரணம் :) உட்பட எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. பதிவில் நாயும் ,பூனையும் இருக்க முதலில் வந்த வேகநரிக்கு நன்றி :)

      Delete
  2. Replies
    1. நான் நாத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை ..பாடலும் அருமைதானே:)

      Delete
  3. பரவாயில்லையே... அறிவான மனைவி ஒரே மாசத்தில்... பகுத்தறிவானவராக மாற்றி விட்டாரே...!

    அது எது கத்துனாலும் எனக்குத்தான் காது கேக்காதில்ல...!

    வேலைக்காரியோட வீட்டுக்காரர் இப்ப எங்க வீட்டுக்கு வந்திட்டார்... எனக்கு ஒரு வழியச் சொல்லுங்கன்னு கேக்கிறார்...! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...!

    கண்ணுக்குள் Gun-னை வைத்து என்னை கொள்ளாதே...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. பகுத்தறிவு ,அவள் தந்தது அல்ல ,நொந்ததால் வந்தது:)

      எப்படி வந்தது இந்த சக்தி :)

      இதில் யோசிக்க என்னாயிருக்கு :)

      gunனே மிரட்டல் ,சுட்டால் என்னாகுமோ :)

      Delete
  4. 01. அப்படினா... நிறைய பேர் நாத்திகனாகணுமே.....
    02. நம்பிக்கைதான் வாழ்க்கை
    03. வேற வழி ?
    04. அம்பூட்டு அழகியா ?

    ReplyDelete
    Replies
    1. வேண்டிக்கிட்டு ஏமாறாம இருப்பாங்க :)
      அதுவும் இது பாரம்பரிய நம்பிக்கையாச்சே :)
      செத்தாண்டா சேகர்ன்னு மறந்துட வேண்டியதுதானா :)
      பார்க்கணும்னு தோணுதா :)

      Delete
  5. வீட்டுக்காரரை விட வேலைக்காரி முக்கியம் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அல்லவா என்று என்னிடம் கேட்டால் எப்படி :)

      Delete
  6. நாத்திகம் வளர இது ஒரு காரணமா ...இருக்காது...

    ReplyDelete
    Replies
    1. அம்மாவை சோதிக்கும் அளவுக்கு அய்யாவுக்கு அறிவில்லைன்னு நினைக்கிறீங்களா :)

      Delete
  7. அனைத்தும் அருமை!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி தளத்தில் எம் எஸ் வியை ரசித்த கையோடு இங்கே வந்து ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  8. Replies
    1. நாத்திகனைத் தானே :)

      Delete
  9. Replies
    1. புருசன் மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்கலாமா ,தப்புதானே ஜி :)

      Delete
  10. எல்லாம் ரசித்தோம் ....விழுந்ததை ரொம்பவே ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. விழுவது என்பது யாருக்கும் நகைப்புக்கு உரியதுதானே :)

      Delete
  11. Replies
    1. வேண்டுதல் பலிக்கலைன்னா நாத்திகன் ஆவானா ,மாட்டானா :)

      Delete