1 July 2016

அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் கேள்வி :)

தலைவர் confuse ஆயிட்டாரே :)            
            ''சீன ஞானி கம்ப்பூசியஸ்  என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா .....!''
            ''அவர் சொன்னது இருக்கட்டும் தலைவரே அவர்   கம்ப்பூசியஸ்  இல்லே ...கன்பூஷியஸ் !''

இப்படி'இக்கு 'வைக்கும் காரணம் என்ன ?
        ''தலைவர் , முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
        ''வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ,இதில் உள்ளவர்கள்  கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் கேள்வி !
வட இந்திய டூர் - பாகம் 3
இப்ப நாம பார்க்கப் போவது ..ஹிந்துக்களுக்கு காசி எப்படி புனிதமான இடமோ ,புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு புனிதமான இடமாக கருதப்படும்  சாரநாத் மடத்தைதான் !இந்த இடம் புத்த பெருமானின் காலடி பட்ட இடம் என்கிறார்கள் !
தர்மசக்கரம் அழகாக பொருத்தப் பட்டிருக்கும் வாசலைத் தாண்டி உள்ளே போனால் ,இடது புறம் கம்பீரமாக தெரிவது இந்த ஸ்தூபி ...

 28 அடி அகலமும்  33 அடி உயரமும் கொண்ட இந்த ஸ்தூபி   மன்னர் அசோகர் கட்டியதாம் ,பாதி உயரம் வரை உடைகல்லாலும்,அதற்குமேல் சுட்ட செங்கற்களால் கட்டப் பட்டு பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது .இதன் உள்ளே ஹால் போன்று அமைப்பு எதுவும் இல்லை ,இவ்வளவு 'சாலிட்'டாகஇருக்கும் இதன் உள்ளே என்னதான் இருக்கும் என்று ,தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் மேலிருந்து நூறு அடி ஆழம் வரை ஆராய்ந்ததில் சில எலும்புகளும் ,பூஜைக்குரிய பொருட்களும் இருந்ததாம் !
இதைப் பார்த்துவிட்டு பின்னால் திரும்பினால் ,அழகாய் காட்சி தருகிறது புத்தர் ஆலயம் ....

இதன் உள்ளே நுழைகிறோம் ..அன்பே உருவாய் காட்சி தருகிறார் புத்தபிரான் !

புத்தரின்  வதனத்தில் சிறிய புன்னகை எனக்கு தெரிந்தது ...விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !
இதற்கு பின்னால் புத்த பிட்சுகளுக்கான மடாலயம் ,டிரைனிங் சென்டர் சிங்கள பிட்சுக்களால்  நடத்தப் படுவதாக வழிகாட்டி கூறினார் !
  பசுமையாக காட்சி தரும் இந்த வளாகத்தின் வலது புறம் ..நீண்டு உயர்ந்தொரு அரச மரம் .இந்த அரச மரத்தின் சிறப்பு ,புத்தர் ஞானம் அடைந்த கயாவில் இருக்கும் போதி மரத்தின் கிளை இது ,இதுவல்லவோ உண்மையான 'கிளை '?
அந்த போதி மரத்தின் இலையைப் பறித்து, என் இல்லாள் கண்ணில் ஒற்றிக்கொண்ட போது,அங்கிருக்கும் பணியாளர் வேகமாய் ஓடி வந்து ,இதை பறிக்ககூடாது என்று சத்தமிட்டார்.ஒரு இலையைகூட  பறிக்க விடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் ...இந்த வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கள புத்த பிட்சுக்கள்தான் ....இலங்கையில் சிங்கள அரசால்  தமிழ் மக்கள்  கொத்து கொத்தாக வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !
                                                                                                      பயணம் தொடரும் ....

*********************************************************************************
இந்தியா ...மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் !.
           ''இந்திரன்கிற பேரைவிட இந்தியன்கிற பெயர்தான் எனக்கு பொருத்தம்னு ஏன்  சொல்றே ?''
            ''எல்லாப் பக்கமும் கடனை வாங்கி இருக்கீயே !''

31 comments:

  1. ‘கலங்காதிரு மனமே நீ... கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே...’ன்னு தலைவரே...! நீங்க பாட்டுக்குப் பாட்டக் கேட்டுக்கிட்டு இருக்கீங்க... ஒரே கன்பியுசனா இருக்கு...!

    ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!’ தலைகீழா விழுந்து கிடக்கிறேன்... என்னை மாத்திடாதிங்க... கொஞ்சம் கருணை காட்டுங்க... இதுக்கு மேலே குழியத் தோண்டி விழுந்தாத்தான்...!

    ‘வதனமோ சந்திர பிம்பமோ...’ ‘புன்னகை மன்னன்...’ ‘புத்தம் சரணம் கச்சாமி...’ ஆசையே துன்பத்திற்குக் காரணம்...!

    இந்திரன் கெட்டதும்... இந்தியா கெட்டதும்... இதனாலே...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. அந்த தினம் ஆயுசுக்குள் வருமா :)

      இப்படி சொல்லித்தான் ஏமாத்துறாங்க :)

      தத்துவம் எல்லாம் சரிதான் ...:)

      கேட்டதும் கிடைச்சா கெட்டு போகாமல் இருக்குமா :)

      Delete
  2. காப்பு சீனோ என்று சொல்லாமல் போனாரே...!!

    :)))))))

    ரசித்தேன்.

    ஹா..... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. காப்பி ஷாப் என்று கூட சொல்லியிருக்கலாம் :)

      Delete
  3. ஹஹஹஹஹ் கன்ப்யூசியஸ் ஒரே குயப்பமா கீதே ஜி ஹஹஹஹஹ

    மூணுபக்கம் கடல் நாலு பக்கம் கடன் ஹஹஹஹஹ்

    ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. பலரும் கன்ப்யூசியஸ்தானஎன்பதில் சந்தேகமில்லை :)

      கடன் ,கடல் இருப்பது உண்மைதானே :)

      Delete
  4. இந்தியாவில் இருக்கும் சாரநாத் மடத்தை
    சிங்கள பிட்சுகள் நிருவகிக்கிறார்களா
    வேதனையாக அல்லவா இருக்கிறது
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவர் அப்படித்தான் கூறினார் !

      Delete
  5. 01. நானும் கன் - பி - யூஸ் ஆகிட்டேன்
    02. தொட்டில் பழக்கம்
    03. டூர் விபரங்கள் நன்று
    04. பொருத்தமே....

    ReplyDelete
    Replies
    1. என் நோக்கம் நிறைவேறிவிட்டது :)
      மேலோகம் போனாலும் விடாதா :)
      படங்கள் :)
      யாருக்கு கிடைக்கும் இந்த பொருத்தம் :)

      Delete
  6. //புத்தரின் வதனத்தில் சிறிய புன்னகை எனக்கு தெரிந்தது ...விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !//

    மனதைத் தொட்ட வரிகள்.
    நன்றி பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. புத்தரின் போதனைகளில் நான் முக்கியமாய் நினைப்பது ,விக்கிரக ஆராதனை கூடாது என்பதுதான் !அதை கடைபிடிக்காத அவரது சீடர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும் :)

      Delete
  7. Replies
    1. நாலு பக்கம் கடனை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. கொடுத்து வைத்தவர் நீங்கள்...அப்படியே உலகஅதிசியங்களையும் கண்டு வந்தீர்கள் என்றால்... மற்றவர்களை விட எனக்கு புன்னியமாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. என் பிள்ளைங்களுக்கு உள்ளூர் அதிசயங்களைக் காட்டுகிறேன் ,அவர்கள், உலக அதிசயங்களை எனக்கு காணச் செய்வார்கள் என்று நம்புகிறேன் :)

      Delete
  9. புத்தம் சரணம் கச்சாமி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்பவர்கள் தமிழர் படுகொலையை கண்டிக்காமல் இருந்தார்களே ,என்ன நியாயம் ?

      Delete
  10. சிலருக்குசில வார்த்தைகள் சரியாக உச்சரிக்க வராது
    'வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ,இதில் உள்ளவர்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''/ அம்மாவின் வாரிசோ ?
    சாரநாத் சென்றதில்லை. தகவல்களுக்கு நன்றி
    நானும் ஃபேஸ்புக்கில் இதுபோல் எழுதி இருந்தேன்


    ReplyDelete
    Replies
    1. சிங்ஹாவை சின்கா,சின்சான்னு சொல்லுற மாதிரியா :)
      சொல்லாமல் செய்பவராச்சே அம்மா :)
      ஜாலியா ஒரு முறை சென்று பாருங்கள் ,ரம்மியமான இடம் :)
      ஃ பேஸ்புக் பக்கம்அதிகம் நான் செல்வதில்லை :)

      Delete
  11. புத்தகயா சென்றோம், போதி மரம் பார்த்தோம். சாரநாத் செல்லும் ஆசை உள்ளது. அந்நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களது பதிவு அந்த ஆசையைத் தூண்டிவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் உங்களின் எண்ணம் நிறைவேறும்னு நம்புகிறேன் ,நீங்கள்தான் புத்தர் அடிச்சுவட்டை தேடி தேடி செல்பவராச்சே :)
      உங்கள மூலமாய் நான் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை ,முனைவரான உங்களுக்கு புரியுமென நம்புகிறேன் :)

      Delete
  12. இந்திரன் - இந்தியன் - வேதனை... ஒவ்வொரு இந்தியன் மேலும் கோடிக்கணக்கில் கடன்!

    ReplyDelete
    Replies
    1. கடனை நம்மிடம் கட்டச் சொல்லாமல் போனால் சரி :)

      Delete
  13. உங்க இந்திய டூர் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. இது பழைய டூர் பதிவு ,சமீபத்திய டூரைப் பற்றி எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை :)

      Delete
  14. வணக்கம்
    ஜி
    அறியாத விடங்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பயணங்கள்தான் எனக்கும் அறியாத விசயங்களை அறியத் தந்தது :)

      Delete
  15. இரண்டாவது ஜோக்கில் நகைச்சுவையாக குர்ப்பிடாலும் வேட்பாளர் மாறுதல்களை இந்த தேர்தலில் பார்த்தோமே.
    சாரநாத் ஸ்தூபி பற்றி உங்கள் பாணியில் சொன்னது நன்று

    ReplyDelete
    Replies
    1. சீட் கிடைக்காதவர்கள்தலைவரின் இதயத்தில் மட்டுமே இருப்பார்கள் :)
      கில்லர்ஜி பாணியில் ...பயணங்கள் செல்லத்தான் நினைக்கிறேன் ,என் பாணியில் சொல்லத்தான் நினைக்கிறேன் :)

      Delete