விளக்கமாறுக்கு பட்டுக் குஞ்சம் :)
''கீ ஹோல் ஆபரேஷன் எக்ஸ்பெர்ட் ன்னு அந்த கொள்ளையனை ஏன் சொல்றாங்க ?''
சந்தேகப் பட்டது சரிதானே :)
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''
உலகப் புகழ் அழகியை தெரியாமல் போகுமா :)
''நம்ம சச்சினை யாருன்னே தெரியாது என்கிறார் ஷரபோவா ,ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
''உலகப் புகழ் மாடலை தெரியாதுன்னு சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''
அழகான பெண் பெயரை சுருக்கலாமா ?
''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் எழுதிய ஜோக்கே வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர் பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''
லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?
எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !
''கீ ஹோல் ஆபரேஷன் எக்ஸ்பெர்ட் ன்னு அந்த கொள்ளையனை ஏன் சொல்றாங்க ?''
''சாவியே இல்லாமே எந்த வீட்டுக் கதவையும் திறந்து விடுவதில் கில்லாடியாம் !''
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''
உலகப் புகழ் அழகியை தெரியாமல் போகுமா :)
''நம்ம சச்சினை யாருன்னே தெரியாது என்கிறார் ஷரபோவா ,ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
''உலகப் புகழ் மாடலை தெரியாதுன்னு சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''
''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் எழுதிய ஜோக்கே வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர் பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''
லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?
எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !
|
|
Tweet |
அனைத்தையும் ரசித்தேன் ஜி!
ReplyDeleteகரடிப்பிரியனை உங்களுக்கு தெரியுமா :)
Deleteபூட்டே இல்லாத இதயக்கதவையா...?!
ReplyDelete‘பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்...!’ அவனா இவன்...?!
சச்சின் ஆம்பளைன்னு நிருபிச்சிட்டாரு...!
அதுக்கு ஏன் கரடியா கத்துறீங்க...?!
உகரம் குறுகியும் குறுகாமலும் வந்து விட்டு... திரு திருன்னு விழித்தது...!
த.ம. 2
காதல் கொள்ளையனாய் இருப்பானோ :)
Deleteஅப்படி ஒருவனல்ல ,நாட்டிலே பல பேர் இருக்கிறார்களே :)
இனிமேல் ,அவர் ரசிகர்கள் கவலைப் பட என்ன இருக்கு :)
அப்படியாவது நாலு பேர் காதுலே விழட்டும்னுதான் :)
என்னை மாதிரியா :)
கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே....//
ReplyDeleteமனதில் பதிகிற பேர். அவர் தொடர்ந்து எழுதியிருக்கலாம்!
நீங்க எழுதிய காலத்தில்தான் அவரும் குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்தார் !உங்களைப் போலவே அவரும் தற்போது எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார் :)
Deleteஅனைத்தும் அருமை. பெயர்ச்சுருக்க உத்தி மிக அருமை.
ReplyDeleteஒருவரே நிறைய எழுதினால் இதழின் ஆசிரியர் இப்படி பெயரைச் சுருக்குவது உண்மை :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteத.ம. +1
நீங்க மட்டுமா ,சச்சின் கூடத்தான் :)
Delete01. திறமைசாலிதான்
ReplyDelete02. பொருந்தி வருதே...
03. அதானே...
04. கோபம் வரத்தான் செய்யும்
05. எனக்கும் தெரியாது
டாக்டருக்கு நிகரா தொழில்லே கெட்டிக்காரன் :)
Deleteவிளையும் பயிர் :)
மறக்க முடியுமா மரியாவை :)
அதுவும் ஜெயா இருந்த இடத்தில் கரடியா :)
யாருக்கும் தெரியாதே :)
அட.. ஆம்பிளைக்கு தெரியாததை தெரியும்ன்னு சொல்றதுக்கு ஒரு கெத்து இருக்கா...???
ReplyDeleteஎதையும் தெரியாதுன்னு சொல்றவங்க ,கொஞ்ச பேர்தானே :)
Deleteதமிழில் லகர இலக்கணம்
ReplyDeleteஅருமையான பதிவு
இலக்கணம் தெரிந்தவன் சம்பாதித்தால் வரவேற்கலாம்தானே :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteP.S-உலகப் புகழ் அழகி என்று ஸ்ரீதேவியை தான் சொல்லியிருப்பீர்கள் என்று முதலில் நினைத்தேன் :)
ஸ்ரீ தேவியா ?நம்ம ரேஞ்ச் அதுக்கும் மேலே :)
Deleteகதவு பூட்டி இருக்காதோ
ReplyDeleteபடிக்கும் போது சைபர் எடுத்ததனால்தான் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர்
எனக்கு ஷரபோவாவையும் தெரியாது சச்சினையும் தெரியாது பகவான் ஜி தான் தெரியும்
பகவான் ஜி யின் பெயரை பலரும் ஜி என்று சுருக்குவதில்லையா
தமிழ் இலக்கணம் தெரிந்திருந்தால் கவிதை அல்லவா எழுதிக் கொண்டிருப்பீர்.
திறந்து இருக்கும் கதவைத் திறந்தால் ,அவரை கில்லாடி என்று சொல்ல முடியுமா :)
Deleteஎப்படியோ முன்னுக்கு வந்தால் சரி :)
உங்க வயசுக்கு தெரியாது என்று சொல்லலாமா :)
அது எனக்கு நானே மரியாதையுடன் விளித்துக் கொள்வது :)
இலக்கணம் தெரிந்து கவிதை எழுதுபவர்கள் எத்தனைப் பேர் :)
கரடிக்குளத்தார் முகநூலில் உலாவுகிறார் முடிந்தால் பிடித்துப்பாருங்கள்! ஜோக்குகள் அருமை!
ReplyDeleteகுளத்தில் ,சாரி ,முகநூளில் அவரைத் தேடித் பார்க்கிறேன் :)
Delete