13 July 2016

இதுதான் ஜோடிப் பொருத்தமா :)

தபாலில் சாம்பல் சேவைத் தொடங்கலாமே :)         
                 ''தபால் நிலையங்களில் கங்கைத் தீர்த்தம் விற்பது புனிதமான காரியம் தானே ?''
              ''இன்னொரு புனிதமான காரியத்தையும் செய்யலாம் ...கங்கைக் கரைப் பிணங்களின் சாம்பல் , புனிதம் என்று அகோரிகள் உடம்பு முழுவதும் பூசிக் கொள்கிறார்களே,அதையும் தபாலில்  விற்கலாம்  !''
          (செய்தி ...இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்த விற்பனை துவக்கப் பட்டு விட்டது !)
மணப்பெண் இவள் என்றால் மணப்பவன் எவன் :)
        ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கீயா ?''
        '' உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு நீங்கதானே  சொல்லி இருந்தீங்க !''

 காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி ,காக்காவுக்கு புரியுமா ? 
         ''காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு  தெரியாது போலிருக்கா  ,ஏன் ?'' 
          ''அது இதுவரை பொன் குஞ்சை அடகு வைத்ததா தெரியலையே  !''

கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !
       ''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000 ரூபாய் கடன் கேட்கிறே ?''
       ''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் அதிலும்...
செருப்பிலேகூட வலது ,இடது வேறுபாடு இருந்தால் தான்  ஜோடிப்பொருத்தம் ..
மனிதரில் மட்டும் ஆணுடன்  ஆணும் ,பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்ன பொருத்தம் ?

16 comments:

  1. அடக்கமான பெண் - :) நல்ல பதில்!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பேயும் சொல்லுமோ பஞ்ச் டயலாக் :)

      Delete
  2. ரசித்தேன் அனைத்தையும் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான ஜோடிப் பொருத்தம் சரியில்லைதானே :)

      Delete
  3. Replies
    1. சாம்பலை விற்கலாம் தானே :)

      Delete
  4. Replies
    1. நேரம் கிடைக்கும்போது கருத்தும் கூறுங்கள் சகோதரரே :)

      Delete
  5. கங்கை கரை மன்னனடி... கங்கைத் தீர்த்தம் விற்றானடி... அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... அஞ்சல நிலையம் அஞ்சலி...!

    ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ இதுதானோ...?!

    ‘பொன் மலர் நாற்றம் உடைத்து...’ பழமொழி தெரியுமோ...?!

    சரி... பரவாயில்லை... ஆயிரம் இல்லைன்னா... இருக்கிறதக் கொடுங்க...!

    என்ன பொருத்தம் இந்த பொருத்தம்...? பொருந்தாக் காமம் இதுதானோ...?

    த.ம. 5


    ReplyDelete
    Replies
    1. அதை தீர்த்தம் என்றே நினைத்தேன் நேரில் பார்க்கும் வரை ..ஒரே நாற்றம் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
      ஆனாலும் இவ்வளவு அடக்கமான பொண்ணு வேண்டாமே :)
      நீங்கள் சொன்ன பின்தான் தெரிகிறது :)
      செல்லாத எட்டணா என்றாலுமா :)
      இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் :)

      Delete
  6. 1)அந்த ஜடைக்கும் இந்த ஜடைக்கும் பொருத்தம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு!..
    ஆனா முக்கியமானதைக் காணோமே!?..

    2)அடக்கத்துக்கு அடக்கம் அடங்காமலா போயிடும்?..

    3)போன வாரம் மார்வாடிக் கடையில ரெண்டு காக்காவைப் பார்த்தேனே!..

    4)கிட்னிய எடுத்துக்கிட்டு சட்னியைக் கொடுக்காம இருந்தா சரி!..

    5)!?..

    ReplyDelete
    Replies
    1. முனிவர் வெச்சிருந்தா ஜடாமுடி.முனியம்மா வெச்சிருந்தா ஜடை முடி.முனியம்மாவையே நீ வெச்சிருந்தா கணக்கை முடி!..இது எப்போதோ படித்தது ,நினைவுக்கு வருதே :)

      அது சரி யார் யாரோ அடங்கிப் போனார்களே :)

      ஜன்னலில் வைக்கும் அமாவாசைச்சோற்றைத் தின்ன வந்திருக்கும் :)

      எடுத்ததே உடனே தெரிந்தால் தானே ,எதையாவது கொடுப்பதற்கு :)


      Delete
  7. படிப்பதற்கு ஜோடி பொருத்தமாகத்தான் இருக்கிறது..........

    ReplyDelete
    Replies
    1. பார்க்கத்தான் சகிக்கவில்லையோ:)

      Delete
  8. 01. நியாயமான கோரிக்கை ஜி
    02. நியாயம்தானே...
    03. நியாயமான சந்தேகம்தான் ஜி
    04. நியாயமான பதில்தான்
    05. ஆஹா.....

    ReplyDelete
    Replies
    1. எதைத்தான் விற்பது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது :)
      இருந்தாலும் இவ்வளவு அடக்கம் கூடாது :)
      சேட்டிடம் கெட்டு விடலாமா :)
      நேரில் வந்து டின் கட்டி இருப்பார்களோ :)
      பொருத்தம் சரிதானா :)

      Delete